ஸூரா At-Takathur التكاثر

மொழிபெயர்ப்பு: Tamil Translation - Abdulhamid Baqawi

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

أَلۡهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ ١

1, 2. நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது).

حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ ٢

1, 2. நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது).

كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ ٣

3. நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவை என்ன என்பதை) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.

ثُمَّ كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ ٤

4. பின்னர், நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவற்றின் பலன்களையும்) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.

كَلَّا لَوۡ تَعۡلَمُونَ عِلۡمَ ٱلۡيَقِينِ ٥

5. நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அதன் பலனைச்) சந்தேகமற உறுதியாக நீங்கள் அறிவீர்களாயின்,

لَتَرَوُنَّ ٱلۡجَحِيمَ ٦

6. நிச்சயமாக நரகத்தையே நீங்கள் (உங்கள் கண்முன்) காண்பீர்கள்.

ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ ٱلۡيَقِينِ ٧

7. பிறகு, சந்தேகமற மெய்யாகவே அதை நீங்கள் உங்கள் கண்களால் கண்டுகொள்வீர்கள்.

ثُمَّ لَتُسۡـَٔلُنَّ يَوۡمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ ٨

8. (உங்களுக்கு இறைவன் புரிந்த) அருளை (நீங்கள் எவ்வழியில் செலவு செய்தீர்கள் என்பதை)ப் பற்றியும், பின்னர் அந்நாளில் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.

கேள்விகள்

ஸூரா At-Takathur இல் எத்தனை வசனங்கள் உள்ளன?

ஸூரா At-Takathur இல் 8 வசனங்கள் உள்ளன. இது குர்ஆனின் 102 ஆவது ஸூரா.

ஸூரா At-Takathur மக்கீயா, மதனீயா?

ஸூரா At-Takathur ஒரு மக்கீ ஸூரா.

ஸூரா At-Takathur எந்த ஜுஸ்உவில் உள்ளது?

ஸூரா At-Takathur ஜுஸ்உ 30 இல் உள்ளது.

ஸூரா At-Takathur ஐக் கேட்க முடியுமா?

ஆம். இந்தப் பக்கத்தின் மேலே இயக்கு பொத்தானை அழுத்துங்கள், அல்லது எந்த வசனத்திலிருந்தும் தொடங்குங்கள். Qabas செயலியில் இதை ஆஃப்லைனில் கேட்கப் பதிவிறக்கவும் முடியும்.