மக்கள் கேட்கும் கேள்விகள்

பாடம் 5 / 11

இஸ்லாத்தில் பெண்களுக்கு என்ன உரிமைகள் உள்ளன?

சுருக்கமான பதில்

இஸ்லாத்தில் ஆண்களும் பெண்களும் ஒரே ஆத்மாவிலிருந்து படைக்கப்பட்டவர்கள், அல்லாஹ்விடம் சமமானவர்கள்: நம்பிக்கை கொண்டு நற்செயல் செய்யும் எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் நல்ல வாழ்க்கையும் முழுமையான கூலியும் வழங்கப்படும். சொத்து வைத்திருக்கவும், சம்பாதிக்கவும், வாரிசுரிமை பெறவும், திருமணக் கொடை (மஹ்ர்) பெறவும், திருமணத்திற்கு முன் தம் சம்மதம் கேட்கப்படவும் இஸ்லாம் பெண்களுக்கு உரிமை அளிக்கிறது, பெண்களுடன் அன்புடன் நடந்துகொள்ளுமாறு ஆண்களுக்குக் கட்டளையிடுகிறது. நபி ﷺ அவர்கள் ஒருபோதும் எந்தப் பெண்ணையும் அடித்ததில்லை.

கபஸ் எழுதியது, அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் கரீம், தஃப்ஸீர் இப்னு கஸீர், HadeethEnc.com விளக்கங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது.

குர்ஆனிலிருந்து

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُواْ رَبَّكُمُ ٱلَّذِي خَلَقَكُم مِّن نَّفۡسٖ وَٰحِدَةٖ وَخَلَقَ مِنۡهَا زَوۡجَهَا وَبَثَّ مِنۡهُمَا رِجَالٗا كَثِيرٗا وَنِسَآءٗۚ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِي تَسَآءَلُونَ بِهِۦ وَٱلۡأَرۡحَامَۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَيۡكُمۡ رَقِيبٗا ﴿١﴾

1. மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான்.

An-Nisa 4:1குர்ஆனில் படிக்க
வசனங்களின் விளக்கம்

1. மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள். அவன்தான் உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான். அந்த ஆன்மாதான் உங்களின் தந்தை ஆதமாவார். அவரிலிருந்து அவரது மனைவியும் உங்களின் தாயுமான ஹவ்வாவைப் படைத்தான். அவர்கள் இருவரிலிருந்து பல மனிதர்களை ஆண்களாகவும் பெண்களாகவும் பூமியின் பல பாகங்களிலும் பரவச் செய்தான். "அல்லாஹ்வுக்காக இவ்வாறு செய்யுமாறு உன்னிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று எந்த அல்லாஹ்வின் பெயர் கூறி நீங்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கிறீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள். உங்களை இணைக்கும் உறவுகளைத் துண்டிப்பதையும் அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டுத் தப்பமுடியாது. மாறாக அவன் அவற்றை எண்ணி வைத்துள்ளான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.

مَنۡ عَمِلَ صَٰلِحٗا مِّن ذَكَرٍ أَوۡ أُنثَىٰ وَهُوَ مُؤۡمِنٞ فَلَنُحۡيِيَنَّهُۥ حَيَوٰةٗ طَيِّبَةٗۖ وَلَنَجۡزِيَنَّهُمۡ أَجۡرَهُم بِأَحۡسَنِ مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿٩٧﴾

97. ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இம்மையில்) நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம். மேலும், (மறுமையிலோ) அவர்கள் செய்து கொண்டிருந்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.

An-Nahl 16:97குர்ஆனில் படிக்க
வசனங்களின் விளக்கம்

97. ஆணாயினும் பெண்ணாயினும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்ட நிலையில் மார்க்கம் சொன்ன பிரகாரம் நற்செயல் புரிபவராக இருந்தால் நாம் இவ்வுலகில் அவரை, இறைவிதியை ஏற்றுக்கொண்டு போதுமென்ற மனதுடன் நன்மை செய்வதற்கான வாய்ப்பும் அளித்து நல்ல வாழ்வு வாழச் செய்வோம். அவர்கள் இவ்வுலகில் செய்த நற்செயல்களுக்கு மறுமையில் மிகச் சிறந்த கூலியை நாம் வழங்கிடுவோம்.

