பள்ளிவாசலில் நுழையும்போதும் வெளியேறும்போதும் துஆ

பள்ளிவாசலின் வாசலில், உள்ளே செல்லும்போதும் வெளியே வரும்போதும் கூறும் வார்த்தைகள்.

1 ஒரு முறை

أعوذ بالله العظيم، وبوجهه الكريم، وسلطانه القديم، من الشيطان الرَّجِيم

பொருளும் ஆதாரமும்

அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது : ''அஊது பில்லாஹில் அழீம் வபிவஜ்ஹிஹில் கரீம் வஸுல்தானிஹில் கதீம் மினஷ் ஷைய்தானிர் ரஜீம்'' என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்;. இதனை நபியவர்கள் கூறினார்களா? என்று கேட்டதற்கு ஆம் என்று நான் கூறினேன். இந்தப் பிரார்த்தனையை கூறினால் இந்நாள் முழுவதும் என்னிடமிருந்து பாதுகாப்புப் பெறுகிறான் என்று ஷைத்தான் கூறுகிறான்.

திக்ரின் பொருள் : மகத்துவம் கொண்ட அல்லாஹ்வைக் கொண்டும், அவனது அழகிய திருமுகத்தைக் கொண்டும்,நிலையான மேலாதிக்கத்தைக் கொண்டும், விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார் தரம்: நம்பகமானது (ஹஸன்)

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது மேற் குறிப்பிட்ட திக்ரை கூறக் கூடியவர்களாக இருந்தார்கள் அதன் விளக்கம் பின்வருமாறு: (أعوذ بالله العظيم) 'அஊது பில்லாஹில் அழீம்' என்றால் அல்லாஹ்வைக் கொண்டும் அவனின் பண்புகளைக் கொண்டும் நான் புகழிடம் தேடி பாதுகப்பும் கோருகிறேன். (وبوجهه الكريم) வபிவஜ்ஹிஹி கரீம் என்றால் : பெரும் கொடையாளானாகிய அவனின் திருமுகத்தைக் கொண்டும் என்று பொருளாகும். (وسلطانه) வஸுல்தானிஹி என்றால் (அவனின் அதிகராம்) அதாவது அவனின் மேலான்மை மற்றும் வல்லமை மற்றும் அதிகாரம் அவன் விரும்பும் எந்தப்படைப்பின் மீதும் இருக்கும் என்பதாகும். (القديم) (அல் கதீம்) என்பது நித்தியமான முடிவே இல்லாத தொன்று தொட்டே உள்ள என்று பொருளாகும். (من الشيطان الرجيم) 'மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' என்பது அல்லாஹ்வின் கருணையிலிருந்து விரட்டப்பட்டு தூரமாக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து என்பதாகும். இதன் கருத்து : யா அல்லாஹ் : ஷைத்தானின் தீய ஊசாலட்டத்திலிருந்தும், அவனின் தூண்டுதல் களிலிருந்தும்,அவனுடைய அடிச்சுவடு களிலிருந்தும், அவனுடைய தீய எண்ணங்களிலிருந்தும், அவனுடைய வழிகேட்டிலிருந்தும், தீய விஷயங்களை எனக்குக் கவர்ச்சிகரமானதாகக் காட்டுவதிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக.அவனே வழிகேட்டிற்கும் அறியாமைக்கும் தூண்டுபவனும் ஆவான். அப்துல்லாஹ்; இப்னு அம்ர் (ரழி) அவர்களிடம்; ஒருவர், 'நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இதை மாத்திரமா சொன்னார்கள்?' என்று கேட்டார். என்றார். அதற்கு அவர், 'ஆம்' என் கூறினார்.

ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும்போது இந்த துஆவை ஓதினால், இந்த துஆவை ஓதிக் கொண்டே பள்ளிவாசலுக்குள் நுழைந்த இந்த மனிதர் என்னிடமிருந்து இரவும் பகலும் பாதுகாப்புப் பெற்றுள்ளார் என்று ஷைத்தான் கூறுவான்.

பயன்கள்

  • பள்ளிக்குள் நுழையும் போது ஹதீஸில் குறிப்பிடப்பட்ட இந்த பிரார்த்தனையை ஓதுவதன் சிறப்பு. அது அவரை ஷைத்தானிடமிருந்து நாள் முழுவதும் பாதுகாக்கிறது.
  • ஷைத்தானிடமிருந்து எச்சரிக்கையாக இருத்தல் அவன் எப்போதும் முஸ்லிம்களை வழிதவறச் செய்து தீயவிடயங்களின் பால் தூண்டி வழிகெடிப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கிறான்.
  • இந்த துஆவின் மூலம் ஒரு மனிதனுக்கு அவனின் உள்ளத்தில் காணப்படும் அல்லாஹ்வில் கொண்ட விசுவாசம் மற்றும் தூய்மையின் அடிப்படையிலும், அல்லாஹ்வின் வாக்குறுதியின் மீதுள்ள ஆழமான நம்பிக்கையின் அடிப்படையிலும் ஷைத்தானின் வழிகேட்டிலிருந்தும் அவனின் தூண்டுதல்களிருந்தும் பாதுகாப்புக் கிடைக்கிறது.

