கவலை, மனக்கலக்கம் மற்றும் துன்பத்திற்கான துஆ

சிரமத்தில் நபி ﷺ கேட்ட துஆக்களும், கவலைக்கும் துக்கத்திற்கும் அவர்கள் கற்றுத்தந்தவையும்.

1 ஒரு முறை

لَا إِلَهَ إِلَّا اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

பொருளும் ஆதாரமும்

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துன்பம் நேரும் போது, 'லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல் லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ழி வ ரப்புல் அர்ஷில் கரீம்' என்று ஓதுவார்கள்.

(பொருள்: கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியணையின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியணையின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர் தரம்: சரியானது

விளக்கம்

மிகுந்த பதட்டம் மற்றும் துக்கத்தின் போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவார்கள்: 'லா இலாஹ இல்லல்லாஹ்': அல்லாஹ்வைத் தவிர வேறு உண்மையான கடவுள் இல்லை. 'அல்-அளீம்': என்பது தனது தாத் (மெய்நிலை) மற்றும் பண்புகளிலும் செயல்களிலும் (உயர்ந்த அந்தஸ்தையும் மகத்துவத்தையும் பெற்றவனாவான். 'அல்-ஹலீம்' : என்பது பாவியை உடனடியாகத் தண்டிக்காமல், மாறாக அதைத் தாமதப்படுத்தி, தனக்கு அவனை தண்டிப்பதற்கான சக்தி இருந்து, எல்லாவற்றின் மீதும் வல்லமைப் படைத்தாவனாக இருக்கும் அவன் அவனை மன்னிப்பவன் என்பது பொருளாகும் . 'லா இலாஹ இல்லல்லாஹ் ரப்புல்-அர்ஷில்-அலீம்' : அதாவது அவனே மகத்தான சிம்மாசனத்தை படைத்தவன்; 'லா இலாஹ இல்லல்லாஹ் ரபபுஸ் ஸமாவாதி வல் அர்ழி' : வானங்களையும் பூமியையும் படைத்தவன் அல்லாஹ் மட்டுமே, மேலும் அவற்றுக்கிடையே உள்ளவற்றைப் படைத்தவன், அதன் உரிமையாளன் சீர்படுத்துபத்துபவன் மற்றும் தான் விரும்புவதைக் செய்பவன் என்பது இதன் கருத்தாகும் 'ரப்புல் அர்ஷில் கரீம்' என்பது: சிறப்பான சிம்மாசனத்தைப் படைத்தவன் என்பதைக் குறிக்கும்.

பயன்கள்

  • கஷ்டம் மற்றும் சிரமம் ஏற்படும் காலங்களில், பிரார்த்தனை மூலம் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் புகழிடம் தேடுவது கடமையாகும்.
  • கஷ்ட காலங்களில் இந்த வார்த்தைகளைக் கொண்டு பிரார்த்தனை செய்வது விரும்பத்தக்கதாகும்.
  • (அளவற்ற அருளாளன்)அல்லாஹ்; தமது மாட்சியும் மகிமையும் உடைய நிலையில் உயர்ந்துள்ள அர்ஷ் (அரியாசனம்) அனைத்து படைப்புகளிலும் மிக உயர்ந்ததும்; மிகப் பெரியதும் மிகவும் மகத்தானதுமாகும். நபி முஹம்மது ﷺ அவர்கள் அதனை 'மிக மகத்தானது' என்றும் 'மிக கண்ணியமிக்கது' என்றும் வர்ணித்துள்ளார்கள்.
  • இங்கே நபியவர்கள் வானங்களையும் பூமியையும் விசேடமாக குறிப்பிட்டதற்கான காரணம் அவை நாம் காணக்கூடிய படைப்புகளிலும் மிகப் பெரியவை என்பதினாலாகும்.
  • இமாம் அத்தீபீ இந்த திக்ர் பற்றி குறிப்பிடுகையில் பின்வருமாறு கூறுகிறார்: துன்பத்தை நீக்குவதற்கு ஏற்றவாறு 'இரட்சகன்;' (ரப்) என்று குறிப்பிடுவதன் மூலம் நபியவர்கள் இந்தப் புகழை ஆரம்பித்துள்ளார்கள்;, ஏனெனில் அது தெய்வீக அக்கறையைப் பிரதிபலிக்கிறது. இதில் 'தஹ்லீல்' (அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று கூறுவது) அடங்கும், இது ஏகத்துவத்தை உள்ளடக்கியது மற்றும் மகத்துவத்தின் அனைத்து மேன்மைகளுக்கும் அடித்தளமாக உள்ளது. 'மகத்துவம்',(அல்அழமா) இது அல்லாஹ்வின் முழுமையான சக்தியைக் குறிக்கிறது. மற்றும் 'சகிப்புத்தன்மை',(அல்ஹில்ம்) இது அறிவைக் குறிக்கிறது, ஏனெனில் அறியாதவர் சகிப்புத்தன்மை அல்லது தாராள மனப்பான்மை கொண்டவராக இருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது, இவையே உன்னத பண்புகளின் அடிப்படையாகும்;.

HadeethEnc.com இல் படிக்கவும்

2 ஒரு முறை

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ، وَغَلَبَةِ الْعَدُوِّ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ

பொருளும் ஆதாரமும்

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் பின்வரும் வார்த்தைகளைக் கொண்டு துஆக் கேட்பார்கள் : யா அல்லாஹ்! கடன் சுமையை விட்டும், எதிரியின் அடக்குமுறையை விட்டும் மேலும், எதிரிகளின் நகைப்பை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.

