தொழுகையில் துஆக்கள்: ஆரம்பம், ருகூஃ, ஸுஜூத் மற்றும் தஷஹ்ஹுத்

ஆரம்பத் தக்பீர் முதல் ஸலாம் வரை தொழுகையில் நபி ﷺ ஓதிய துஆக்கள்.

1 ஒரு முறை

اللهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اللهُمَّ نَقِّنِي مِنْ خَطَايَايَ كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ بِالثَّلْجِ وَالْمَاءِ وَالْبَرَدِ

பொருளும் ஆதாரமும்

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (முதல்) தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சிறிது நேரம் மௌனமாக இருப்பார்கள்.

நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம்), 'அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே நீங்கள் மௌனமாக இருக்கும் போது என்ன கூறுவீர்கள்? என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் நான், அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல்மஃக்ரிப்; அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யழு மினத் தனஸ்; அல்லாஹும்மஃக்சில் கதாயாய பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பரத் என்று கூறுகிறேன் என்றார்கள்.

(பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்கும் இடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை, அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படு வதைப் போன்று என் தவறுகளைவிட்டு என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!).

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர் தரம்: சரியானது

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகைக்காக இஹ்ராம் தக்பீர் கூறினால் ஸுறா பாத்திஹா ஒத முன் சொற்ப நேரம் மௌனமாக இருப்பார்கள். அந்நேரத்தில் அவர்கள் தொழுகையை ஆரம்பிப்பதற்காக சில துஆக்களை ஒதுவார்கள். அவ்வாறான துஆக்களில் இதுவும் ஒன்றாகும். அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல்மஃக்ரிப்; அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யழு மினத் தனஸ்; அல்லாஹும்மஃக்சில் கத்தாயாய பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பரத் என்று கூறுகிறேன் என்றார்கள்.

(பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்கும் இடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை, அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படு வதைப் போன்று என் தவறுகளைவிட்டு என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங் கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!) நபியரவர்கள் இந்த துஆவில் கிழக்கும் மேற்கும் சந்திப்பது எப்படி அசாத்தியமானதோ அதே போன்று தனக்கும் தவறுகளுக்குமிடையில்; -அதற்குட்படாதாவாறு- மிகப்பெரும் இடைவெளியை ஏற்படுத்துமாறு பிரார்த்தனை புரிகிறார்கள். அவ்வாறு பாவத்திற்குள் அகப்பட்டுவிட்டால் அப்பாவக் கரையை வெள்ளை ஆடையின் அழுக்கை சுத்தப்படுத்துவது போன்று தூய்மைப்படுத்துமாறு வேண்டுகிறார்கள். தனது தவறுகளை கழுவுமாறும் அதன் சூட்டையும் சுவாலையையும் நீர் பணிக்கட்டி ஆலங்கட்டி போன்றவற்றால் தனித்து விடுமாறும் வேண்டுகிறார்கள்.

பயன்கள்

  • ஜஹ்ரியத்தான தொழுகையாக – இமாம் சப்பதமாக ஓதும் தொழுகை- இருப்பினும் துஆஉல் இஸ்திப்தாஹை -தக்பீர் கட்டியதும் ஓதும் துஆக்கள்- சப்பதமின்றி ஓதுதல்.
  • ஸஹாபாக்கள் நபியவர்களின் எல்லா நிலைகளையும் அறிந்துகொள்வதில் ஸஹாபக்களுக்கிருந்த ஆர்வம்.
  • இது தவிர துஆஉல் இஸ்திப்தாஹ் பல வடிவங்களில் -முறைகளில்- இடம்பெற்றுள்ளது. அவற்றை கண்டறிந்து அவைகள் ஒவ்வொன்றையும் ஓதிவருவது மிகவும் சிறப்பானது. அதாவது ஒரே துஆவை ஒதாது ஏனைய துஆக்களையும் மாறி மாறி ஒதுவது சிறந்து.

