பாடம் 2 / 4
பெற்றோர் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?
குர்ஆனிலிருந்து
۞ وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّآ إِيَّاهُ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَٰنًاۚ إِمَّا يَبۡلُغَنَّ عِندَكَ ٱلۡكِبَرَ أَحَدُهُمَآ أَوۡ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَآ أُفّٖ وَلَا تَنۡهَرۡهُمَا وَقُل لَّهُمَا قَوۡلٗا كَرِيمٗا ﴿٢٣﴾ وَٱخۡفِضۡ لَهُمَا جَنَاحَ ٱلذُّلِّ مِنَ ٱلرَّحۡمَةِ وَقُل رَّبِّ ٱرۡحَمۡهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرٗا ﴿٢٤﴾
23. (நபியே!) உமது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். உம்மிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ' என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுவீராக. 24. அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! மேலும், ‘‘என் இறைவனே! நான் குழந்தையாக இருந்த பொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீது அன்பும் அருளும் புரிவாயாக!'' என்றும் பிரார்த்திப்பீராக!
وَوَصَّيۡنَا ٱلۡإِنسَٰنَ بِوَٰلِدَيۡهِ حَمَلَتۡهُ أُمُّهُۥ وَهۡنًا عَلَىٰ وَهۡنٖ وَفِصَٰلُهُۥ فِي عَامَيۡنِ أَنِ ٱشۡكُرۡ لِي وَلِوَٰلِدَيۡكَ إِلَيَّ ٱلۡمَصِيرُ ﴿١٤﴾
14. ‘‘ தனது தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்து கொண்டலைந்தாள். (பிறந்த) பிறகும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன் தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. முடிவில் நீ நம்மிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது.
சுன்னாவிலிருந்து
பஹ்ஸ் இப்னு ஹகீம் தனது தந்தை வழியாகத் தனது பாட்டனாரைத் தொட்டும் இவ்வாறு அறிவிக்கின்றார்கள்: நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம், “நான் யாருக்கு உபகாரம் புரிய வேண்டும்?” எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள், “உமது தாயார், பின்பும் உமது தாயார், பின்பும் உமது தாயார், பின்பு உமது தந்தை, பின்பு அதற்கு அடுத்தடுத்து நெருக்கமாக இருப்பவர்கள்” என்று கூறினார்கள்.
விளக்கம்
இங்கு நபியவர்கள், உபகாரம் புரிவதற்கும், நல்ல முறையில் நடந்துகொள்வதற்கும், அழகாக இணைந்து நடப்பதற்கும், சேர்ந்துநடப்பதற்கும் மனிதர்களிலேயே மிகப் பொருத்தமானவர், தாய் தான் என்று தெளிவுபடுத்துகின்றார்கள். ஏனையோரை விடத் தாயாருக்கு இருக்கும் உரிமையை உறுதிப்படுத்தும் விதத்தில் மூன்று தடவை அதனைக் கூறி, விதிவிலக்கின்றி ஏனைய அனைத்து மனிதர்களையும் விட அவரது சிறப்பைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். பின்பு நபியவர்கள், அவரை அடுத்து உபகாரம் செய்யப்படுவதற்குத் தகுதியானவர் தந்தை என்றும், பின்பு அடுத்து நெருக்கமாக உள்ள உறவினர்கள் என்றும் தெளிவுபடுத்துகின்றார்கள். நெருக்கமாக உள்ள உறவினர்கள், தூரமாக உள்ள உறவினர்களை விட, சேர்ந்து நடக்கத் தகுதியானவர்களாகும்.