நல்ல அல்லது கெட்ட கனவுக்குப் பின் என்ன செய்ய வேண்டும்

நல்ல கனவுக்குப் பின்னும் அச்சுறுத்தும் கனவுக்குப் பின்னும் செய்ய வேண்டியவையும் கூற வேண்டியவையும்.

1 ஒரு முறை

பொருளும் ஆதாரமும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து வருபவையாகும். கெட்ட கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருபவையாகும். உங்களில் யாராவது பயங்கரமான ஓர் கெட்ட கனவைக் கண்டால், தனது இடப்பக்கம் உமிழ்ந்துவிட்டு, அதன் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்கட்டும். அப்போது அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தமட்டாது.

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர் தரம்: சரியானது

விளக்கம்

தூக்கத்தில் வரும் மகிழ்ச்சியூட்டும் நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து வருவதாகவும், வெறுப்பையும், கவலையையும் ஏற்படுத்தும் கெட்டகனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவதாகவும் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

யாராவது பயங்கரமான வெறுப்பான ஒரு கனவைக் கண்டால், தனது இடப்பக்கம் உமிழ்ந்து விட்டு, அதன் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்கட்டும். அப்போது அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தமட்டாது. ஏனெனில் மேலே கூறப்பட்ட அம்சங்களை, அக்கனவின் விளைவாக ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்பக்களை விட்டும் காப்பவையாக ஆக்கியுள்ளான்.

பயன்கள்

  • 'ருஃயா', 'ஹுல்ம்' ஆகிய இரண்டுமே ஒருவர் தூக்கத்தில் காணும் கனவுகளையே குறிக்கின்றது. ஆனாலும், 'ருஃயா' என்பது ஒரு மனிதன் காணும் நல்ல, அழகான அம்சங்களையும், 'ஹுல்ம்' என்பது ஒரு மனிதன் காணும் கெட்ட, அறுவறுப்பான கனவுகளையும் குறிக்கப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. இரண்டுமே நேர்மாற்றமான அர்த்தங்களிலும் பயன் படுத்தப்படலாம்.
  • கனவின் வகைகள்: 1. நல்ல கனவுகள். இவை உண்மையான கனவுகள் மற்றும் அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்திகளாகும். அவை அவர் காணும் கனவாகவோ, அல்லது அவரைப் பற்றி இன்னொருவர் காணும் கனவாகவோ இருக்கலாம். 2. மனக் கற்பனைகள்; அதாவது, மனிதன் விழிப்பில் தனக்குள் கூறிக்கொள்ளும் கற்பனைகள். மனிதனைக் கவலைப்படுத்தும் நோக்கில் ஷைத்தான் உருவாக்கும் பயங்கரமான, பயமுறுத்தவும் கவலையுறவும் செய்யும் கனவுகள்.
  • நல்ல கனவுகள் விடயத்தில் கூறப்பட்டுள்ளவை சுருக்கமாக மூன்றாகும்: அதற்காக அல்லாஹ்வைப் புகழ்தல், சந்தோசப்படல், தனக்கு வெறுப்பானவர்களுக்கல்லாமல், விருப்பமானவர்களுக்கு மாத்திரம் அதைக் கூறல்.
  • கெட்ட கனவுகள் விடயத்தில் கூறப்பட்டுள்ள ஒழுக்கங்கள் சுருக்கமாக ஐந்தாகும்: அதன் தீங்கையும், ஷைத்தானின் தீங்கையும் விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடல், தூக்கத்தில் இருந்து விழிக்கும் போது இடப்பக்கமாக மூன்று தடவைகள் உமிழ்தல், யாரிடமும் அதைக் கூறாமல் இருத்தல் , தொடர்ந்து உறங்க விரும்பினால் ஏற்கனவே உறங்கிய பக்கத்திற்கு மாற்றமான பக்கத்தில் சாய்ந்து உறங்குதல். அப்போது அவை எப்பாதிப்பையும் ஏற்படுத்தமாட்டாது.

HadeethEnc.com இல் படிக்கவும்

2 ஒரு முறை

பொருளும் ஆதாரமும்

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக அபூ ஸஈத் அல்குத்ரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு மனிதர் விருப்பமான ஒரு கனவைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது. எனவே, அவர் அதற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, அதை (மக்களுக்குக்) கூறவும். அவ்வாறல்லாமல் வெறுக்கும் ஏதாவதொன்றைக் கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வரும். அதன் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதுடன், யாரிடமும் அதைக் கூறாமலிருக்கட்டும். அப்போது, அது அவருக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தமாட்டாது.

இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார் தரம்: சரியானது

விளக்கம்

தூக்கத்தில் வரும் மகிழ்ச்சியான கனவுகள் அல்லாஹ்விடமிருந்தே வருகின்றன என்பதை நபியவர்கள் கூறிவிட்டு, அதற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, அதை ஏனையோருக்குக் கூறுமாறு அறிவுறுத்துகின்றார்கள். வெறுப்பான, கவலையான ஏதாவதொன்றைக் கண்டால், அது ஷைத்தானிடமிருந்து வரக்கூடியது எனவும், அதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதோடு, அதை யாரிடமும் கூறாமல் இருக்கட்டும் எனவும் அறிவுறுத்தியதோடு, அப்போது அது பாதிப்பை ஏற்படுத்தமாட்டாது என்றும் கூறினார்கள். அதாவது, மேற்கூறப்பட்ட அம்சங்களை, கனவினால் ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்புக்களைத் தடுக்கும் காரணிகளாக அல்லாஹ் வைத்துள்ளான்.

பயன்கள்

  • கனவின் வகைகள்: 1. நல்ல கனவுகள்; இவை உண்மையான கனவுகள் மற்றும் அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்திகளாகும். அவை அவர் காணும் கனவாகவோ, அல்லது அவரைப் பற்றி இன்னொருவர் காணும் கனவாகவோ இருக்கலாம். 2. மனக் கற்பனைகள்; அதாவது, மனிதன் விழிப்பில் தனக்குள் கூறிக்கொள்ளும் கற்பனைகள். 3. மனிதனைக் கவலைப்படுத்தும் நோக்கில் ஷைத்தான் உருவாக்கும் பயங்கரமான, பயமுறுத்தவும் கவலையுறவும் செய்யும் கனவுகள்.
  • நல்ல கனவுகள் விடயத்தில் கூறப்பட்டுள்ளவை சுருக்கமாக மூன்றாகும்: அதற்காக அல்லாஹ்வைப் புகழ்தல், சந்தோசப்படல், தனக்கு வெறுப்பானவர்களுக்கல்லாமல், விருப்பமானவர்களுக்கு மாத்திரம் அதைக் கூறல்.
  • கெட்ட கனவுகள் விடயத்தில் கூறப்பட்டுள்ள ஒழுக்கங்கள் சுருக்கமாக ஐந்தாகும்: அதன் தீங்கையும், ஷைத்தானின் தீங்கையும் விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடல், தூக்கத்தில் இருந்து விழிக்கும் போது இடப்பக்கமாக மூன்று தடவைகள் உமிழ்தல், யாரிடமும் அதைக் கூறாமல் இருத்தல், தொடர்ந்து உறங்க விரும்பினால் ஏற்கனவே உறங்கிய பக்கத்திற்கு மாற்றமான பக்கத்தில் சாய்ந்து உறங்குதல். அப்போது அவை எப்பாதிப்பையும் ஏற்படுத்தமாட்டாது.
  • இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகின்றார்கள்: இதற்கான காரணம் என்னவென்றால், ஒருவர் நல்ல கனவை தனக்கு விருப்பமில்லாத ஒருவருக்குக் கூறினால், அவர் குரோதத்தினாலும், பொறாமையினாலும் விருப்பமில்லாத விதத்தில் அதற்கு விளக்கமளிப்பார். சிலவேளை அவ்வாறே நடந்துவிடும். அல்லது முற்கூட்டியே தனக்குக் கவலையை ஏற்படுத்திக் கொள்வார். எனவேதான், தான் விரும்பாதவர்களுக்கு அதைக் கூறவேண்டாம் எனத் தடுக்கப்படுள்ளது.
  • புதிய அருட்கொடைகள் கிடைக்கும் போது அல்லாஹ்வைப் புகழ்தல் அவை நிலைத்திருப்பதற்கான ஒரு காரணமாகும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

கேள்விகள்

இந்தப் பக்கத்தில் என்ன உள்ளது?

கெட்ட கனவுக்குப் பின் துஆ: ஒவ்வொன்றும் அரபியில், அதன் பொருள், அது வந்துள்ள ஹதீஸ், அதன் தரம் மற்றும் விளக்கத்துடன்.

மொழிபெயர்ப்புகள் எங்கிருந்து வருகின்றன?

மொழிபெயர்க்கப்பட்ட நபிமொழிகளின் கலைக்களஞ்சியமான HadeethEnc.com இலிருந்து. ஒவ்வொரு ஹதீஸும் அவர்கள் வெளியிட்டபடியே, அதன் ஆதாரம், தரம் மற்றும் மூலத்திற்கான இணைப்புடன் காட்டப்படுகிறது.

தினசரி நினைவூட்டல் பெற முடியுமா?

ஆம். Android க்கான இலவச Qabas செயலி ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை திக்ர்களை நினைவூட்டுகிறது, இதே கவுண்டரும் அதில் உள்ளது.