சிறந்த திக்ர்: ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ்

நாளின் எந்த நேரத்திலும் கூறக்கூடிய, பெரும் நன்மையுள்ள சுருக்கமான திக்ர்கள்.

1 ஒரு முறை

لَا إِلَهَ إِلَّا اللَّهُ

பொருளும் ஆதாரமும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதைத் தான் கேட்டதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'திக்ரில் சிறந்தது லாஇலாஹ இல்லல்லாஹ் (لا إله إلا الله) என்பதாகும். துஆவில் சிறந்தது அல்ஹம்து லில்லாஹ் ( الحمد لله) என்பதாகும்.

இதனை இமாம்களான திர்மிதி, குப்ரா எனும் நூலில் நஸாஈ, இப்னுமாஜா ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள் தரம்: நம்பகமானது (ஹஸன்)

விளக்கம்

இந்த ஹதீஸில் எமக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் திக்ரில் மிகவும் சிறப்புக்குரியது :லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தை எனக் குறிப்பிடுகிறார்கள். இதன் கருத்து 'உண்மையாக வணங்கத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாறும் இல்லை என்பதாகும். மேலும் பிரார்த்தனையில் மிகவும் சிறப்புக்குரியது அல்ஹம்துலில்லாஹ் (புகழனைத்தும் அல்லாஹ்வுக்குரியது) என்பதாகவும் கூறுகிறார்கள். இதன் கருத்து : அருள்பாலிப்பவன் அல்லாஹ் மாத்திரமே என்பதை ஏற்றுக்கொள்வதும், அவனே அழகிய பரிபூரணமான வர்ணனைக்கு உரித்தானவன் என்பதுமாகும்.

பயன்கள்

  • ஏகத்துவ வார்த்தையான 'லாஇலாஹ இல்லல்லாஹ'; என்பதை அதிகம் கூறுமாறும், 'அல்ஹம்துலில்லாஹ' என்ற வார்த்தையால் அதிகம் பிரார்த்திக்குமாறும் ஆர்வமூட்டப்பட்டிருத்தல்.

HadeethEnc.com இல் படிக்கவும்

2 ஒரு முறை

سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ

பொருளும் ஆதாரமும்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸமுரா இப்னு ஜுன்துப் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'ஸுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்), 'அல்ஹம்து லில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே), 'லாஇலாஹ இல்லல்லாஹு' (உண்மையாக வணங்கப்படத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை), 'அல்லாஹ் அக்பர்' (அல்லாஹ் மிகப்பெரியவன்) ஆகிய நான்கு வாசகங்களும் அல்லாஹ்விடம் மிக விருப்பத்திற்கு உரியவைகளாகும். இதில் எதனைக் கொண்டு நீங்கள் துவங்கினாலும் அதனால் உங்களுக்குப் எதுவித குற்றமுல்லை'.

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் தரம்: சரியானது

விளக்கம்

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வார்த்தைகள் நான்கு என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். அவை பின்வருமாறு :

முதலாவது : ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்) என்பது அல்லாஹ் அனைத்து வகையான குறைகளைவிட்டும் தூயவன் என்பதைக் குறிக்கும்

இரண்டாவது : அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே): என்பது நேசிக்கவும், போற்றப்படவும் தகுதிவாய்ந்த பரிபூரணமான அல்லாஹ்வின் பண்பை இது குறிக்கிறது.

மூன்றாவது : லாஇலாஹ இல்லல்லாஹ் : அதாவது உண்மையாக வணங்கப்படத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பது இதன் கருத்தாகும்.

நான்காவது: அல்லாஹு அக்பர் அதாவது (அல்லாஹ் மிகப்பெரியவன்) எல்லாவற்றையும் விடவும் கண்ணியமும் உயர்வும் தனித்துவமுமிக்கவன் என்பது இதன் கருத்தாகும்.

இந்த வார்த்தைகளின் சிறப்பிற்காககவும், அதன் நன்மைகளையும் அடையும் பொருட்டும் அவற்றை வரிசையாக சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

பயன்கள்

  • இந்த வார்த்தைகளில் எதனைக் கொண்டு ஆரம்பித்தாலும் அதில் குற்றமேதுமில்லை என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் இந்த மார்க்கத்தின் இலகு தன்மை தெளிவுபடுத்தப்பட்டிருத்தல்.

HadeethEnc.com இல் படிக்கவும்

3 ஒரு முறை

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ

பொருளும் ஆதாரமும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து-அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'இரண்டு வார்த்தைகள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளனுக்கு மிகவும் பிரியத்திற்குரியவையுமாகும். அவை : 'ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்), 'ஸுப்ஹானல்லாஹில் அழீம்' (கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)'.