HadeethEnc.com இல் படிக்கவும்

2 ஒரு முறை

سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ، اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ، مِلْءَ السَّمَاوَاتِ وَمِلْءَ الْأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ

பொருளும் ஆதாரமும்

இப்னு அபீ அவ்பா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ருகூவிலிருந்து தனது முதுகை உயர்த்தினால் 'ஸமிஅல்லாஹுலிமன்ஹமிதஹ் என்று கூறிவிட்டு,

அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து மில்அஸ் ஸமாவாதி வமில்அல் அர்ழி வமில்அ மாஷிஃத மின் ஷைஇன் பஃது என்று கூறுபவர்களாக இருந்தார்கள்'

(யாஅல்லாஹ்! எங்கள் அதிபதியே! வானங்கள் மற்றும் பூமி நிரம்பும் அளவுக்கும்; நீ எதை நாடுகிறாயோ அது நிரம்பும் அளவுக்கும் உனக்கே புகழனைத்தும்.)

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் தரம்: சரியானது

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ருகூஇலிருந்து தனது முதுகை உயர்த்தினால் 'ஸமிஅல்லாஹுலிமன்ஹமிதஹ் என்று கூறுவார்கள். இதன் கருத்து : யார் அல்லாஹ்வை புகழ்கிறானோ அவனுக்கு பதிலளிப்பதோடு அவனின் புகழை ஏற்று அதற்கு கூலியும் வழங்குகிறான் என்பதாகும்'. 'அல்லாஹும்ம ரப்பனாலகல் ஹம்து மில்அஸ் ஸமாவாதி வமில்அல் அர்ழி வமில்அ மாஷிஃத மின் ஷையின் பஃது ' என்பது வானங்கள் மற்றும் பூமி அதற்கிடைப்பட்டவை அவன் நாடிய எல்லாவிடயங்களில் அவனின் புகழ்நிறைந்துள்ளது என்பாகும்.

பயன்கள்

  • தொழுபவர் ருகூஉலிருந்து தனது தலையை உயர்த்தினால் இந்த திக்ரை கூறுவது விரும்பத்தக்கது.
  • ருகூஉலிருந்து நிலைக்கு வந்த பின் அமைதியாகவும் நேராகவும் இருப்பது தொழுகையில் உள்ள மார்க்க வழிகாட்டலாகும். ஏனெனில் இந்த திக்ரை நிலைக்கு வந்து அமைதியாக இருந்தே ஓத வேண்டும்.
  • இந்த திக்ர் கடமையான, ஸுன்னத்தான அனைத்து தொழுகைகளிலும் ஓத வேண்டும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

3 ஒரு முறை

اللَّهمَّ اغْفِرْ لي، وارْحَمْنِي، وعافِني، واهْدِني، وارزقْنِي

பொருளும் ஆதாரமும்

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கும் இடையில் 'அல்லாஹும்மஃபிர்லீ வர்ஹம்னீ வஆபினீ வஹ்தினீ வர்ஸுக்னீ' என்று கூறுபவர்களாக இருந்தார்கள்;. பொருள் : யாஅல்லாஹ் ! என்னை மன்னித்து விடுவாயாக, எனக்குக் கிருபை செய்வாயாக ,எனக்கு ஆரோக்கியத்தைத் தருவாயாக, எனக்கு நேர்வழி காட்டிடுவாயாக, எனக்கு வாழ்வாதாரம் வழங்குவாயாக'.

இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர் தரம்: துணை ஆதாரங்கள் ஊடாக ஆதாரமாகக்கொள்ள முடியுமானது (ஹஸன்)

விளக்கம்

ஒரு முஸ்லிமுக்கு மிகவும் தேவைப்படுகின்ற, இம்மை மறுமை நலன்களை உள்ளடக்கிய ஐந்து மகத்தான பிரார்தனைகள் உள்ளடங்கிய ஒரு துஆவை தனது தொழுகையில், இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் ஓதக் கூடியவர்களாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் திகழ்ந்தார்கள். அதில் நபியவர்கள் பாவங்களுக்கு மன்னிப்புக் கோரி, அவற்றை மறைத்து, அழித்து விடுமாறும், அருளை நிறைவாகத் தருமாறும், மார்க்கத்தில் சந்தேகங்ள் மற்றும் மனோ இச்சைகளைப் பின்பற்றுவதை விட்டும், உடலில் நோய் நொடிகளை விட்டும், ஆரோக்கியத்தையும், ஈடேற்றத்தையும் தருமாறும் வேண்டுகிறார்கள். அத்துடன் அல்லாஹ்விடம் சத்தியத்தியத்தைப் பின்பற்றி வாழ்வதற்கும், அதில் நிலைத்திருக்கவும், மேலும் ஈமான், அறிவு, நற்செயல் ஆகிய ரிஸ்கையும் தூய்மையும் ஹலாலும் நிறைந்த செல்வமெனும் ரிஸ்கையும் தருமாறு வேண்டுகிறார்கள்.

