மக்கள் கேட்கும் கேள்விகள்

பாடம் 10 / 11

அல்லாஹ் ஏன் கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுமதிக்கிறான்?

சுருக்கமான பதில்

இந்த வாழ்க்கை ஒரு சோதனை. யார் பொறுமையாளர், யார் நன்மை செய்பவர் என்பதை வெளிப்படுத்த அல்லாஹ் மக்களைக் கஷ்டத்தாலும் வசதியாலும் சோதிக்கிறான். ஒரு நம்பிக்கையாளருக்கு எந்த வேதனையும் வீணாவதில்லை: ஒரு முள் குத்துவது கூட அவருடைய சில பாவங்களை அழித்துவிடுகிறது. பொறுமையாக இருந்து அவன் பக்கம் திரும்புபவர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலியையும் கருணையையும் வாக்களிக்கிறான். சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது என்றும் குர்ஆன் வாக்களிக்கிறது, மறுமையில் முழுமையான நீதி காத்திருக்கிறது.

கபஸ் எழுதியது, அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் கரீம், தஃப்ஸீர் இப்னு கஸீர், HadeethEnc.com விளக்கங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது.

குர்ஆனிலிருந்து

وَلَنَبۡلُوَنَّكُم بِشَيۡءٖ مِّنَ ٱلۡخَوۡفِ وَٱلۡجُوعِ وَنَقۡصٖ مِّنَ ٱلۡأَمۡوَٰلِ وَٱلۡأَنفُسِ وَٱلثَّمَرَٰتِۗ وَبَشِّرِ ٱلصَّٰبِرِينَ ﴿١٥٥﴾ ٱلَّذِينَ إِذَآ أَصَٰبَتۡهُم مُّصِيبَةٞ قَالُوٓاْ إِنَّا لِلَّهِ وَإِنَّآ إِلَيۡهِ رَٰجِعُونَ ﴿١٥٦﴾ أُوْلَٰٓئِكَ عَلَيۡهِمۡ صَلَوَٰتٞ مِّن رَّبِّهِمۡ وَرَحۡمَةٞۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُهۡتَدُونَ ﴿١٥٧﴾

155. (நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும், பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவற்றில் நஷ்டத்தைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக. 156. (சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்ட போதிலும் ‘‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்'' எனக் கூறுவார்கள். 157. அவர்கள் மீதுதான் அவர்களுடைய இறைவனிடமிருந்து (மன்னிப்பும்) புகழுரைகளும் கருணையும் ஏற்படுகின்றன. மேலும், அவர்கள்தான் நேரான வழியையும் அடைந்தவர்கள்.

Al-Baqarah 2:155-157குர்ஆனில் படிக்க
வசனங்களின் விளக்கம்

155. எதிரிகள் குறித்த பயம், உணவுப்பற்றாக்குறையால் ஏற்படும் பசி, அழிதல் அல்லது பெறுவதற்கு சிரமம் ஆகியவற்றால் செல்வம் குறைதல், பேரழிவுகளினால் அல்லது அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைதலினால் ஏற்படும் உயிர்ச்சேதம், பூமியில் விளையும் பழங்களின் பற்றாக்குறை ஆகிய பல்வேறு துன்பங்களால் நிச்சயம் நாம் உங்களைச் சோதிப்போம். தூதரே! இத்தகைய துன்பங்களை பொறுமையாக எதிர்கொள்பவர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் மகிழ்ச்சி காத்திருக்கின்றது என்ற நற்செய்தியைக் கூறுவீராக.

156. அவர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அதனை ஏற்றுக்கொண்டு, நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். அவன் நாடியவாறு நம்மை ஆட்சிசெய்கின்றான். மறுமையில் அவன் பக்கமே நாம் திரும்பக்கூடியவர்கள். அவன்தான் நம்மைப்படைத்தான்; பல்வேறு அருட்கொடைகளைக்கொண்டு நம்மைச் சிறப்பித்தான். அவன் பக்கமே நாம் திரும்ப வேண்டியுள்ளது” என்று கூறுவார்கள்.