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர் தரம்: சரியானது

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு மனிதன் எந்த சிரமுமின்றி எல்லா வேளைகளிளும் இலகுவாக கூறக்கூடிய இரண்டு வார்த்தைகள் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். அவை மீஸானில் வைக்கப்படும் நன்மைகளில் மிகவும் கணதியானதாகவும், அருளாளனான எங்கள் இரட்சகனுக்கு அதி விருப்பத்திற்குரியதாகவும் உள்ளது. அவ்வார்த்தைகள் இரண்டும் பின்வருமாறு :

'ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்), 'ஸுப்ஹானல்லாஹில் அழீம்' (கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)'. இவை இரண்டும் அல்லாஹ்வின் மேன்மை, அவனின் பரிபூரணத்துவம், எல்லாவித குறைகளிலிருந்து நீங்கியிருத்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

பயன்கள்

  • அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தல் அவனைப் புகழ்தல் எனும் இரு விடயங்களையும் ஒன்றிணைத்த மிகப்பெரும் திக்ராக இவை இரண்டும் காணப்படுகின்றமை.
  • அல்லாஹ், சிறிய ஒரு செயலுக்கு மிகப்பெரும் நன்மையை வழங்குவதன் மூலம் தனது அடியார்களுடன் கொண்டுள்ள எல்லையற்ற அவனது கருணையை இது விபரிக்கின்றமை.

HadeethEnc.com இல் படிக்கவும்

4 ஒரு முறை

سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ

பொருளும் ஆதாரமும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாஇலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு

அக்பர்' (அல்லாஹ் தூயவன்; அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று நான் கூறுவதானது, சூரியன் உதயமாகும் இவ்வுலகைவிடவும் எனக்கு மிகவும் விருப்பமானதாகும்.

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் தரம்: சரியானது

விளக்கம்

இந்த மகத்தான வார்த்தைகளினால் அல்லாஹ்வை நினைவுகூர்வது உலகம் அதில் உள்ளவற்றைவிடவும் சிறந்தது என நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள் அந்த வார்த்தைகள் பின்வருமாறு :

"ஸுப்ஹானல்லாஹ்" என்பது: (அல்லாஹ்வை தூய்மையானவன்) என்பது அனைத்துவகையான குறைகளைவிட்டும் அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தலைக் இது குறிக்கிறது.

'அல்ஹம்து லில்லாஹ் என்பது : புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. போற்றி நேசம் கொள்வதற்குரிய நிறைவான பண்புகளின் மூலம் அல்லாஹ்வை பாராட்டி புகழ்தலைக் குறிக்கும்.

'லாஇலாஹ இல்லல்லாஹு' என்ற வார்த்தை உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாறுமில்லை என்பதைக் குறிக்கும்.

"அல்லாஹு அக்பர்" என்பதன் கருத்து அவன் எல்லா அம்சங்களையும் விட போற்றவும் பெருமைப்படுத்தவும் மிகவும் தகுதியானவன்.

பயன்கள்

  • அல்லாஹ்வை திக்ர் செய்ய ஆர்வமூட்டியிருத்தல், திக்ர் செய்வது சூரியன் உதிக்கும் இவ்வுலகை விடவும் அதிக விருப்பத்திற்குரியது.
  • திக்ர் செய்வதினால்; கூலியும், சிறப்பும் கிடைப்பதினால் அதிகம் திக்ர் செய்யுமாறு தூண்டியிருத்தல்.
  • இவ்வுலக இன்பங்கள் சொற்பமானவை, அதன் ஆசைகள் நிலையற்றவை.

HadeethEnc.com இல் படிக்கவும்

5 100 முறை

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

பொருளும் ஆதாரமும்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: 'யார் "ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி" வபிஹம்திஹி' ( பொருள்: அல்லாஹ்வை புகழ்வதோடு அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்) என 100 தடவைகள் கூறுகிறாரோ அவரின் பாவங்கள் கடல் நுரையளவு போல் இருப்பினும் அவை மன்னிக்கப்பட்டு விடும்'.

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர் தரம்: சரியானது

விளக்கம்

யார் தினமும் 'ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' (அல்லாஹ்வை புகழ்வதோடு அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்) என்ற வார்த்தையை –தஸ்பீஹை- கூறுகிறாரோ அவரின் பாவங்கள் கடல் அலையின் போதும் கடல் கொந்தளிக்கும் போதும் எழும் நுரையின் அளவுக்கு அதிகமாக இருந்தாலும் அவை அழிக்கப்பட்டு மன்னிக்கப் பட்டுவிடும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.

