ஸூரா Al-Fil الفيل

மொழிபெயர்ப்பு: Tamil Translation - Abdulhamid Baqawi

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِأَصۡحَٰبِ ٱلۡفِيلِ ١

1. (நபியே!) யானைப் படையினரை உமது இறைவன் எவ்வாறு (அழியச்) செய்தான் என்பதை நீர் (கவனித்துப்) பார்க்கவில்லையா?

أَلَمۡ يَجۡعَلۡ كَيۡدَهُمۡ فِي تَضۡلِيلٖ ٢

2. அவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக்கிவிட வில்லையா?

وَأَرۡسَلَ عَلَيۡهِمۡ طَيۡرًا أَبَابِيلَ ٣

3. அவர்கள் மீது பறவைகளை கூட்டங்கூட்டமாக அனுப்பிவைத்தான்.

تَرۡمِيهِم بِحِجَارَةٖ مِّن سِجِّيلٖ ٤

4. (கெட்டியான) சுடப்பட்ட சிறிய கற்களை அவை அவர்கள் மீது எறிந்தன.

فَجَعَلَهُمۡ كَعَصۡفٖ مَّأۡكُولِۭ ٥

5. அதனால், அவன் அவர்களை(ப் பறவைகளால்) கொத்தித் தின்னப்பட்ட கதிர்களைப்போல் ஆக்கி (அழித்து) விட்டான்.

கேள்விகள்

ஸூரா Al-Fil இல் எத்தனை வசனங்கள் உள்ளன?

ஸூரா Al-Fil இல் 5 வசனங்கள் உள்ளன. இது குர்ஆனின் 105 ஆவது ஸூரா.

ஸூரா Al-Fil மக்கீயா, மதனீயா?

ஸூரா Al-Fil ஒரு மக்கீ ஸூரா.

ஸூரா Al-Fil எந்த ஜுஸ்உவில் உள்ளது?

ஸூரா Al-Fil ஜுஸ்உ 30 இல் உள்ளது.

ஸூரா Al-Fil ஐக் கேட்க முடியுமா?

ஆம். இந்தப் பக்கத்தின் மேலே இயக்கு பொத்தானை அழுத்துங்கள், அல்லது எந்த வசனத்திலிருந்தும் தொடங்குங்கள். Qabas செயலியில் இதை ஆஃப்லைனில் கேட்கப் பதிவிறக்கவும் முடியும்.