HadeethEnc.com இல் படிக்கவும்

2 ஒரு முறை

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

பொருளும் ஆதாரமும்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுமைத் அல்லது அபூ உஸைத் அறிவிக்கிறார்: உங்களில் ஒருவர் பள்ளிக்குள் (மஸ்ஜிதினுள்) நுழைகையில் 'அல்லாஹும்மப்பதஹ்லீ அப்வாப ரஹ்மதிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் உனது அருளின் வாயில்களை எனக்கு திறந்து தருவாயாக). அவர் பள்ளியிலிருந்து வெளியேறும் போது 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் நான் உனது அருளை வேண்டுகிறேன்').

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் தரம்: சரியானது

விளக்கம்

மஸ்ஜிதிற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் ஓத வேண்டிய துஆவை தனது சமூகத்திற்கு கற்றுக்கொடுத்து வழிப்படுத்தினார்கள். பள்ளியினுள் நுழையும் போது அல்லாஹும்மப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக' என்று கூற வேண்டும் அதாவது அல்லாஹ்வின் கருணையை பெற்றுக்கொள்ளக் கூடிய வழிகளை தயார்படுத்தித் தருமாறு அல்லாஹ்விடம் அடியான் வேண்டுகிறான். மஸ்ஜிதிலிருந்து வெளியேறும் போது : 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக' என்ற துஆவை ஓத வேண்டும். இதன் கருத்து அடியான் ஹலாலான வாழ்வாதாரத்தை அல்லாஹ்வின் அருட்கொடையிலிருந்து தருமாறு வேண்டுகிறான்.

பயன்கள்

  • மஸ்ஜிதினுள் நுழையும் போதும், வெளியேறும் போதும் இந்த பிராத்தனையை கூறுவது முஸ்தஹப்பாகும்(வரவேற்கத்தக்கதாகும்).
  • இந்த ஹதீஸில் மஸ்ஜிதில் நுழையும் போது அல்லாஹ்வின் அருளையும் வெளியேறும் போது அவனது அருட்கொடையையும் விஷேடமாக குறிப்பிட்டிருப்தற்கான காரணம் பள்ளியினுள் நுழைபவர் அல்லாஹ்வை நெருங்குவதினூடாக சுவர்க்கத்தின் பால் தன்னை நெருக்கிவைக்கக் கூடிய விடயங்களில் ஈடுபடுவதினால் அருளைக் கேட்பது பொருத்தமானது, அதே போன்று பள்ளியிலிருந்து வெளியேறுபவர் அல்லாஹ்வின் அருளில் வாழ்வாதாரத்தைத் தேடி பூமியில் அலைந்து திரிந்து பாடுபடுகிறார். ஆகையால் வெளியேறும் போது அருளைக் கோரியிருப்பது பொருத்தமானது.
  • இந்த திக்ருகளை மஸ்ஜிதில் நுழையும் போதும் வெளியேறும் போதும் கூறுதல்.

HadeethEnc.com இல் படிக்கவும்

கேள்விகள்

இந்தப் பக்கத்தில் என்ன உள்ளது?

பள்ளிவாசல் துஆ: ஒவ்வொன்றும் அரபியில், அதன் பொருள், அது வந்துள்ள ஹதீஸ், அதன் தரம் மற்றும் விளக்கத்துடன்.

மொழிபெயர்ப்புகள் எங்கிருந்து வருகின்றன?

மொழிபெயர்க்கப்பட்ட நபிமொழிகளின் கலைக்களஞ்சியமான HadeethEnc.com இலிருந்து. ஒவ்வொரு ஹதீஸும் அவர்கள் வெளியிட்டபடியே, அதன் ஆதாரம், தரம் மற்றும் மூலத்திற்கான இணைப்புடன் காட்டப்படுகிறது.

தினசரி நினைவூட்டல் பெற முடியுமா?

ஆம். Android க்கான இலவச Qabas செயலி ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை திக்ர்களை நினைவூட்டுகிறது, இதே கவுண்டரும் அதில் உள்ளது.