ஸூரா An-Nisa, வசனம் 1

4:1

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُواْ رَبَّكُمُ ٱلَّذِي خَلَقَكُم مِّن نَّفۡسٖ وَٰحِدَةٖ وَخَلَقَ مِنۡهَا زَوۡجَهَا وَبَثَّ مِنۡهُمَا رِجَالٗا كَثِيرٗا وَنِسَآءٗۚ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِي تَسَآءَلُونَ بِهِۦ وَٱلۡأَرۡحَامَۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَيۡكُمۡ رَقِيبٗا ١

1. மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான்.

தஃப்ஸீர்

4.1. மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள். அவன்தான் உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான். அந்த ஆன்மாதான் உங்களின் தந்தை ஆதமாவார். அவரிலிருந்து அவரது மனைவியும் உங்களின் தாயுமான ஹவ்வாவைப் படைத்தான். அவர்கள் இருவரிலிருந்து பல மனிதர்களை ஆண்களாகவும் பெண்களாகவும் பூமியின் பல பாகங்களிலும் பரவச் செய்தான். "அல்லாஹ்வுக்காக இவ்வாறு செய்யுமாறு உன்னிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று எந்த அல்லாஹ்வின் பெயர் கூறி நீங்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கிறீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள். உங்களை இணைக்கும் உறவுகளைத் துண்டிப்பதையும் அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டுத் தப்பமுடியாது. மாறாக அவன் அவற்றை எண்ணி வைத்துள்ளான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.