பயன்கள்

  • மேற்படி திக்ரைத் நாளொன்றில்; தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ, எவ்வாறு கூறினாலும் அவருக்கான இந்தக் கூலி கிடைக்கும்.
  • தஸ்பீஹ் என்பது : அல்லாஹ்வை அனைத்து வகையான குறைகளைவிட்டும் தூய்மைப் படுத்துவதைக் குறிக்கும். அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே): என்பது நேசித்து ,போற்றப்டுவதற்குரிய பரிபூரண பண்பால் வர்ணிக்கப்படுதல்.
  • இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள 'பாவம் மன்னிக்கப்படுதல்' என்பதன் கருத்து சிறிய பாவங்களைக் குறிக்கிறது. பெரும் பாவங்களுக்கு தவ்பா செய்வது அவசியமாகும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

6 ஒரு முறை

سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ

பொருளும் ஆதாரமும்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : யார், 'ஸுப்ஹானல்லாஹில் அழீம் வபிஹம்திஹீ' (மகத்துவம் மிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன். அவனைப் புகழ்கின்றேன்.) என்று கூறுகின்றாரோ, அவருக்கு சுவனத்தில் ஒரு ஈத்தம்பழ மரம் நட்டப் படும்.

இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார் தரம்: சரியானது

விளக்கம்

இங்கு நபியவர்கள், யார், 'மகத்தான (அதாவது தன்னிலையிலும், பண்புகளிலும், செயற்களிலும் மகத்தானவனாக உள்ள) அல்லாஹ்வைத் துதிக்கின்றேன் (அதாவது தூய்மைப் படுத்துகின்றேன்) மேலும் அவனைப் புகழுகின்றேன் (அதாவது பரிபூரணத்துவப் பண்புகளை இணைத்த நிலையில்)' என்று கூறுகின்றாரோ, அவருக்கு அவர் கூறும் ஒவ்வொரு தடவையும், சுவனபூமியில் ஒரு ஈத்தம்பழ மரம் நட்டப்படும் என்று அறிவிக்கின்றார்கள்.

பயன்கள்

  • அல்லாஹ்வை அதிகம் நினைவுகூற ஆர்வமூட்டல். அல்லாஹ்வைப் புகழ்வதுடன் துதிப்பதும் அதில் ஒன்றாகும்.
  • சுவனம் விசாலனமானது. அல்லாஹ்வின் அருள் மற்றும் பேருபகாரத்தின் காரணமாக, அதில் நடப்படுபவையாக, தஸ்பீஹும் தஹ்மீதும் (அல்லாஹ்வைத் துதிப்பதும், புகழ்வதும்) உள்ளன.
  • இந்த ஹதீஸில் ஏனைய மரங்கள் இன்றி, ஈத்தம்பழ மரம் மாத்திரம் குறிப்பிடப்படக் காரணம், அதன் அதிக பயன்களும், அதன் பழங்கள் சுவையாக இருப்பதுமாகும். அதனாலேயே, அல்லாஹ் ஒரு விசுவாசிக்கும் அவனது ஈமானுக்கும் உதாரணமாக அதனைக் கூறியுள்ளான்.

HadeethEnc.com இல் படிக்கவும்

7 ஒரு முறை

رَضِيتُ بِاللَّهِ رَبَّاً، وَبِالْإِسْلَامِ دِيناً، وَبِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيّاً

பொருளும் ஆதாரமும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: யார் رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ رَسُولًا என்று கூறுகின்றாரோ, அவருக்கு சுவனம் கட்டாயமாகி விடும். (பொருள் : நான் அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை ரஸூலாகவும் பொருந்திக் கொண்டு விட்டேன்.)

இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார் தரம்: சரியானது

விளக்கம்

இங்கு நபியவர்கள் அறிவிப்பதாவது, யார், 'நான் அல்லாஹ்வை ரப்பாகவும் (அதாவது, கடவுளாகவும், பொறுப்பாளனாகவும், ஆட்சியாளனாகவும், தலைவனாகவும், சீர்த்திருத்துபவனாகவும்), இஸ்லாமை (அதாவது, ஏவல், விலக்கல்கள் உட்பட, அதன் அனைத்து சட்டங்களையும்) மார்க்கமாகவும் (அதாவது, சட்டமாக உள்ளத்தால் ஏற்றுக் கட்டுப் பட்டு), முஹம்மத் (ஸல்) அவர்களை ரஸூலாகவும் (நபியாகவும், மேலும் அவர்களுக்கு கொடுத்து அனுப்பப்பட்ட, அவர்கள் எமக்கு எத்திவைத்த அனைத்தையும்) பொருந்திக் கொண்டு விட்டேன் என்று கூறுகின்றாரோ, அவருக்கு சுவனம் கடமையாகி விட்டது.

