இம்மைக்கும் மறுமைக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய துஆக்கள்

இவ்வுலகிலும் மறுமையிலும் எல்லா நன்மைகளையும் கேட்கும் சுருக்கமான துஆக்கள்.

1 ஒரு முறை

اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ

பொருளும் ஆதாரமும்

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மிகவும் அதிகமாக ஓதும்; பிரார்த்தனையாக ' அல்லாஹும்ம ரப்பனா ஆதினா பித்துன்யாக ஹஸனதன் வபில்ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' காணப்பட்டது. (யா அல்லாஹ் எமது இரட்சகனே ! எமக்கு இவ்வுலகிலும் மறுமையிலும்; நலவைத் தருவாயாக. மேலும் நரக நெருப்பிலிருந்து எம்மை காப்பற்றுவாயாக!

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர் தரம்: சரியானது

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அதிகமாக சொற்சுருக்கமும் பொருட்செறிவும் மிக்க துஆக்களை அதிகம் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். அவற்றுள் ஒரு துஆ பின்வருமாறு : ' அல்லாஹும்ம ரப்பனா ஆதினா பித்துன்யாக ஹஸனதன் வபில்ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' காணப்பட்டது. (யா அல்லாஹ் எமது இரட்சகனே ! எமக்கு இவ்வுலகிலும் மறுமையிலும்; நலவைத் தருவாயாக. மேலும் நரக நெருப்பிலிருந்து எம்மை காப்பற்றுவாயாக! இங்கு குறிப்பிடப்பட்ட உலகின் நலனை என்பது விசாலமான இன்பத்தை தரவல்ல ஹலாலான வாழ்வாதரம்,நல்ல –ஸாலிஹான மனைவி -கண்குளிச்சி மிக்க பிள்ளைகள் -ஓய்வு- நல்ல அமல் -செயல்பாடு போன்ற அனுமதிக்கப்பட்டதும் விரும்பத்தக்கதுமான கோரிக்கைகளைக் உள்ளடக்கியுள்ளது.மறுமை நலன் என்பது கப்ரிலும் இறைசன்னிதானத்திலும் நரகிலும் கிடைக்கவிருக்கும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்ப் பெறுதல்,இறைபொறுத்தத்தைத் பெறல்,நித்தியமான பேரின்பத்தை அடைந்து கொள்ளுதல்,கருணையாளனாகிய அல்லாஹ்விடம நெருக்கத்தைப் பெறுதல் போன்றவற்றைக் குறிக்கும்.

பயன்கள்

  • நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை முன்பமாதிரியாகக் கொண்டு அவர்கள் ஓதிய கருத்தாளமிக்க துஆக்களை ஓதுவது வரவேற்கத்தக்கது.
  • ஒருவர் தனது பிரார்த்தனையில் இம்மை மறுமை நலன்ககள் இரண்டையும் சேர்த்து பிரார்த்திப்பது அவரின் துஆ –பிரார்த்தனை –மிகவும் பூரணத்துவமிக்கதாக அமைய காரணமாக அமையும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

2 ஒரு முறை

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ الْخَيْرِ كُلِّهِ، عَاجِلِهِ وَآجِلِهِ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ، وَأَعُوذُ بِكَ مِنْ الشَّرِّ كُلِّهِ، عَاجِلِهِ وَآجِلِهِ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ عَبْدُكَ وَنَبِيُّكَ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَاذَ بِهِ عَبْدُكَ وَنَبِيُّكَ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ، وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَعُوذُ بِكَ مِنْ النَّارِ، وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَاءٍ قَضَيْتَهُ لِي خَيْرًا