இமாம்களான நஸாஈ மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது தரம்: சரியானது

விளக்கம்

நபியவர்கள் இங்கு சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள் :

யா அல்லாஹ்! கடன் சுமையை (அது என்னை மிகைப்பதையும், அதன் கவலை மற்றும் சோதனைகளையும்) விட்டும் நான் (வேறு யாரிடமும் இல்லாமல்) உன்னிடம் (ஒதுங்கிப்) பாதுகாப்புத் தேடுகின்றேன். அவற்றைத் திருப்பிச் செலுத்திவிட உதவுமாறு நான் உன்னிடம் கேட்கின்றேன்.

இரண்டாவது : 'எதிரியின் அடக்குமுறையை விட்டும்' (அதாவது, எதிரி என்னை அடக்கி, ஆதிக்கம் செலுத்துவதை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். அவனுடைய தொல்லைகளைத் தடுத்து, அவனை வெற்றிகொள்ள உதவுமாறு உன்னிடம் கேட்கின்றேன்.)

மூன்றாவது : 'எதிரிகளின் நகைப்பு' அதாவது, முஸ்லிம்களுக்கு ஏற்படும் சோதனைகள் மற்றும் துன்பங்களில் அவர்கள் மகிழ்ச்சியடைவது.

பயன்கள்

  • இறைவழிப்பாட்டை விட்டுத் திசைதிருப்பி, கவலைகளைக் கொண்டுவரும், கடன் போன்ற அனைத்தையும் விட்டுப் பாதுகாப்புத் தேடல்.
  • பொதுவாகக் கடனில் பிரச்சனை இல்லை. மாறாக, யாருக்கு அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் உள்ளதோ அதுவே பிரச்சனையாகும். இதுதான், 'கடன்சுமை' ஆகும்.
  • ஏனையோரின் நகைப்புக்களுக்கும், குறை கூறல்களுக்கும் இலக்காக்கும் அம்சங்களை மனிதன் தவிர்க்க வேண்டும்.
  • காபிர்களுக்கு முஸ்லிம்கள் மீதுள்ள விரோதத்தையும், முஃமின்களுக்கு சோதனைகள் ஏற்படும் போது அவர்கள் சந்தோசப்படுவதையும் உணர்த்துதல்.
  • ஒரு மனிதனுக்கு ஏற்பட்டுள்ள சோதனையைப் பார்த்து எதிரிகள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது, அந்த சோதனையை விட அவனுக்குப் பாரமாக இருக்கும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

3 ஒரு முறை

اللهم أنت عَضُدِي ونَصِيرِي، بِكَ أَحُول، وبِكَ أَصُول، وبك أقاتل

பொருளும் ஆதாரமும்

ரஸூல் (ஸல்) அவர்கள் யுத்தம் செய்யும் போது "அல்லாஹ்வே! நீயே எனக்குப் பக்கபலம்,நீயே எனக்கு உதவி செய்கிறவன்,உனது உதவியைக் கொண்டே நான் நடமாடுகிறேன்,உனது உதவியைக் கொண்டே நான் பாய்கிறேன்.மேலும் உனது உதவியைக் கொண்டே நான் சண்டையிடுகிறேன்"என்று கூறுவார்கள் என அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றர்கள்

இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார் தரம்: ஸஹீஹானது-சரியானது

விளக்கம்

ரஸூல் (ஸல்) அவர்கன் யுத்தம் செய்ய நாடினால்,அல்லது யுத்தம் செய்ய ஆரம்பித்தால் اللهم أنت ناصري ونصيري "அல்லாஹ்வே! நீயே எனக்குப் பக்கபலம்,நீயே எனக்கு உதவி செய்கிறவன்,"என்று கூறுவார்கள்.என்பதன் கருத்தாவது அல்லாஹ்வே! உன் உதவி ஒன்றைக் கொண்டே நான் ஒரு விவகாரத்திலிருந்து இன்னொரு விவகாரத்தின் பக்கம் நகர்கின்றேன்,மேலும் உன் உதவி ஒன்றைக் கொண்டே மார்க்க விரோதிகளின் மீது நான் பாய்கின்றேன்,இன்னும் உதவி ஒன்றைக் கொண்டே நான் அவர்களுடன் யுத்தம் புரிகின்றேன்,என்பதாகும்

HadeethEnc.com இல் படிக்கவும்

கேள்விகள்

இந்தப் பக்கத்தில் என்ன உள்ளது?

கவலை மற்றும் துன்பத்திற்கான துஆ: ஒவ்வொன்றும் அரபியில், அதன் பொருள், அது வந்துள்ள ஹதீஸ், அதன் தரம் மற்றும் விளக்கத்துடன்.

மொழிபெயர்ப்புகள் எங்கிருந்து வருகின்றன?

மொழிபெயர்க்கப்பட்ட நபிமொழிகளின் கலைக்களஞ்சியமான HadeethEnc.com இலிருந்து. ஒவ்வொரு ஹதீஸும் அவர்கள் வெளியிட்டபடியே, அதன் ஆதாரம், தரம் மற்றும் மூலத்திற்கான இணைப்புடன் காட்டப்படுகிறது.

தினசரி நினைவூட்டல் பெற முடியுமா?

ஆம். Android க்கான இலவச Qabas செயலி ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை திக்ர்களை நினைவூட்டுகிறது, இதே கவுண்டரும் அதில் உள்ளது.