பயன்கள்

  • இந்த தஆவைக் கூறுவதற்கு ஆர்வமூட்டல், மேலும், அதற்குள்ள கூலியைத் தெளிவுபடுத்தல்.
  • அல்லாஹ்வை ரப்பாகப் பொருந்திக் கொள்வதென்பது, ஓர் அடியான் அவனைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது என்பதைப் பொதிந்துள்ளது.
  • முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும், தூதராகவும் பொருந்திக் கொள்வதென்பது, அவர்களுக்கு வழிப்படுவதையும், அவர்களது ஸுன்னாவுக்குக் கட்டுப்படுவதையும் உள்ளடக்கிக் கொள்ளும்.
  • இஸ்லாமை மார்க்கமாகப் பொருந்திக் கொள்வதென்பது, அல்லாஹ் தனது அடியார்களுக்காக தெரிவு செய்துள்ளதைப் பொருந்திக் கொள்வதாகும்.
  • வேறு சில அறிவிப்புக்களில் வந்துள்ள பிரகாரம், அதானில் ஷஹாதாவுடைய வார்த்தையைக் கேட்கும் போது, இந்த துஆவை ஓதுவது விரும்பத்தக்கதாகும்.
  • வேறு ஒரு ஹதீஸில் இந்த துஆவைக் காலை, மாலையில் ஓதுவது விரும்பத்தக்கது என்றும் வந்துள்ளது.

HadeethEnc.com இல் படிக்கவும்

8 ஒரு முறை

يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

பொருளும் ஆதாரமும்

யா தல் ஜலாலி வல் இக்ராம் (வல்லமையும்கண்ணியமும் மிக்கவனே) என்ற வார்த்தையையைப் பற்றிக் கொள்ளுங்கள்."என நபி (ஸல்)அவர்கள் கூறியாத அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அந்நஸாயி பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார் தரம்: ஸஹீஹானது-சரியானது

விளக்கம்

இந்த ஹதீஸில் ஒரு கட்டளை உள்ளது. அதுதான் (அலில்லு எனும் வார்த்தை. அதன் பொருள் இந்தப் பிரார்த்தனையை பற்றிக்கொள்ளுங்கள் அதிகமாகச் சொல்லுங்கள். அதன் கருத்தாவது எப்போதும் இவ்வார்த்தைகளை உங்களுடையை பிரார்த்தனையில் கூறுவதுடன் உங்களின் நாவுகளிலும் தவழச் செய்யுங்கள். இப்பிரார்த்தனையானது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றை உள்ளடக்கியுள்ளது அல் இஸ்முல் அஃலம் எனும்அல்லாஹ்வின் உயர் நாமத்தை உள்ளடக்கியுள்ளதாக ஒரு கருத்து உள்ளது. காரணம் யாதெனில் அல்லாஹ்வின் அனைத்து ருபூபிய்யத் உலூஹியத் எனும் பண்புகளை இது உள்ளடக்கியுள்ளது என்பதினாலாகும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

9 ஒரு முறை

பொருளும் ஆதாரமும்

என்றும் நிலைத்திருக்கும் நல்லமல்கள்لَا إلَهَ إلَّا اللَّهُ، وَسُبْحَانَ اللَّهِ، وَاَللَّهُ أَكْبَرُ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إلَّا بِاَللَّهِ எனும் வாசகங்களாகும்.

இதனை இப்னு ஹிப்பான் அறிவித்தார் - இந்த ஹதீஸை ஹாகிம் பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அந்நஸாயி பதிவு செய்துள்ளார் தரம்: அதன் ஆதாரங்களின் பிரகாரம் ஸஹீஹானது-சரியானது

விளக்கம்

கீர்த்தியும்,மேண்மையும் பொருந்திய அல்லாஹ்வைத் துதித்தல்,தூய்மைப்படுத்தல்,கண்ணியப்படுத்தல் எனும் கருத்துக்களை இந்த வாசகங்கள்அடக்கி உள்ள படியாலும்,அடியான் அல்லாஹ்வின் நாட்டமின்றி எதனையும் செய்யவும்,கெடுதிகளைத் தடுத்து நிறுத்தவும்,நல்லதை அனுகூலமாக்கிக் கொள்ளவும் சக்தியற்றவனாக இருக்கின்றபடியால் அல்லாஹ்வின் செயல்களின் நிமித்தம் அவனைப் போற்றிப் பாராட்டும் விடயம் இதில் பொதிந்துள்ளபடியாலும் இந்த திக்ரினை இதே வாசகங்களைக் கொண்டு ஓதி வருவதானது சிறப்புக்குரியது என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக விளங்குகின்றது.எனவே இந்த வாசகங்கள் இத்தகைய மகத்தான கருத்துக்களைக் கொண்டிருப்பதுதான் அதன் தாக்கமும்,பயனும் முஃமினான அடியான் மரணித்த பின்னரும் அவனுக்குத் தொடர்ந்தும் கிடைக்கக் காரணமாக அமைகிறது

