உணவுக்குப் பின் துஆ

உணவு முடிந்ததும் அல்லாஹ்வைப் புகழ்ந்து கூறுவது.

1 ஒரு முறை

الحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ

பொருளும் ஆதாரமும்

ஸஹ்ல் இப்னு முஆத் இப்னி அனஸ் அவர்கள் தனது தந்தை மூலமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அறிவிக்கிறார்கள் : உணவை சாப்பிடும் ஒருவர் (அவர் சாப்பிட்டதன் பின்) 'அல்ஹம்து லில்லாஹில்லதி அத்அமனி ஹாதா வரஸகனீஹி மின்கைரி ஹவ்லின் மின்னி வலா குவ்வா என்று கூறுகிறாரோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்'

(திக்ரின் கருத்து ) எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே! அவனே எனக்கு இந்த உணவை அளித்தான். என்னிடமிருந்து எந்தவித சக்தியும் முயற்சியுமின்றியே எனக்கு இதனை அருளினான்;)

இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர் தரம்: நம்பகமானது (ஹஸன்)

விளக்கம்

உணவை உண்ணும் ஒருவர் அல்லாஹ்வை புகழவேண்டும் என நபியவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஏனெனில் அல்லாஹ்வின் உதவியின்றி அந்த உணவை பெற்றுக்கொள்வதற்கோ அதனை சாப்பிடுவதற்கான சக்தியோ தனக்குக் கிடையாது என்று தனது இயலாமையை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்வை முழுமையாக புகழ்வதை இது குறிக்கிறது. இந்தப்பிரார்த்தனையை கூறுபவருக்கு அவர் முன்செய்த சிறிய பாவங்களுக்கான இறைமன்னிப்புக் கிடைக்கும் அதற்கு அவர் தகுதிபெறுகிறார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நற்;செய்தி கூறுகிறார்கள்.

பயன்கள்

  • உணவு உண்டபின் இறுதியாக அல்லாஹ்வை புகழ்வது வரவேற்கத்தக்கது.
  • அடியார்களுக்கு உணவளித்து உணவுக்கான வழிகளை இலகுபடுத்தி அதில் பாவங்களுக்கு குற்றப்பரிகாரத்தையும் ஏற்படுத்தி வைத்திருப்பதன்; மூலம் தனது அடியார்களுக்கு அல்லாஹ் புரிந்துள்ள மகத்தான அவனின் அருள் குறித்து இந்த ஹதீஸ் தெளிவுபடுத்தியுள்ளமை.
  • அடியார்களின் விவகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே உள்ளன. அவர்களுக்கு அதில் எவ்வித ஆற்றலோ சக்தியோ கிடையாது. அடியார்களைப் பொருத்தவரை அதற்கான காரண காரியங்களில் ஈடுபடவே பணிக்கப்பட்டுள்ளான்.

HadeethEnc.com இல் படிக்கவும்

2 ஒரு முறை

பொருளும் ஆதாரமும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'உணவு உண்டதும், அல்லது பானம் அருந்தியதும் அதன் நிமித்தம் தனக்கு நன்றி செலுத்தி புகழும் அடியானை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்'.

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார் தரம்: சரியானது

விளக்கம்

அடியான் உணவு உண்ட பின்னரும் பானத்தை அருந்தியதன் பின்னரும் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி தனது இரட்டசகனின் அருட்கொடைக்கு நன்றி செலுத்தி புகழ்வது அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக்கொள்வதற்கான வழியாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெளிவுபடுத்துகிறார்கள்.

பயன்கள்

  • அல்லாஹ்வின் பெருந்தன்மை அதாவது வாழவாதாரத்தின் மூலம் பெருமைப்படுத்தி அதற்கு நன்றி செலுத்துவதினால் அவன் திருப்தியடைகின்றமை.
  • இறை திருப்தி என்பது மிகவும் சாதாரண விடயமான உண்ணல் பருகலின் பின் அல்லாஹ்வை புகழுவதின் மூலம் கிடைக்கிறது.
  • உண்ணல் பருகுதலைத் தொடரந்து அல்லாஹ்வைப் புகழ்வது உண்ணல் பருகலின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களில் ஒன்றாகும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

கேள்விகள்

இந்தப் பக்கத்தில் என்ன உள்ளது?

உணவுக்குப் பின் துஆ: ஒவ்வொன்றும் அரபியில், அதன் பொருள், அது வந்துள்ள ஹதீஸ், அதன் தரம் மற்றும் விளக்கத்துடன்.

மொழிபெயர்ப்புகள் எங்கிருந்து வருகின்றன?

மொழிபெயர்க்கப்பட்ட நபிமொழிகளின் கலைக்களஞ்சியமான HadeethEnc.com இலிருந்து. ஒவ்வொரு ஹதீஸும் அவர்கள் வெளியிட்டபடியே, அதன் ஆதாரம், தரம் மற்றும் மூலத்திற்கான இணைப்புடன் காட்டப்படுகிறது.

தினசரி நினைவூட்டல் பெற முடியுமா?

ஆம். Android க்கான இலவச Qabas செயலி ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை திக்ர்களை நினைவூட்டுகிறது, இதே கவுண்டரும் அதில் உள்ளது.