إِنَّ ٱلۡمُسۡلِمِينَ وَٱلۡمُسۡلِمَٰتِ وَٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ وَٱلۡقَٰنِتِينَ وَٱلۡقَٰنِتَٰتِ وَٱلصَّٰدِقِينَ وَٱلصَّٰدِقَٰتِ وَٱلصَّٰبِرِينَ وَٱلصَّٰبِرَٰتِ وَٱلۡخَٰشِعِينَ وَٱلۡخَٰشِعَٰتِ وَٱلۡمُتَصَدِّقِينَ وَٱلۡمُتَصَدِّقَٰتِ وَٱلصَّٰٓئِمِينَ وَٱلصَّٰٓئِمَٰتِ وَٱلۡحَٰفِظِينَ فُرُوجَهُمۡ وَٱلۡحَٰفِظَٰتِ وَٱلذَّٰكِرِينَ ٱللَّهَ كَثِيرٗا وَٱلذَّٰكِرَٰتِ أَعَدَّ ٱللَّهُ لَهُم مَّغۡفِرَةٗ وَأَجۡرًا عَظِيمٗا ﴿٣٥﴾

35. நிச்சயமாக முஸ்லிம் ஆண்களும் பெண்களும், நம்பிக்கையுடைய ஆண்களும் பெண்களும், (இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும்) கீழ்ப்படியும் ஆண்களும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், கற்புள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.

Al-Ahzab 33:35குர்ஆனில் படிக்க
வசனங்களின் விளக்கம்

35. நிச்சயமாக அல்லாஹ்வுக்கு அடிபணியும் ஆண்களும் பெண்களும், அவன் மீது நம்பிக்கைகொண்ட ஆண்களும் பெண்களும், அவனுக்குக் கட்டுப்படக்கூடிய ஆண்களும் பெண்களும், தங்களின் நம்பிக்கையிலும் சொல்லிலும் வாய்மையான ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதிலும் பாவங்களைவிட்டுத் தவிர்ந்திருப்பதிலும் சோதனையிலும் பொறுமையைக் கடைப்பிடித்த ஆண்களும் பெண்களும், தங்களின் செல்வங்களை கடமையாக்கப்பட்ட தர்மமாகவோ, உபரியான தர்மமாகவோ செலவுசெய்யும் ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், தங்களின் வெட்கஸ்த்தலங்களை பார்க்க முடியாதவர்களுக்கு முன்னால் வெளிப்படாமல் மறைத்து பாதுகாத்துக் கொள்ளும், மானக்கேடான விபச்சாரம், அதன் ஆரம்ப செயற்பாடுகளை விட்டும் தூரமாகும் ஆண்களும் பெண்களும், உள்ளத்தாலும் நாவாலும் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூரும் ஆண்களும் பெண்களும், இவர்களுக்காக அல்லாஹ் பாவங்களிலிருந்து மன்னிப்பையும் மறுமை நாளில் சுவனம் என்னும் பெரும் கூலியையும் தயார்படுத்தி வைத்துள்ளான்.

لِّلرِّجَالِ نَصِيبٞ مِّمَّا تَرَكَ ٱلۡوَٰلِدَانِ وَٱلۡأَقۡرَبُونَ وَلِلنِّسَآءِ نَصِيبٞ مِّمَّا تَرَكَ ٱلۡوَٰلِدَانِ وَٱلۡأَقۡرَبُونَ مِمَّا قَلَّ مِنۡهُ أَوۡ كَثُرَۚ نَصِيبٗا مَّفۡرُوضٗا ﴿٧﴾

7. (இறந்துபோன) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுப்போன பொருள்களில் (அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்த போதிலும்) ஆண்களுக்குப் பாகமுண்டு. (அவ்வான்ற) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுச் சென்ற பொருள்களில், அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்தபோதிலும் பெண்களுக்கும் பாகமுண்டு. (இது அல்லாஹ்வினால்) ஏற்படுத்தப்பட்ட பாகமாகும்.

An-Nisa 4:7குர்ஆனில் படிக்க
வசனங்களின் விளக்கம்

7. தாய்தந்தையர், சகோதரர்கள் மற்றும் தந்தையின் சகோதரர்கள் போன்ற நெருங்கிய உறவினர்கள் இறந்த பின் விட்டுச் சென்ற சொத்து குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும், அவற்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு உண்டு. இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக்காலத்தில் பெண்களும் குழந்தைகளும் வாரிசு சொத்துகளை விட்டுத் தடுக்கப்பட்டது போன்றில்லாமல் மேற்கூறிய உறவினர்கள் விட்டுச்சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இந்த பங்கு அல்லாஹ்வால் தெளிவுபடுத்தப்பட்டு அளவு நிர்ணயிக்கப்பட்ட உரிமையாகும்.