HadeethEnc.com இல் படிக்கவும்

10 ஒரு முறை

பொருளும் ஆதாரமும்

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூமாலிக் அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : 'சுத்தம் ஈமானின் பாதியாகும். 'الحمد لله' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறுவது மீஸானின் நன்மையின் தட்டை நிரப்புகின்றது. 'سبحان الله' (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்) 'الحمد لله' ஆகிய இரண்டுமோ அல்லது ஒன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது. தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும், பொறுமை பிரகாசமாகும். திருக்குர்ஆன் உனக்கு சாதகமான அல்லது பாதகமான ஒரு ஆதாரமாகும்; தனது நாளைத் துவங்கும் ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மாவை பேரத்தில் விடுகின்றான். ஒன்று அதற்கு விடுதலையைத் தேடித் தந்திருக்கின்றான். அல்லது அதற்கு அழிவைத் தேடித் தருகின்றான்'

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் தரம்: சரியானது

விளக்கம்

புறச்சுத்தம்; வுழூ மற்றும் குளித்தலினால் நிகழ்கிறது, அது தொழுகைக்கான நிபந்தனைகளில் ஒன்று என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் குறிப்பிடுகிறார்கள். 'الحمد لله' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) மீஸானின் நன்மையின் தட்டை நிரப்புகின்றது. எனும் கூற்று அல்லாஹ்வை புகழ்ந்து அவனை அவனுக்கே உரிய பூரண பண்புகளால் வர்ணிப்பதைக் குறிக்கும். இவை மறுமையில் மீஸானில் நிறுக்கப்படும் அவ்வாறு நிறுக்கப்படும் போது அவை அமல்களின் தராசை நிரப்பிவிடும். என்பது இதன் கருத்தாகும். . 'سبحان الله' (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்) 'الحمد لله' (எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே) ஆகிய கூற்றுக்களானது அல்லாஹ் எல்லாவிதக் குறைகளிலிருந்தும் தூய்மையானவன் என்பதைக் காட்டும்.அத்துடன் அவனைக் கண்ணியப்படுத்தி அவனை நேசம் கொண்டு அவனின் கண்ணியத்திற்கு பொருத்தமாக அவனை வர்ணிப்பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையிலான பகுதியை நிரப்பிவிடுகிறது. (அஸ்ஸலாது நூருன்)'தொழுகை ஓளியாகும்' என்ற வாசகம் ஒரு அடியானுக்கு தொழுகையானது அவனது உள்ளத்திலும், முகத்திலும்,மண்ணறையிலும்(கப்ரிலும்) மண்ணறையிலிருந்து விசாரணைக்காக எழுப்பப்படும் போதும் ஒளியாக அமையும் என்ற கருத்தைக் குறிக்கும். 'அஸ்ஸதகது புர்ஹானுன்' தர்மம் அத்தாட்சியாகும் என்பது ஒரு முஃமினின் ஆழமான நம்பிக்கையின் உண்மைத்தன்மையை பிரதிபளிக்கும் ஆதாரமாக தர்மம் அமையும் என்பதாகும். அதாவது மறுமையில் அடியார்களுக்கு வாக்களிக்கப்பட்டவற்றை நம்பாத நயவஞ்சகன்; தர்மம் செய்வதிலிருந்து விலகியிருப்பதால் அவனிலிருந்து முஃமினை வித்தியாசப்படுத்தும் அடையாளமாகவும் இது அமைகிறது. 'பொறுமை பிரகாசமாகும்' அஸ்ஸப்ரு என்பது மனதை பதற்றம் மற்றும் வெறுப்பு போன்றவற்றிலிருந்து கட்டுப்படுத்திக்கொள்வது என்பதைக் குறிக்கிறது. சூரிய ஒளியைப்போன்று வெப்பமும், சுடரும் கலந்த நிலையில் உள்ள பண்பாக பொறுமை காணப்படுகிறது.அதாவது பொறுமை; மனதை அடக்குதல்-கட்டுப்படுத்தல்- என்பது மிக சிரமமான விடயம். அதற்கு உள்ளத்துடன் போராடுதல் மற்றும் உள்ளம் விரும்பும் மனோஇச்சைகளை கட்டுப்படுத்துதல் போன்றன தேவைப்படுகின்றன.இவ்வாறான பொறுமையின் மூலம் பிரகாசத்தைப் பெற்றவன் அந்தப்பிரகாசத்தின் விளைவாக சரியான பாதையில் அவன் தொடர்ந்தும் நிலைத்திருப்பதற்கு அது காரணமாக அமையும்.பொறுமை பல வகைப்படும் 1- அல்லாஹ்வுக்கு வழிபடுவதில் பொறுமையை கடைப்பிடித்தல் 2- அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் மனதை அடக்கி பொறுமை காத்தல் 3- உலகத்தில் நிகழும் பலவகையான துன்பங்கள் மற்றும் சோதனைகளில் பொறுமைகாத்தல், போன்றன முக்கியமானவைகளாகும். அல்குர்ஆனை ஓதி அதன் போதனையை கடைப்பிடித்தொழுகின் அது உனக்கு சான்றாதாரமாக அமையும் அல்லது அதனை ஒதாது அதன் போதனைகளை கடைப்பிடிக்காது விட்டுவிட்டால் அது உமக்கு எதிராக சான்றளிக்கும் ஆதாரமாக அமைந்து விடும். அதனை தொடர்ந்து நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மனிதர்கள் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்து பல்வேறு தொழில்களுக்காக வெளிக்கிழம்பி பல்வேறு இடங்களுக்குச் செல்வார்கள் என்பதை இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள் . இவ்வாறு செல்வோரில் சிலர் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வழிப்படுவதில் உறுதியாக இருந்து நரகத்திலிருந்து தம்மை விடுவிடுவித்துக்கொள்வோரும், சத்திய மார்க்கத்திலிருந்து தடம்புரண்டு பாவகாரியங்களில் ஈடுபட்டு அதன் மூலம் தம்மை நாசத்திற்கு உட்படுத்தி நரகத்திற்கு செல்வோறும் உள்ளனர் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