பயன்கள்

  • இந்த துஆவை இரண்டு ஸஜ்தாவுக்கிடையிலான இருப்பில் ஓதுவது நபிவழியாகும் .
  • இம்மை மறுமையின் நலன்களை உள்ளடக்கியுள்ளதால் இந்தப் பிராரத்தனைகளின் சிறப்பு தெளிவானது.

HadeethEnc.com இல் படிக்கவும்

4 ஒரு முறை

اللهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ دِقَّهُ، وَجِلَّهُ، وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ

பொருளும் ஆதாரமும்

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸுஜுதில் 'அல்லாஹும்மஃபிர்லீ தன்பீ குல்லாஹு திக்கஹு வஜில்லஹு வஅவ்வலஹு வஆகிரஹு வஅலானிய(த்)தஹு வஸிர்ரஹு' என்று கூறுவார்கள்.

இதன் பொருள் : யாஅல்லாஹ்! என் பாவத்தில் சிறியதையும், பெரியதையும், முதலாவதையும், கடைசியானதையும், பகிரங்கமானதையும், இரகசியமானதையும் மன்னிப்பாயாக.

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் தரம்: சரியானது

விளக்கம்

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள், ஸஜ்தாவில் இருக்கும் போது இவ்வாறு துஆ செய்தார்கள்: யா அல்லாஹ்! என் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக' அதாவது, யாஅல்லாஹ் என் பாவங்களை மூடி மறைப்பாயாக, அவற்றின் விளைவுகளிலிருந்து என்னைக் பாதுகாத்து, முழுமையாக மன்னித்து, பரிசுத்தப்படுத்துமாறு வேண்டுகிறேன், சிறிய பாவங்களையும், பெரிய பாவங்களையும், முதல் செய்த பாவத்தையும், இறுதியாக செய்த பாவத்தையும், அவற்றுக்கு நடுவிலுள்ள அனைத்தையும், வெளிப்படையாக செய்த பாவங்களையும், ரகசியமாக செய்த பாவங்களையும் (அல்லாஹ் மட்டுமே அறிந்த பாவங்களையும்) மன்னிக்குமாறும் வேண்டுகிறேன்.

பயன்கள்

  • இப்னு கய்யிம் (رحمه الله) அவர்களின் விளக்கம்: சிறியதும் பெரியதும், மிகச்சிறியதும் மிகப்பெரியதும் வெளிப்படையானதும் மறைவானதும், ஆரம்பமாக செய்ததும் இறுதியாக செய்ததும் ஆகிய அனைத்து பாவங்களுக்கும் மன்னிப்பு கேட்டல். இவ்வாறு எல்லா வகையான பாவங்களையும் உள்ளடக்கி கேட்டிருப்பது மனிதன் அறிந்த பாவங்களையும், அறியாமல் செய்த பாவங்களையும் கூட உள்ளடக்கி தௌபா (இரட்சிப்பாக) வாக மாற்றுவதாக அமையும்.
  • சிறிய பாவம் (الدق)' அத்திக்கு' ஆரம்பமாகக் குறிப்பிடப்பட்டதற்கான காரணம் : துஆ செய்பவர் தன் வேண்டுகோளில் சிறியதிலிருந்து பெரியதிற்கு படிப்படியாக உயர்ந்து செல்கிறார் என்பதாகும். பெரும்பாலான நேரங்களில், சிறிய பாவங்களை அலட்சியமாக செய்வதாலும் அதில் தொடர்ச்சியாக இருப்பதினாலும் பெரிய பாவங்கள் உருவாகின்றன. ஆகவே, பெரிய பாவங்களுக்கு வழிவகுக்கும் சிறிய பாவங்கள் முதலில் குறிப்பிடப்பட்டன. அந்த வகையில் பெரிய பாவத்திற்கு வழிவகுக்கின்றவற்றை முதலில் குறிப்பிடுவதே பொருத்தமாகும்.
  • அல்லாஹ்விடம் சிறிய மற்றும்; பெரிய மற்றும் எல்லா பாவங்களிலிருந்தும் மனமார வருந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும். அத்துடன் துஆ செய்வதில் பணிவும், தாழ்மையும் இருக்க வேண்டும்.
  • இமாம் நவவி (رحمه الله) அவர்கள் : இங்குள்ள சில வார்த்தைகள் மற்றவற்றுக்குப் பயன்படா விட்டாலும், பிரார்த்தனையை உறுதிப்படுத்தும் பல வார்த்தைகள் இங்கே உள்ளன என குறிப்பிடுகிறார்.

