قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ ١
1. (நபியே! நீர் பிரார்த்தனை செய்து) கூறுவீராக அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.
மொழிபெயர்ப்பு: Tamil Translation - Abdulhamid Baqawi
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ ١
1. (நபியே! நீர் பிரார்த்தனை செய்து) கூறுவீராக அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.
مِن شَرِّ مَا خَلَقَ ٢
2. அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கை விட்டும்,
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ٣
3. (அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கை விட்டும்,
وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِي ٱلۡعُقَدِ ٤
4. முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும்,
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ٥
5. பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
ஸூரா Al-Falaq இல் 5 வசனங்கள் உள்ளன. இது குர்ஆனின் 113 ஆவது ஸூரா.
ஸூரா Al-Falaq ஒரு மக்கீ ஸூரா.
ஸூரா Al-Falaq ஜுஸ்உ 30 இல் உள்ளது.
ஆம். இந்தப் பக்கத்தின் மேலே இயக்கு பொத்தானை அழுத்துங்கள், அல்லது எந்த வசனத்திலிருந்தும் தொடங்குங்கள். Qabas செயலியில் இதை ஆஃப்லைனில் கேட்கப் பதிவிறக்கவும் முடியும்.