பயன்கள்

  • சுத்தம் இரண்டு வகைப்படும்; ஓன்று புறச்சுத்தம் இது வுழூ செய்தல் குளித்தல் போன்ற காரியங்களால் ஏற்படுகிறது.இரண்டாவது அகச்சுத்தம் இது ஏகத்துவம், நம்பிக்கை (ஈமான்) நற்செயல் ஆகிய விடயங்களால் ஏற்படுகிறது.
  • தொழுகையானது அடியானுக்கு இம்மையிலும் மறுமையிலும் ஒளியாக அமையும் என்பதால், தொழுகையைப் கடைப்பிடித்து பேணுவதன் முக்கியத்துவத்தை இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது
  • தர்மம் ஈமானின் -நம்பிக்கையின் உண்மை நிலையை விளக்கும் ஆதாரமாகும்.
  • அல்குர்ஆனை உண்மைப்படுத்தி அதில் உள்ள போதனைகளை நடைமுறைப்படுத்துவதன் அவசியம் இந்த ஹதீஸில் குறிப்பிடபட்பட்டிருக்கிறது. ஏனெனில் அல்குர்ஆனை அணுகும் விதத்தில்தான் உமக்கு அது சாதகமாகவோ,எதிரானதாகவோ அமையும்.
  • மனதை (வழிப்பாட்டில்) நன்மையான காரியத்தில் ஈடுபத்தவில்லையெனில் உம்மை பாவத்தில் ஆழ்த்தி விடும்.
  • ஓவ்வொரு மனிதனும் தன்னை இறைவழிபாட்டில் ஈடுபடுத்தி (அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு) நரகத்தைவிட்டு விடுவித்துக்கொள்ளவும் அல்லது பாவகரியத்தில் ஈடுபட்டு பெரும் நாசத்தை அடையவும் இவ்வுலகில் ஏதோ வகையில் செயல்படுதல் வேண்டும்.
  • பொறுமைக்கு சிரமத்தை தாங்குதல், நன்மையை எதிர்பார்த்தல் எனும் பண்புகள் தேவையாகும். பொறுமையை கடைப்பிடிப்பதில் சிரமம் உள்ளது.