HadeethEnc.com இல் படிக்கவும்

5 ஒரு முறை

اللهُمَّ أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ

பொருளும் ஆதாரமும்

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : ஒரு நாள் இரவில் படுக்கை விரிப்பில் நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைக் காணவில்லை. அவர்களை நான் தேடியபோது எனது கை அவர்களது உட்கால்ப் பாதங்களைத் தொட்டது. அவை நட்டிவைக்கப் பட்டிருந்தன. அவர்கள் பள்ளிவாசலில் இருந்தார்கள். அவர்கள் இவ்வாறு கூறிக் கொண்டிருந்தார்கள்: யா அல்லாஹ்! உன் திருப்தியைக் கொண்டு உனது கோபத்தை விட்டும், உன்னிடமுள்ள ஈடேற்றத்தைக் கொண்டு உன் தண்டனையை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். உன்னைக் கொண்டே, உன்னை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். நீ உன்னைப் புகழ்ந்தது போல, என்னால் உன்னைப் புகழ்ந்து முடிக்க முடியாது.

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் தரம்: சரியானது

விளக்கம்

ஆஇஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் நபியவர்களுக்கு அருகாமையில் உறங்கிக் கொண்டிருந்தேன். திடீரென இரவில் அவர்களைக் காணவில்லை. அப்போது, அவர்கள் அறையில் இரவுத் தொழுகை தொழும் இடத்தைத் தொட்டுப் பார்த்தேன். அங்கு இரு பாதங்களும் நேராக இருக்க, அவர்கள் ஸுஜூதில் இருந்துகொண்டு, இவ்வாறு கூறிக்கொண்டிருந்தார்கள்:

“நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்” (அதாவது பாதுகாக்குமாறு உதவி தேடுகின்றேன்) “உன் திருப்தியைக் கொண்டு உனது கோபத்தை விட்டும்” (என் மீதோ, எனது சமுதாயம் மீதோ நீ கோபப்படுவதை விட்டும்) உன்னிடமுள்ள ஈடேற்றத்தைக் கொண்டு (உனது அதிக மன்னிப்பைக் கொண்டு) உன் தண்டனையை விட்டும் “உன்னைக் கொண்டே, உன்னை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன்.” (உனது அழகு, மற்றும் கண்ணியத்தின் பண்புகளைக் கொண்டு. நீயே உன்னை விட்டும் பாதுகாப்பாய். அல்லாஹ்விடமிருந்து தப்பி ஒதுங்குவதற்கான இடம் அவனிடத்தைத் தவிர வேறில்லை). “என்னால் உன்னைப் புகழ்ந்து முடிக்க முடியாது”. (நான் எவ்வளவு முயற்சித்தாலும், உனது பேருபகாரங்களையும், அருட்கொடைகளையும் என்னால் அளவிட முடியாது என்பதால், உனக்குத் தகுதியான அளவு உன்னைப் புகழ்ந்து முடிக்கவும் இயலாது.) “நீ உன்னைப் புகழ்ந்தது போல” நீ மாத்திரமே உனக்குப் பொருத்தமான விதத்தில் உன்னைப் புகழ்ந்துள்ளாய். எனவே, யாரால் உன்னைப் புகழும் கடமையை சரிவரநிறைவேற்றமுடியும்?