பொருளும் ஆதாரமும்

நபி (ஸல்) அவர்கள் தனக்குப் பின்வரும் துஆவைக் கற்றுத் தந்ததாக, ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : யா அல்லாஹ்! நலவுகளில், உடனடியான, தாமதமான, நான் அறிந்த, அறியாத அனைத்தையும் உன்னிடம் கேட்கின்றேன். தீமைகளில், உடனடியான, தாமதமான, நான் அறிந்த, அறியாத அனைத்தையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புக் கேட்கின்றேன். யா அல்லாஹ்! உனது அடியாராகிய உனது நபி உன்னிடம் கேட்டவற்றில் சிறந்தவற்றை நான் உன்னிடம் கேட்கின்றேன். உனது அடியாராகிய உனது நபி உன்னிடம் பாதுகாப்புக் கேட்டவற்றில் தீயவைகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கேட்கின்றேன். யா அல்லாஹ்! நான் உன்னிடம் சுவர்க்கத்தையும், அதனிடம் சமீபமாக்கி வைக்கும் வார்த்தைகள் அல்லது செயற்களையும் கேட்கின்றேன். மேலும் நான் உன்னிடம் நரகத்தை விட்டும், அதனிடம் சமீபமாக்கி வைக்கும் வார்த்தைகள் அல்லது செயற்களை விட்டும் பாதுகாப்புக் கேட்கின்றேன். மேலும் என் மீது விதித்துள்ள அனைத்து விதிகளையும் நன்மையானதாக ஆக்கிவிடுமாறும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

இமாம்களான இப்னு மாஜா மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டது தரம்: சரியானது

விளக்கம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கருத்துச் செரிவுமிக்க ஒரு துஆவைக் கற்றுக்கொடுக்கின்றார்கள். அது நான்கு துஆக்களை உள்ளடக்கியுள்ளது :

முதலாவது : அனைத்து நன்மைகளையும் உள்ளடக்கியது: யா அல்லாஹ்! நலவுகளில், உடனடியான (அப்போது கிடைக்கக்கூடிய,) தாமதமான (தூரமான,) (நீ கற்றுக்கொடுத்து) நான் அறிந்த, (தூய்மையான உன்னுடைய அறிவில் மாத்திரம் உள்ள) நான் அறியாத அனைத்தையும் உன்னிடம் கேட்கின்றேன். இங்கு இவ்விடயம், அனைத்தையும் அறிந்த, அறிவுமிக்க, நுட்பமான அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டப்படுகின்றது. எனவே அல்லாஹ், ஒரு முஸ்லிமுக்கு அதில் மிகச் சிறந்ததையும், அழகானதையும் தெரிவு செய்து கொடுப்பான். 'தீமைகளில், உடனடியான, தாமதமான, நான் அறிந்த, அறியாத அனைத்தையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புக் கேட்(டு ஒதுங்கிக் கொள்)கின்றேன்.'

இரண்டாவது பிரார்த்தனை : இது முஸ்லிம்களை பிரார்த்தனையில் வரம்பு மீறுவதிலிருந்து பாதுகாக்கிறது. யா அல்லாஹ்! உனது அடியாராகிய உனது நபி (முஹம்மத் (ஸல்) அவர்கள்) உன்னிடம் கேட்டவற்றில் சிறந்தவற்றை நான் உன்னிடம் கேட்(டு வேண்டிக் கொள்)கின்றேன். உனது அடியாராகிய உனது நபி (முஹம்மத் (ஸல்) அவர்கள்) உன்னிடம் பாதுகாப்புக் கேட்டவற்றில் தீயவைகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கேட்(டு ஒதுங்கிக் கொள்)கின்றேன். இங்கு நபியவர்கள் எவற்றைக் கேட்டார்கள் என வரையறுத்துக் கூறாமல், பொதுவாக, அவர்கள் தமக்காக எதையெல்லாம் கேட்டார்களோ அவற்றைத் தருமாறு பிரார்த்தித்து வேண்டுவதாகும்.

மூன்றாவது : சுவனத்தில் நுழையவும், நரகை விட்டுத் தூரமாகவும் பிரார்த்தித்து வேண்டுவதாகும். அதுதான் ஒவ்வொரு முஸ்லிமினதும் தேவையும், அவனது அமல்களின் நோக்கமுமாகும். 'யா அல்லாஹ்! நான் உன்னிடம் சுவர்க்கத்தை (அடைந்து கொள்வதை)யும், அதனிடம் சமீபமாக்கி வைக்கும் வார்த்தைகள் அல்லது (உன்னைத் திருப்திப்படுத்தும் நல்ல) செயற்களையும், கேட்கின்றேன். மேலும் நான் உன்னிடம் நரகத்தை விட்டும், அதனிடம் சமீபமாக்கி வைக்கும் வார்த்தைகள் அல்லது (உன்னைக் கோபப்படுத்தும் பாவச்) செயற்களை விட்டும் பாதுகாப்புக் கேட்கின்றேன். (ஏனெனில், உனது அன்பைக் கொண்டு மாத்திரமே கெட்ட செயற்களில் இருந்து பாதுகாப்புப் பெறமுடியும்)'

