ஸூரா Al-Fatihah الفاتحة

மொழிபெயர்ப்பு: Tamil Translation - Abdulhamid Baqawi

1:1

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ ١

1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)

1:2

ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ٢

2. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து தகுந்த முறையில் பக்குவப்படுத்துபவன்.

1:3

ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ ٣

3. (அவன்தான்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன்,

1:4

مَٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ ٤

4. தீர்ப்பு நாளின் அதிபதி(யும் அவனே).

1:5

إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ ٥

5. (அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்.

1:6

ٱهۡدِنَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ ٦

6. நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!

1:7

صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ ٧

7. (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி.(உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல.

கேள்விகள்

ஸூரா Al-Fatihah இல் எத்தனை வசனங்கள் உள்ளன?

ஸூரா Al-Fatihah இல் 7 வசனங்கள் உள்ளன. இது குர்ஆனின் 1 ஆவது ஸூரா.

ஸூரா Al-Fatihah மக்கீயா, மதனீயா?

ஸூரா Al-Fatihah ஒரு மக்கீ ஸூரா.

ஸூரா Al-Fatihah எந்த ஜுஸ்உவில் உள்ளது?

ஸூரா Al-Fatihah ஜுஸ்உ 1 இல் உள்ளது.

ஸூரா Al-Fatihah ஐக் கேட்க முடியுமா?

ஆம். இந்தப் பக்கத்தின் மேலே இயக்கு பொத்தானை அழுத்துங்கள், அல்லது எந்த வசனத்திலிருந்தும் தொடங்குங்கள். Qabas செயலியில் இதை ஆஃப்லைனில் கேட்கப் பதிவிறக்கவும் முடியும்.