பயன்கள்

  • ஸுஜூதில் இந்த துஆக்களை ஓதுவது விரும்பத்தக்கதாகும்.
  • மைறக் கூறுகின்றார்கள் : நஸாஇயின் ஓர் அறிவிப்பில், 'நபயிவர்கள் இந்த துஆவை, தொழுது முடிந்து படுக்கைக்கு வந்தால் ஓதுவார்கள்' என்றும் உள்ளது.
  • அல்லாஹ்வை அவனது பண்புகளைக் கொண்டு புகழ்வதும், அல்குர்ஆன், ஸுன்னாவில் வந்துள்ள பெயர்களைக் கொண்டு அவனை அழைப்பதும் விரும்பத்தகதாகும்.
  • இது ருகூஉ மற்றும் ஸுஜூதில் இறைவனை மகத்துவப்படுத்துவதை உணர்த்துகின்றது.
  • அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாப்புத் தேட அனுமதியுள்ளது போன்று, அல்லாஹ்வின் பண்புகளைக் கொண்டு பாதுகாப்புத் தேடவும் அனுமதியுள்ளது.
  • கத்தாபீ (ரஹ்) இவ்வாறு கூறுகின்றார்கள்: இவ்வார்த்தையில் துல்லியமான ஓர் அர்த்தம் உள்ளது. அதாவது இங்கு நபியவர்கள், அல்லாஹ்வைக் கொண்டே, அவனது திருப்தியின் மூலம் கோபத்தை விட்டுப் பாதுகாக்குமாறும், அவனது மன்னிப்பின் மூலம் தண்டனையை விட்டும் பாதுகாக்குமாறும் கேட்கின்றார்கள். கோபமும், திருப்தியும் நேரெதிரான இரு அம்சங்கள். இவ்வாறு தான் மன்னிப்பும் தண்டனையும். இவ்வாறே, எதிர் இல்லாத ஒன்றாகிய 'அல்லாஹ்வை' வந்தடைந்த போது, அவனைக் கொண்டு அவனை விட்டுமே பாதுகாப்புத் தேடுகின்றார்கள். அதன் அர்த்தம் என்னவென்றால், அவனுக்கு கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய வணக்கங்களில் வரும் குறைகளை விட்டும் பாவமன்னிப்புத் தேடுவதாகும். "என்னால் உன்னைப் புகழ்ந்து முடிக்க முடியாது." என்றால், நான் அதற்கு சக்திபெறமாட்டேன் என்பதாகும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

6 ஒரு முறை

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ، وَمِنْ عَذَابِ النَّارِ، وَمِنْ فِتْنَةِ المَحْيَا وَالمَمَاتِ، وَمِنْ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ

பொருளும் ஆதாரமும்

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னாரி வமின் ஃபித்னதில் மஹ்யா வல் மமாத், வமின் ஃபித்னதில் மஸீஹித் தஜ்ஜால்.என்று -இறுதி தஷஹ்ஹுதின் பின் பிரார்திக்கக் கூடியவராக இருந்தார்கள்: பொருள்: இறைவா! நான் உன்னிடம் கப்ரின் வேதனையிலிருந்தும், நரகின்; வேதனையிலிருந்தும், வாழ்வு மற்றும் இறப்பின் சோதனையிலிருந்தும், தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்திலிருந்தும்; பாதுகாப்பு தேடுகிறேன்.

முஸ்லிமின் அறிவிப்பில் : 'உங்களில் ஒருவர் கடைசி தஷஹ்ஹூதை ஓதி முடித்த பின், நரக வேதனை, கப்ரு வேதனை, வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை, தஜ்ஜால் மூலம் ஏற்படும் தீங்கு ஆகிய நான்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடட்டும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர் தரம்: சரியானது

விளக்கம்

தொழுகையில் இறுதி தஷஹ்ஹுத் ஒதியதன் பின் ஸலாம் கொடுப்பதற்கு முன் நான்கு விடயங்களிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடக்கூடியவராக இருந்தார்கள். எனவே நாமும் அவற்றிலிருந்து பாதுகாப்புத் தேடி பிராத்திக்க வேண்டும் என்றும் எமக்கு கட்டளையிடுகிறார்கள்.

முதலாவது: கப்ரின் வேதனை

இரண்டாவது: மறுமை நாளின் நரக வேதனை.

மூன்றாவது: உலக வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை : அதாவது உலக வாழ்வின் சோதனை என்பது உலகில் தடைசெய்யப்பட்ட ஆசைகள் மற்றும் வீணான சந்தேகங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். மரணத்தின் சோதனை மரணத் தருவாயில் இஸ்லாத்ததை விட்டு விலகிச் செல்லுதல் அல்லது ஸுன்னாவிலிருந்து தடம்புரலுதல் அல்லது கப்ரில் நிகழும் இருமலக்குகளின் விசாரணை குறித்த சோதனை போன்றவற்றைக் இது குறிக்கும்.