நான்காவது துஆ : அல்லாஹ்வின் விதியில் திருப்தியைத் தருமாறு துஆக் கேட்டல். 'என் மீது விதித்துள்ள அனைத்து விதிகளையும் நன்மையானதாக ஆக்கிவிடுமாறும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.' (அதாவது அல்லாஹ் என் மீது விதித்துள்ள அனைத்து விதிகளையும் எனக்கு நன்மையைத் தருபவையாக ஆக்கி விடுமாறு நான் கேட்கின்றேன்) இது, அல்லாஹ்வின் விதியைத் திருப்தியோடு ஏற்றுக் கொள்ளவைக்குமாறு கேட்கும் துஆவாகும்.

பயன்கள்

  • நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து போன்று, ஒவ்வொரு மனிதனும் தனது குடும்பத்திற்கு அவசியமான மார்க்க, உலக விவகாரங்களைக் கற்றுக்கொடுப்பது அவசியமாகும்.
  • ஒரு முஸ்லிம், நபியவர்கள் ஊடாக வந்த துஆக்களை மனனமிட்டுக்கொள்வதே சிறந்ததாகும். ஏனெனில் அவை கருத்துச் செரிவுமிக்க துஆக்களாகும்.
  • இந்த ஹதீஸைப் பற்றி உலமாக்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : நலவுகளைக் கேட்டல், தீமைகளை விட்டுப் பாதுகாப்புத் தேடல் ஆகியவற்றிற்காக வந்துள்ள துஆக்களில் இது அனைத்தையும் உள்ளடக்கும் ஒரு துஆவாகும். இது நபியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 'ஜவாமிஉல் கலிம்' (குறைவான சொற்களில் நிறைவான அர்த்தங்கள் அடங்குமாறு பேசுதல்) வசனங்களில் ஒன்றாகும்.
  • அல்லாஹ்வுடைய அருளுக்குப் பின்னர், சுவனத்தில் நுழைய வைக்கும் ஒரு காரணியாக, நல் அமல்களும் நல்ல வார்த்தைகளும் காணப்படுகின்றன.

HadeethEnc.com இல் படிக்கவும்

3 ஒரு முறை

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَتِي -أَو: عَوْرَاتِي- وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي

பொருளும் ஆதாரமும்

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நபியவர்கள் காலையையும், மாலையையும் அடையும் போது பின்வரும் துஆக்களை விடாமல் ஓதி வருவார்கள்: யா அல்லாஹ்! இவ்வுலகிலும், மறுமையிலும் பாதுகாப்பை நான் உன்னிடம் கேட்கின்றேன். யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும், எனது உலகத்திலும், எனது குடும்பத்திலும், எனது சொத்துக்களிலும் பாதுகாப்பையும், மன்னிப்பையும் நான் கேட்கின்றேன். யா அல்லாஹ்! எனது மறைவிடங்களை மறைத்துவிடுவாயாக! எனது பயத்தை நீக்கி பாதுகாப்பைத் தருவாயாக! யா அல்லாஹ்! எனக்கு முன்னாலும், பின்னாலும், எனது வலப்புறத்தாலும், இடப்புறத்தாலும், எனக்கு மேலாலும் என்னைப் பாதுகாத்துவிடுவாயாக! எனக்குக் கீழால் எதிர்பார்க்காமல் நான் பிடிக்கப்படுவதை விட்டும் உனது மகத்துவத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகின்றேன்.

இமாம்களான அபூதாவுத், நஸாஈ, இப்னு மாஜா மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது தரம்: சரியானது

விளக்கம்

நபியவர்கள் காலையையும், மாலையையும் அடையும் போது பின்வரும் துஆக்களை விடாமல் ஓதி வருவார்கள்:

யா அல்லாஹ்! இவ்வுலகிலும், மறுமையிலும் (ஈருலகிலும்) உன்னிடம் (நோய்கள், சோதனைகள், உலகச் சிரமங்கள், மனோ இச்சைகள், மார்க்க ரீதியான குழப்பங்கள் அனைத்தையும் விட்டு) பாதுகாப்பை நான் கேட்கின்றேன்.

யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும் (அதாவது, இணைவைப்பு, பித்அத்கள், பாவங்கள் ஆகியவற்றை விட்டும்) எனது உலகத்திலும் (அதாவது, சோதனைகள், நோவினைகள், தீங்குகள் ஆகியவற்றை விட்டும்) எனது குடும்பத்திலும் (அதாவது, எனது மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களில்) எனது சொத்துக்களிலும் (எனது பணம் மற்றும் தொழிலில்) பாதுகாப்பையும் (குறைகளை விட்டு ஈடேற்றத்தையும்) (பாவங்களை விட்டு) மன்னிப்பையும் நான் கேட்கின்றேன்.

யா அல்லாஹ்! எனது மறைவிடங்களை மறைத்து விடுவாயாக! (அதாவது, என்னிடமுள்ள குறைகளையும், தவறுகளையும், கவனயீனத்தையும் மறைத்து, எனது பாவங்களை மன்னித்து விடுவாயாக) எனது பயத்தை (அதாவது அச்சத்தையும், திடுக்கத்தையும்) நீக்கி பாதுகாப்பைத் தருவாயாக!

யா அல்லாஹ்! எனக்கு முன்னாலும், பின்னாலும், எனது வலப்புறத்தாலும், இடப்புறத்தாலும், எனக்கு மேலாலும் என்னை (சோதனைகள் மற்றும் நோவினைகளை விட்டுப்) பாதுகாத்துவிடுவாயாக! (இங்கு எல்லாத் திசைகளில் இருந்தும் பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் கேட்டமைக்கான காரணம், சோதனைகளும், ஆபத்துக்களும் மனிதனை வந்தடைவது இந்தத் திசைகளில் ஒன்றின் ஊடாகவே)

எனக்குக் கீழால் எதிர்பார்க்காமல் (நான் பராமுகமாக இருக்கும் நிலையில் திடீரென நிலத்துக் கீழ் இழுத்தெடுக்கப்படுவதன் மூலமாக) பிடிக்கப்படுவதை விட்டும் உனது மகத்துவத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகின்றேன்.

பயன்கள்

  • நபியவர்களைப் பின்பற்றி, இந்த துஆவைப் பேணி ஓதி வருதல்.
  • மனிதன், மறுமையின் பாதுகாப்பைக் கேட்குமாறு ஏவப்பட்டுள்ளது போன்று, இம்மையின் பாதுகாப்பைக் கேட்குமாறும் ஏவப்பட்டுள்ளான்.
  • தீபீ அவர்கள் கூறுகின்றார்கள் : ஆறு திசைகளையும் குறிப்பிட்டிருப்பதற்கான காரணம், ஆபத்துக்கள் அங்கிருந்துதான் வருகின்றன என்பதனாலாகும். கீழ்த் திசை மிகைப்படுத்தப்பட்டு கூறப்பட்டிருப்பதற்கான காரணம், அதனால் வரும் ஆபத்து மோசமானதாக இருப்பதனாலாகும்.
  • அத்கார்களை ஓதுவதற்கான மிகச் சிறந்த நேரம், காலையில், பஜ்ர் உதயமாகியது தொடக்கம், சூரியன் உதித்து காலை ஆரம்பிக்கும் நேரம் வரையாகும். மாலையில், அஸ்ர் தொடக்கும் சூரியன் மறைவதற்கு முன்னர் வரையாகும். அதற்குப் பின்னால் அவர் ஓதினால், அதாவது காலையில் ழுஹா நேரம் ஏற்பட்ட பின்னர் ஓதினால் அது நிறைவேறும். ழுஹருக்குப் பின்னால் ஓதினால் அதுவும் நிறைவேறும். மஃரிபுக்குப் பின்னர் ஓதினாலும் நிறைவேறும். அவையும் திக்ர் உடைய நேரங்களே!
  • ஏதாவது திக்ர்களுக்கு இரவில் ஒரு குறித்த நேரம் இருப்பதாக ஏதாவது ஆதாரங்கள் வந்தால், - உதாரணமாக, பகராவின் இறுதி இரு வசனங்களை ஓதுவது போன்று – அவை சூரியன் மறைந்த பின்னர் இரவு நேரத்திலேயே ஓதப்படவேண்டும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

