ஸூரா Ad-Duha الضحى

மொழிபெயர்ப்பு: Tamil Translation - Abdulhamid Baqawi

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلضُّحَىٰ ١

1. காலைப்பொழுதின் மீது சத்தியமாக!

وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ ٢

2. மறைத்துக் கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக!

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ٣

3. (நபியே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; (உம்மை) வெறுக்கவுமில்லை.

وَلَلۡأٓخِرَةُ خَيۡرٞ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ ٤

4. (ஒவ்வொரு நாளும் உமது) பிந்திய நிலைமை, முந்திய நிலைமையை விட நிச்சயமாக மிக்க மேலானதாக இருக்கிறது.

وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ ٥

5. உமது இறைவன் மேலும் (பல உயர் பதவிகளை) உமக்கு அளிப்பான். (அவற்றைக் கொண்டு) நீர் திருப்தியடைவீர்.

أَلَمۡ يَجِدۡكَ يَتِيمٗا فَـَٔاوَىٰ ٦

6. உம்மை அநாதையாகக் கண்டு, அவன் உமக்குத் தங்கும் இடம் அளி(த்து ஆதரி)க்க வில்லையா?

وَوَجَدَكَ ضَآلّٗا فَهَدَىٰ ٧

7. திகைத்துத் தயங்கியவராக உம்மைக் கண்ட அவன் நேரான வழியில் (உம்மைச்) செலுத்தினான்.

وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ ٨

8. முடைப்பட்டவராக உம்மைக் கண்ட அவன் (உம்மைத்) தனவந்தராக்கி வைத்தான். (அல்லவா?)

فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ ٩

9. ஆகவே, (இவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் அநாதைகளைக் கடுகடுக்காதீர்.

وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ ١٠

10. யாசிப்பவரை வெருட்டாதீர்.

وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ ١١

11. (உம்மீது புரிந்துள்ள) உமது இறைவனின் அருளைப் (பிறருக்கு) அறிவித்து (அவனுக்கு நன்றி செலுத்தி)க் கொண்டிருப்பீராக!

கேள்விகள்

ஸூரா Ad-Duha இல் எத்தனை வசனங்கள் உள்ளன?

ஸூரா Ad-Duha இல் 11 வசனங்கள் உள்ளன. இது குர்ஆனின் 93 ஆவது ஸூரா.

ஸூரா Ad-Duha மக்கீயா, மதனீயா?

ஸூரா Ad-Duha ஒரு மக்கீ ஸூரா.

ஸூரா Ad-Duha எந்த ஜுஸ்உவில் உள்ளது?

ஸூரா Ad-Duha ஜுஸ்உ 30 இல் உள்ளது.

ஸூரா Ad-Duha ஐக் கேட்க முடியுமா?

ஆம். இந்தப் பக்கத்தின் மேலே இயக்கு பொத்தானை அழுத்துங்கள், அல்லது எந்த வசனத்திலிருந்தும் தொடங்குங்கள். Qabas செயலியில் இதை ஆஃப்லைனில் கேட்கப் பதிவிறக்கவும் முடியும்.