وَءَاتُواْ ٱلنِّسَآءَ صَدُقَٰتِهِنَّ نِحۡلَةٗۚ فَإِن طِبۡنَ لَكُمۡ عَن شَيۡءٖ مِّنۡهُ نَفۡسٗا فَكُلُوهُ هَنِيٓـٔٗا مَّرِيٓـٔٗا ﴿٤﴾

4. நீங்கள் (திருமணம் செய்துகொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய ‘‘மஹரை' (திருமணக் கட்டணத்தை)க் கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை அவர்கள் (தங்கள்) மனமாற உங்களுக்கு விட்டுக் கொடுத்தால் அதை நீங்கள் மகிழ்ச்சியுடன் புசிக்கலாம்.

An-Nisa 4:4குர்ஆனில் படிக்க
வசனங்களின் விளக்கம்

4. பெண்களுக்கு மணக்கொடைகளை அவசியம் அளித்துவிடுங்கள். நீங்கள் அளித்த மணக்கொடையில் அவர்கள் எதையேனும் உங்களுக்கு வற்புறுத்தலின்றி மனமுவந்து விட்டுக்கொடுத்தால் அதனை தாராளமாக உண்ணுங்கள். அதில் எந்தக் குற்றமும் இல்லை.

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا يَحِلُّ لَكُمۡ أَن تَرِثُواْ ٱلنِّسَآءَ كَرۡهٗاۖ وَلَا تَعۡضُلُوهُنَّ لِتَذۡهَبُواْ بِبَعۡضِ مَآ ءَاتَيۡتُمُوهُنَّ إِلَّآ أَن يَأۡتِينَ بِفَٰحِشَةٖ مُّبَيِّنَةٖۚ وَعَاشِرُوهُنَّ بِٱلۡمَعۡرُوفِۚ فَإِن كَرِهۡتُمُوهُنَّ فَعَسَىٰٓ أَن تَكۡرَهُواْ شَيۡـٔٗا وَيَجۡعَلَ ٱللَّهُ فِيهِ خَيۡرٗا كَثِيرٗا ﴿١٩﴾

19. நம்பிக்கையாளர்களே! ஒரு பெண்ணை (அவள் உங்களை விரும்பாது வெறுக்க, இறந்தவனுடைய பொருளாக மதித்து அவளைப்) பலவந்தமாக அடைவது உங்களுக்கு ஆகுமானதல்ல. மேலும், பகிரங்கமாக ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்தாலன்றி (உங்கள் மனைவியாக வந்த) பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களை (உங்கள் வீட்டில்) நீங்கள் தடுத்தும் வைக்காதீர்கள். மேலும், அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத் தன்மையுடனும்) நடந்துகொள்ளுங்கள். அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் பல நன்மைகளை வைத்திருக்கலாம்.

An-Nisa 4:19குர்ஆனில் படிக்க
வசனங்களின் விளக்கம்

19. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! உங்களின் தந்தையரிடமிருந்து சொத்தை வாரிசாகப் பெறுவதுபோல் அவர்களின் மனைவியரை வாரிசாகப் பெறுவது உங்களுக்கு ஆகுமானதல்ல. அவர்களை நீங்கள் மணமுடித்துக் கொள்வதோ, நீங்கள் விரும்புபவர்களுக்கு மணமுடித்துக் கொடுப்பதோ, அவர்கள் திருமணம் செய்துகொள்வதைத் தடுப்பதோ கூடாது. நீங்கள் வெறுக்கும் உங்கள் மனைவியரை அவர்களுக்கு அளித்த மணக்கொடை மற்றும் ஏனையவற்றை திரும்பப் பெறும் எண்ணத்தில் அவர்களைத் துன்புறுத்துவதற்காகத் தடுத்துவைத்துக் கொள்வதும் உங்களுக்கு ஆகுமானதல்ல. ஆயினும் அவர்கள் பகிரங்கமான விபச்சாரத்தில் ஈடுபட்டாலே தவிர. அவர்கள் அவ்வாறு செய்தால் அவர்களுக்கு நீங்கள் அளித்த மணக்கொடையை திரும்பப் பெறுவதற்காக நெருக்கடியளிப்பதற்காக தடுத்து வைத்துக்கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. உங்கள் பெண்களுக்கு நோவினை கொடுக்காமலும் உபகாரம் புரிந்தும் நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள். உலக காரியம் ஒன்றுக்காக நீங்கள் அவர்களை வெறுத்தால் அவர்களைச் சகித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் வெறுக்கும் விஷயத்தில் ஏராளமான நன்மைகளை இவ்வுலகிலும் மறுமையிலும் அல்லாஹ் வைத்திருக்கலாம்.

எல்லா பாடங்களும்