HadeethEnc.com இல் படிக்கவும்

11 ஒரு முறை

பொருளும் ஆதாரமும்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'நான் விண்ணுலகப் பயணம் சென்ற இரவில் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம், 'முஹம்மதே! உமது சமுதாயத்திடம் எனது ஸலாமை எத்திவையுங்கள். மேலும், சுவனம் தூய்மையான மண்ணைக் கொண்டது என்றும், மதுரமான நீரைக் கொண்டது என்றும் அவர்களிடம் கூறுங்கள் மேலும், அவை வெற்றுப் பூமிகள், அதில் நட்டப்படும் மரங்கள், ஸுப்ஹானல்லாஹ், வல்ஹம்து லில்லாஹ், வலா இலாஹ இல்லல்லாஹ் வல்லாஹு அக்பர் ஆகியவை தான் என்றும் கூறுங்கள்' என்று கூறினார்கள்.

இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார் தரம்: துணை ஆதாரங்கள் ஊடாக ஆதாரமாகக்கொள்ள முடியுமானது (ஹஸன்)

விளக்கம்

இஸ்ரா, மிஃராஜ் இரவின் போது தாம், இறைவனின் உற்ற தோழர், இப்ராஹீம் (அலை) அவர்களைச் சந்தித்ததாகவும், அவர் தம்மிடம், 'முஹம்மதே! உமது சமுதாயத்திடம் எனது ஸலாமை எத்தி வையுங்கள். மேலும், சுவனம் தூய்மையான மண்ணைக் கொண்டது என்றும், உவர்ப்பற்ற, மதுரமான நீரைக் கொண்டது என்றும், அவை விசாலமான, சமாந்திரமான, மரங்களற்ற பூமிகள், அதில் நட்டப்படும் மரங்கள், நல்ல வார்த்தைகளாகிய, ஸுப்ஹானல்லாஹ், வல்ஹம்து லில்லாஹ், வலா இலாஹ இல்லல்லாஹ் வல்லாஹு அக்பர் ஆகியவைதான் என்றும், ஒரு முஸ்லிம் அவற்றை திரும்பத் திரும்பக் கூறும் போதெல்லாம் சுவனத்தில் அவருக்கு ஒரு மரம் நட்டப்படும் என்றும்' கூறுங்கள்' என்று நபியவர்கள் இங்கு அறிவிக்கின்றார்கள்.

பயன்கள்

  • திக்ரைத் தொடர்ந்து பேணி, சுவனத்தில் மரங்களை அதிகப்படுத்திக்கொள்ள ஆர்வமூட்டல்.
  • இந்த உம்மத்தின் சிறப்பு. அதாவது, அவர்களுக்கு நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் ஸலாம் கூறி அனுப்பியுள்ளார்கள்.
  • அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்யுமாறு, நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களது சமுதாயத்திற்கு ஆர்வமூட்டியுள்ளமை.
  • தீபீ அவர்கள் கூறுகின்றார்கள் : சுவனம் வெற்றுப் பூமிகளாகும். பின்பு அல்லாஹ் தனது பேருபகாரத்தினால், அமல்செய்பவர்களின் அமல்களுக்கு ஏற்ப மரங்களையும், மாளிகைகளையும் உருவாக்கினான். அமல் செய்யும் ஒவ்வொருவருக்கும் அவர் செய்யும் அமல்களுக்கு ஏற்பத் தனித்தனியான மரங்கள் உண்டு. பின்பு, அல்லாஹ் தஆலா ஒவ்வொருவரும் எந்த அமலுக்காகப் படைக்கப்பட்டுள்ளார்களோ, அதை இலகுபடுத்திக்கொடுத்து, அந்த கூலியை அடையச் செய்வதால், அவர்கள் அம்மரங்களை நட்டியவர்கள் போன்றாகி விடுகின்றனர்.

HadeethEnc.com இல் படிக்கவும்

12 ஒரு முறை

பொருளும் ஆதாரமும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக -அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : ஒரு கூட்டதினர் சபையில் அமர்ந்து அதில் அல்லாஹ்வை அவர்கள் நினைவு கூறாமலும், தங்களுடைய நபியின் மீது ஸலவாத்து கூறாமலும் இருப்பார்களாயின் அதுவே அவர்களுக்கு (மறுமையில்) பேரிழப்பாக அமைந்துவிடும். அவன் நாடினால் அவர்களை அவன் தண்டித்து விடுவான் அவன் நாடினால் அவர்களை மன்னித்து விடுவான்.