157. இத்தகைய பண்புகளால் தம்மை அலங்கரித்துக் கொண்டவர்களை அல்லாஹ் வானவர்களிடத்தில் புகழ்ந்து கூறுகிறான். அவர்கள்மீது அவனுடைய அருள் இறங்குகின்றது. அவர்கள்தாம் சத்தியத்தின் பக்கம் நேர்வழிபெற்றவர்கள்.

أَحَسِبَ ٱلنَّاسُ أَن يُتۡرَكُوٓاْ أَن يَقُولُوٓاْ ءَامَنَّا وَهُمۡ لَا يُفۡتَنُونَ ﴿٢﴾ وَلَقَدۡ فَتَنَّا ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۖ فَلَيَعۡلَمَنَّ ٱللَّهُ ٱلَّذِينَ صَدَقُواْ وَلَيَعۡلَمَنَّ ٱلۡكَٰذِبِينَ ﴿٣﴾

2. மனிதர்கள் ‘‘ நாங்கள் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதைப் பற்றி) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? 3. இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கிறோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறுகின்ற) இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். (அவ்வாறே இதில்) பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்து கொள்வான்.

Al-'Ankabut 29:2-3குர்ஆனில் படிக்க
வசனங்களின் விளக்கம்

2. “நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டோம்” என்று அவர்கள் கூறியதனால் மட்டும் அவர்கள் கூறியதன் எதார்த்தத்தை தெளிவுபடுத்தக்கூடிய அவர்கள் உண்மையான விசுவாசிகளா என்பதைச் சோதிக்காமல் விட்டுவிடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக்கொண்டார்களா? அவர்கள் எண்ணுவது போலல்ல விடயம்.

3. நாம் அவர்களுக்கு முன்னர் இருந்தவர்களைச் சோதித்தோம். வெளியில் தெரியும் விதத்தில் அல்லாஹ் அறிந்தே தீருவான். தங்களின் நம்பிக்கையில் உண்மையாளர்கள் யார், பொய்யர்கள் யார் என்பதை அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துவான்.

فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا ﴿٥﴾ إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرٗا ﴿٦﴾

5. நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது. 6. மெய்யாகவே சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது.

Ash-Sharh 94:5-6குர்ஆனில் படிக்க
வசனங்களின் விளக்கம்

5. ஆகவே நிச்சயமாக நெருக்கடி, கஷ்டத்துடனே விரிவும் இலகுவும் நிவாரணமும் இருக்கிறது.

6. நிச்சயமாக நெருக்குதல், கஷ்டத்துடனே விரிவும், இலகுவும், நிவாரணமும் இருக்கிறது. நீர் அதனை அறிந்தால் உம் சமூகம் உமக்கு அளிக்கும் துன்பங்கள், உமக்குப் பெரிதாகத் தெரியாது. அது அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதை விட்டும் உம்மைத் தடுக்கவும் மாட்டாது.

சுன்னாவிலிருந்து

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா மற்றும் அபூ ஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் கூறுகின்றார்கள்: 'ஒரு முஸ்லிமை தைக்கும் முள் உட்பட, அவனுக்கு நேரிடும் சிரமம், நோய், கவலை, துக்கம், மனவேதனைகள் ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவனின் பாவத்தின் சிலதை அல்லாஹ் மன்னித்து விடுகிறான்.'

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர் சரியானது HadeethEnc.com
விளக்கம்

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோய்கள் கவலைகள் துன்பங்கள் சோதனைகள் பேரிடர்கள் கஷ்டங்கள் பயம் பசி –உடலில் தைக்கும் முள்ளால் ஏற்படும் வலி உட்பட- அனைத்தும் அவனின் பாவத்திற்கு பரிகாரமாகவும், அவனின் குற்றங்களை அழித்துவிடும் விடயங்களாகவும்; அவை உள்ளன என தெளிவுபடுத்துகிறார்கள்.

எல்லா பாடங்களும்