4 ஒரு முறை

பொருளும் ஆதாரமும்

அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நான், 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய எனக்கு ஏதாவது கற்றுக் கொடுங்கள்' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தைக் கேளுங்கள்;' என்று கூறினார்கள். சில நாட்களுக்குப் பிறகு, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் கேட்க ஏதாவது ஒன்றை எனக்குக் கற்றுக் கொடுங்கள்' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்: 'அப்பாஸே! அல்லாஹ்வின் தூதரின் தந்தைவழிச் சகோதரரே! இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்விடம் நல்வாழ்வைக் கேளுங்கள்' என்று என்னிடம் கூறினார்கள்.

இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது தரம்: வேறொரு அறிவிப்புடன் இணைந்து சரியாகியது

விளக்கம்

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் தந்தைவழிச் சகோதரர் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப், அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்கான ஒரு பிரார்த்தனையை தனக்குக் கற்றுக் கொடுக்குமாறு நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். 'மார்க்க விடயங்களிலும் இம்மை மற்றும் மறுமையிலும் எல்லா வகையான கஷ்டங்களிலிருந்தும் தீங்குகளிலிருந்தும் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தையும்; பாதுகாப்பையும் கேளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் அவருக்குக் கட்டளையிட்டார்கள்.

அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: சில நாட்களுக்குப் பிறகு, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று எனக்கு ஒரு பிரார்ததனையைக் கற்றுக் கொடுக்கச் சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரழி) அவர்களின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தி, ' அப்பாஸே! அல்லாஹ்வின் தூதரின் தந்தைவழிச் சகோதரரே!' என்று கூறி, பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை (ஆஃபியத்) கேளுங்கள், அதனால் அவன் உங்களை எல்லா கஷ்டங்களிலிருந்தும் பாதுகாத்து, இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு எல்லா வகையான நன்மைகளையும் வழங்குவான்.

பயன்கள்

  • நபி (ஸல்) அவர்கள் அதே பதிலை அப்பாஸ் (ரழி) அவர்களிடம் இரண்டாவது முறையாகக் கூறியது, அல்லாஹ்விடம் கேட்கக்கூடிய சிறந்த விஷயம் நல்ல ஆரோக்கியம் என்பதைக் காட்டுகிறது.
  • ஆரோக்கியத்தின் சிறப்பு. இது இவ்வுலகிலும் மறுவுலகிலும் உள்ள அனைத்து நன்மைகளையும் ஒன்றிணைக்கும் விடயமாகும்.
  • நபித்தோழர்கள் தங்கள் அறிவையும் நல்ல விடயங்களையும் அதிகரித்துக்கொள்வதில் கொண்டிருந்த ஆர்வமும் முயற்சியும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது.

HadeethEnc.com இல் படிக்கவும்

கேள்விகள்

இந்தப் பக்கத்தில் என்ன உள்ளது?

அனைத்தையும் உள்ளடக்கிய துஆக்கள்: ஒவ்வொன்றும் அரபியில், அதன் பொருள், அது வந்துள்ள ஹதீஸ், அதன் தரம் மற்றும் விளக்கத்துடன்.

மொழிபெயர்ப்புகள் எங்கிருந்து வருகின்றன?

மொழிபெயர்க்கப்பட்ட நபிமொழிகளின் கலைக்களஞ்சியமான HadeethEnc.com இலிருந்து. ஒவ்வொரு ஹதீஸும் அவர்கள் வெளியிட்டபடியே, அதன் ஆதாரம், தரம் மற்றும் மூலத்திற்கான இணைப்புடன் காட்டப்படுகிறது.

தினசரி நினைவூட்டல் பெற முடியுமா?

ஆம். Android க்கான இலவச Qabas செயலி ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை திக்ர்களை நினைவூட்டுகிறது, இதே கவுண்டரும் அதில் உள்ளது.