இதனை அபூதாவுத், திர்மிதீ ஆகியோரும் குப்ராவில் நஸாஈ அவர்களும் பதிவு செய்துள்ளனர் தரம்: சரியானது

விளக்கம்

நபி ﷺ அவர்கள், அல்லாஹ்வை நினைவு கூறுவதில்; அதாவது திக்ர் செய்வதில அலட்சியமாக இருப்பதைக் குறித்து எச்சரித்துள்ளார்கள். எந்தக் குழுவினர் ஒரு கூட்டத்தில் அமர்ந்து, அதில் அல்லாஹ்வை நினைவுகூராமலும், அவனுடைய தூதர் ﷺ மீது ஸலவாத்தும் சொல்லாமலும்; இருந்தார்களோ, அந்தக் மஜ்லிஸானது கியாமத் நாளில் அவர்களுக்கு பேரிழப்பாகவும், வருத்தம் நிறைந்தாகவும், கைசேதமாகவும் குறைபாடுடையதாகவும் மாறிவிடும். அல்லாஹ் நாடினால், அவர்களின் முந்தைய பாவங்களுக்காகவும் பின்னர் செய்த தவறுகளுக்காவும் அவர்களைத் தண்டிப்பான். அவன் நாடினால், தன் அருளாலும் கருணையாலும் அவர்களை மன்னிப்பான்.

பயன்கள்

  • அல்லாஹ்வை நினைவு கூர (திக்ர் செய்ய) ஊக்குவித்தலும், அதன் மகத்துவமும்.
  • அல்லாஹ்வை நினைவு (திக்ர் செய்து) கூறி அவனது தூதர் ﷺ மீது ஸலவாத்து கூறும் சபைகளின் சிறப்பு குறிப்பிடப்பட்டிருத்தல். மேலும் இவை இல்லாத சபைகள் (கூட்டங்கள்), கியாமத் நாளில் அவற்றில் கலந்து கொண்டவர்களுக்கு துரதிஷ்திடத்தை ஏற்படுத்தும் கூட்டங்களாக அமைந்துவிடும்.
  • அல்லாஹ்வை நினைவு கூர்வதில் அலட்சியம் செய்வதைப் பற்றிய இந்த எச்சரிக்கை, சன்மார்க்க கூட்டங்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. அது ஏனையை சபைகள் மற்றும் கூட்டங்களையும்; உள்ளடக்குகிறது. இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்: 'ஒரு இடத்தில் அமரும் ஒருவர், அந்த இடத்தை விட்டு செல்லும் முன் அல்லாஹ்வை நினைவுகூராமல் எழுந்து செல்லுவது வெறுக்கத் தக்கதாகும் (மக்ரூஹ்)'.
  • மறுமையில் அவர்களுக்கு ஏற்படும் கைசேதத்திற்கான காரணம் ஒன்றில், அந்த நேரத்தை இறைவழிபாட்டில் பயன் படுத்தாமையினால் தப்பிப் போன நன்மைகளை நினைத்தாகவோ, அல்லது அல்லாஹ்வுக்கு மாறுசெய்து நேரத்தை வீணடித்தமையினால் பாவங்கள் கிடைத்தமையினாலோ ஆக இருக்கலாம்.)
  • அனுமதிக்கப்பட்டவற்றின் மூலம் இவ்வாறான பராமுகம் ஏற்படுவதற்கே இந்த எச்சரிக்கை என்றால், புறம், கோல் போன்ற தடுக்கப்பட்டவற்றை உள்ளடக்கியிருக்கும் சபைகளின் நிலை என்ன?

HadeethEnc.com இல் படிக்கவும்

கேள்விகள்

இந்தப் பக்கத்தில் என்ன உள்ளது?

சிறந்த திக்ர்: ஒவ்வொன்றும் அரபியில், அதன் பொருள், அது வந்துள்ள ஹதீஸ், அதன் தரம் மற்றும் விளக்கத்துடன்.

மொழிபெயர்ப்புகள் எங்கிருந்து வருகின்றன?

மொழிபெயர்க்கப்பட்ட நபிமொழிகளின் கலைக்களஞ்சியமான HadeethEnc.com இலிருந்து. ஒவ்வொரு ஹதீஸும் அவர்கள் வெளியிட்டபடியே, அதன் ஆதாரம், தரம் மற்றும் மூலத்திற்கான இணைப்புடன் காட்டப்படுகிறது.

கவுண்டர் எப்படி வேலை செய்கிறது?

ஒரு திக்ரின் கீழ் உள்ள கவுண்டரைத் தட்டினால் அது பூஜ்ஜியம் வரை குறைந்து எண்ணும். இது இந்தப் பக்கத்தில் மட்டுமே, எதுவும் சேமிக்கப்படுவதில்லை.

தினசரி நினைவூட்டல் பெற முடியுமா?

ஆம். Android க்கான இலவச Qabas செயலி ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை திக்ர்களை நினைவூட்டுகிறது, இதே கவுண்டரும் அதில் உள்ளது.