பாடம் 3 / 4
ஒரு முஸ்லிம் எப்படிப் பேச வேண்டும், அண்டை வீட்டாரை எப்படி நடத்த வேண்டும்?
குர்ஆனிலிருந்து
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا يَسۡخَرۡ قَوۡمٞ مِّن قَوۡمٍ عَسَىٰٓ أَن يَكُونُواْ خَيۡرٗا مِّنۡهُمۡ وَلَا نِسَآءٞ مِّن نِّسَآءٍ عَسَىٰٓ أَن يَكُنَّ خَيۡرٗا مِّنۡهُنَّۖ وَلَا تَلۡمِزُوٓاْ أَنفُسَكُمۡ وَلَا تَنَابَزُواْ بِٱلۡأَلۡقَٰبِۖ بِئۡسَ ٱلِٱسۡمُ ٱلۡفُسُوقُ بَعۡدَ ٱلۡإِيمَٰنِۚ وَمَن لَّمۡ يَتُبۡ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ ﴿١١﴾ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱجۡتَنِبُواْ كَثِيرٗا مِّنَ ٱلظَّنِّ إِنَّ بَعۡضَ ٱلظَّنِّ إِثۡمٞۖ وَلَا تَجَسَّسُواْ وَلَا يَغۡتَب بَّعۡضُكُم بَعۡضًاۚ أَيُحِبُّ أَحَدُكُمۡ أَن يَأۡكُلَ لَحۡمَ أَخِيهِ مَيۡتٗا فَكَرِهۡتُمُوهُۚ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ تَوَّابٞ رَّحِيمٞ ﴿١٢﴾
11. நம்பிக்கையாளர்களே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்யவேண்டாம். அவர்கள் (அல்லாஹ்விடத்தில் பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்யவேண்டாம்.) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். உங்களில் ஒருவர் ஒருவரை இழிவாகக் கருதி குறை கூறவேண்டாம். உங்களில் ஒருவர் மற்றவருக்கு(த் தீய) பட்டப் பெயர் சூட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்டதன் பின்னர், கெட்ட பெயர் சூட்டுவது மகா கெட்ட (பாவமான)தாகும். எவர்கள் (இவற்றிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையோ அவர்கள்தான் (வரம்பு மீறிய) அநியாயக்காரர்கள். 12. நம்பிக்கையாளர்களே! அதிகமான சந்தேகங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். ஏனென்றால், நிச்சயமாகச் சந்தேகங்களில் சில பாவமானவையாக இருக்கின்றன. (எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றெவரையும் புறம் பேசவேண்டாம். உங்களில் எவனும் தன் இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதை நீங்கள் வெறுப்பீர்களே! (புறம் பேசுவதும் அவ்வாறே. இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து விலகுபவர்களை) அங்கீகரிப்பவன், கருணையுடையவன் ஆவான்.
சுன்னாவிலிருந்து
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'அல்லாஹ்வையும் இறுதி நாளையும் யார் நம்புகிறாரோ அவர் பேசினால் நல்லதைப் பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்;. அல்லாஹ்வையும் இறுதிநாளையும் யார் நம்புகிறாரோ அவர் தனது அயல் வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் யார் நம்புகிறாரோ அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்'.
விளக்கம்
அல்லாஹ்வையும், மரணத்தின் பின் மனிதன்; மீண்டு சென்று அவனின் செயலுக்குரிய கூலியை பெற்றுக்கொள்ளும் இடமாகிய மறுமை நாளையும் நம்பிய ஒரு முஃமினான அடியானுக்கு அவனின் ஆழமான ஈமான் பின்வரும் நற்பழக்கங்களை, நல்ல விடயங்களை செய்யத் தூண்டும் என்பதை நபியவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். அந்த நற்செயல்கள் பின்வருமாறு:
முதலாவது : நல்ல வார்த்தை பேசுதல்: இதில் தஸ்பீஹ் (ஸுப்ஹானல்லாஹ் கூறுதல்) தஹ்லீல் (லாஇலாஹ இல்லல்லாஹ் கூறுதல்) நன்மையை ஏவுதல், தீமையை தடுத்தல், மனிதர்களுக்கு மத்தியில் பிணக்குளைத் தீர்த்து சமாதானம் செய்து வைத்தல் போன்ற விடயங்கள் உள்ளடங்குகிறன. இவ்வாறு நல்ல வார்த்தை அல்லது பயனுள்ள விடயங்களை பேச முடியவில்லையெனில் மௌனமாக இருப்பதோடு பேசுவதினால் மற்றவருக்கு தொந்தரவு இழைப்பதை விட்டு தன் நாவை பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும்.
இரண்டாவது : அயலவருக்கு உபத்திரம் செய்யாது, உபகாரம் செய்து அவர்களை கண்ணியப் படுத்துதல்.
மூன்றாவது : உம்மை தேடி சந்திப்பதற்காக வரும் விருந்தாளியை நல்ல வார்த்தை பேசி, உணவளித்து உபசரித்து இது போன்ற நல்ல விடயங்களை செய்து அவரை கௌரவப் படுத்துதல்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'அயலவரும் வாரிசுதாரராக ஆகி விடுவாரோ என நான் எண்ணுமளவிற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அயலவர் -அண்டைவீட்டார் குறித்து எனக்கு உபதேசித்துக் கொண்டே இருந்தார்கள்'.
விளக்கம்
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்டை வீட்டார் குறித்து கரிசனை செலுத்துமாறு கட்டளைப் பிரப்பித்து, அதனை பற்றி பல முறை தொடர்ந்து தனக்கு கூறியவண்ணம் இருந்தார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெரிவிக்கிறார்கள். அண்டை வீட்டார் என்பவர் எமக்குப் பக்கத்தில் வாழும் முஸ்லிமோ காபிரோ உறவினர்களோ அல்லது உறவினர் அல்லாதாரோ அனைவரையும் குறிக்கும். இவர்களின் உரிமையை காத்து, அவர்களுக்கு தொந்தரவு செய்யாது, அவர்களுக்கு உபகாரம் செய்து, அவர்களால் ஏற்படுகின்ற தொந்தரவுகளை சகித்து நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியவர்களுக்கு அண்டை வீட்டார் உரிமைப் பற்றியும் அதன் மேன்மையையும் வலியுறுத்திக் கூறியது ஒருவர் தனது மரணத்திற்குப் பின் விட்டுச்செல்லும் சொத்தில் அவருக்கும் பங்கு உண்டு என நினைக்குமளவிற்கு இருந்தாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.