நான்காவது : மறுமை நெருங்குகையில் இறுதிக் காலத்தில் வெளிப்படும் தஜ்ஜாலின் சோதனை : இவனால் அடியார்கள் அதிகம் சோதனைக்குள்ளாவார்கள். அந்நேரத்தில் அவனின் சோதனையும் வழிகெடுப்பும் மிகவும் உச்ச நிலையில் இருப்பதாலே இங்கு விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பயன்கள்

  • இங்கு குறிப்பிடப்பட்ட பாதுகாப்புத் தேடும் பிரார்த்தனையானது பிரார்த்தனைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இம்மை மறுமையின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கவல்ல விடயங்களை உள்ளடக்கியிருப்பதாலும் இது கருத்துச் செரிவுமிக்கதாகவும் காணப்படுகிறது.
  • மண்ணறை வேதனை உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டிருத்தல்.
  • சோதனைகளின் அபாயமும், இதிலிருந்து தப்பித்துக்கொள்ள அல்லாஹ்விடம் உதவி தேடி பிரார்த்திப்பதன் முக்கயத்துவமும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளமை.
  • தஜ்ஜாலின் வருகை உறுதிப்படுத்தப் பட்டிருப்பதுடன் அவனின் மிகப்பெரும் சோதனையும் குறிப்பிடப்பட்டிருத்தல்.
  • இறுதி தஷஹ்ஹூதின் பின் இந்த துஆவை ஓதுவது முஸ்தஹப்பாகும்.
  • நல்ல காரியங்களின் பின் இந்த துஆவை ஓதுவது (முஸ்தஹப்பாகும்-) வரவேற்கத்தக்கதாகும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

7 ஒரு முறை

பொருளும் ஆதாரமும்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள் : 'ஓர் அடியான் ஸுஜூத் செய்து கொண்டிருக்கும் நிலையில்தான் தனது இரட்சகனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறான், ஆகவே அந்நிலையில் அதிகமாக பிரார்த்தனை செய்யுங்கள்'.

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் தரம்: சரியானது

விளக்கம்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு அடியான் அவன் ஸுஜூதில் இருக்கும் நிலையில் தனது இரட்சகனுக்கு மிகவும் நெருக்கமானவனாக உள்ளான் என்பதை தெளிவு படுத்துகிறார்கள். தொழும் ஒருவர் தனது மேனியின் மிகவும் உயர்ந்த மேன்மைமிக்க பகுதியான நெற்றியை அல்லாஹ்வுக்கு பணிந்து, அடக்கமாக தரையில் வைக்கும் இடம் அவன் ஸுஜூதில் இருக்கும் நிலையாகும்.

சொல்லினாலும் மற்றும் செயலினாலும் அல்லாஹ்வுக்கு பணிந்து அடக்கமாக இருக்கும் நிலை ஸுஜூதில் காணப்படுவதால் அந்நிலையில் இருக்கும் வேளை அதிகம் பிரார்தனை புரியுமாறு நபியவர்கள் கட்டளைப் பிரப்பித்துள்ளார்கள்.

பயன்கள்

  • அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடப்பது அல்லாஹ்வுடனான நெருக்கத்தை அதிகரிக்கிறது.
  • ஸுஜூதில் அதிகம் பிராரத்திப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். அது துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் சந்தர்ப்பங்களில் ஒன்றாகும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

கேள்விகள்

இந்தப் பக்கத்தில் என்ன உள்ளது?

தொழுகையில் ஓதும் துஆக்கள்: ஒவ்வொன்றும் அரபியில், அதன் பொருள், அது வந்துள்ள ஹதீஸ், அதன் தரம் மற்றும் விளக்கத்துடன்.

மொழிபெயர்ப்புகள் எங்கிருந்து வருகின்றன?

மொழிபெயர்க்கப்பட்ட நபிமொழிகளின் கலைக்களஞ்சியமான HadeethEnc.com இலிருந்து. ஒவ்வொரு ஹதீஸும் அவர்கள் வெளியிட்டபடியே, அதன் ஆதாரம், தரம் மற்றும் மூலத்திற்கான இணைப்புடன் காட்டப்படுகிறது.

தினசரி நினைவூட்டல் பெற முடியுமா?

ஆம். Android க்கான இலவச Qabas செயலி ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை திக்ர்களை நினைவூட்டுகிறது, இதே கவுண்டரும் அதில் உள்ளது.