ஸூரா Al-Ma'un الماعون

மொழிபெயர்ப்பு: Tamil Translation - Abdulhamid Baqawi

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ ١

1. (நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?

فَذَٰلِكَ ٱلَّذِي يَدُعُّ ٱلۡيَتِيمَ ٢

2. (ஆதரவற்ற) அநாதைகளை வெருட்டுபவன் அவன்தான்.

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ٣

3. அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும்படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை.

فَوَيۡلٞ لِّلۡمُصَلِّينَ ٤

4. (கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான்.

ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ ٥

5. அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்.

ٱلَّذِينَ هُمۡ يُرَآءُونَ ٦

6. (மேலும்,) அவர்கள் (தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள்.

وَيَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ ٧

7. (மேலும், ஊசி போன்ற) அற்பப் பொருளையும் (இரவல் கொடுக்காது) தடுத்துக் கொள்கிறார்கள்.

கேள்விகள்

ஸூரா Al-Ma'un இல் எத்தனை வசனங்கள் உள்ளன?

ஸூரா Al-Ma'un இல் 7 வசனங்கள் உள்ளன. இது குர்ஆனின் 107 ஆவது ஸூரா.

ஸூரா Al-Ma'un மக்கீயா, மதனீயா?

ஸூரா Al-Ma'un ஒரு மக்கீ ஸூரா.

ஸூரா Al-Ma'un எந்த ஜுஸ்உவில் உள்ளது?

ஸூரா Al-Ma'un ஜுஸ்உ 30 இல் உள்ளது.

ஸூரா Al-Ma'un ஐக் கேட்க முடியுமா?

ஆம். இந்தப் பக்கத்தின் மேலே இயக்கு பொத்தானை அழுத்துங்கள், அல்லது எந்த வசனத்திலிருந்தும் தொடங்குங்கள். Qabas செயலியில் இதை ஆஃப்லைனில் கேட்கப் பதிவிறக்கவும் முடியும்.