பாடம் 7 / 8
மரணத்திற்குப் பின் என்ன நடக்கும்?
குர்ஆனிலிருந்து
كُلُّ نَفۡسٖ ذَآئِقَةُ ٱلۡمَوۡتِۗ وَإِنَّمَا تُوَفَّوۡنَ أُجُورَكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۖ فَمَن زُحۡزِحَ عَنِ ٱلنَّارِ وَأُدۡخِلَ ٱلۡجَنَّةَ فَقَدۡ فَازَۗ وَمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَآ إِلَّا مَتَٰعُ ٱلۡغُرُورِ ﴿١٨٥﴾
185. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை.
يَوۡمَئِذٖ يَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتٗا لِّيُرَوۡاْ أَعۡمَٰلَهُمۡ ﴿٦﴾ فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ ﴿٧﴾ وَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٖ شَرّٗا يَرَهُۥ ﴿٨﴾
6. அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள். 7. ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதையும் கண்டுகொள்வார். 8. (அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான்.
وَٱتَّقُواْ يَوۡمٗا تُرۡجَعُونَ فِيهِ إِلَى ٱللَّهِۖ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفۡسٖ مَّا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ﴿٢٨١﴾
281. மேலும், ஒரு நாளைப் பற்றிப் பயப்படுங்கள். அந்நாளில் (கடன் வாங்கியவர்கள், கொடுத்தவர்கள் ஆக) நீங்கள் (அனைவரும்) அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவீர்கள். ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவை செய்த செயல்களுக்கு முழுமையாகக் (கூலி) கொடுக்கப்படும். மேலும், அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
சுன்னாவிலிருந்து
ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே! சுவர்கத்தையும் நரகத்தையும் விதியாக்கும் இரு விடயங்கள் என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் யார் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காது மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார். யார் அல்லாஹ்வுக்கு ஏதாவது ஒன்றை இணைவைத்தவராக மரணிக்கிறாரோ அவர் நரகம் நுழைவார் என்று கூறினார்கள்.
விளக்கம்
இந்த ஹதீஸில் நபியவர்களிடம் ஒரு மனிதர் வந்து சுவர்கத்திலும் நரகத்திலும் நுழைவிக்க்கக் கூடிய இரு விடயங்கள் குறித்து கேள்வி கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காது அவனை மாத்திரமே வணங்கும் நிலையில் மரணிப்பது சுவர்க்கத்தை விதியாக்கும் விடயம் என்றும் 'ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு நிகராக அவனது உலூஹிய்யா (வணங்கி வழிபடுவதற்கு தகுதியானவன்) எனும் பண்பில் இணைகற்பிப்பித்து அல்லது அவனது ருபூபிய்யா என்ற பண்பில் (படைத்தல், பரிபாலித்தல், திட்டமிடுதல் போன்ற பண்புகளில் தனித்துவமானவன்) இணைகற்பித்து அல்லது அவனது திருநாமங்கள் மற்றும் அவனது அழகிய பண்புகளிலும் இணைகற்பித்து, மற்றும் ஏனைய விடயங்களிலும் இணை கற்பித்த நிலையில் மரணிப்பது நரகத்தை விதியாக்கும் விடயம் என பதிலளித்தார்கள்.