இஸ்லாத்தை அறிதல்

பாடம் 5 / 8

நபி முஹம்மது ﷺ யார்?

குர்ஆனிலிருந்து

مَّا كَانَ مُحَمَّدٌ أَبَآ أَحَدٖ مِّن رِّجَالِكُمۡ وَلَٰكِن رَّسُولَ ٱللَّهِ وَخَاتَمَ ٱلنَّبِيِّـۧنَۗ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٗا ﴿٤٠﴾

40. (நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்கவில்லை. (ஆகவே, அவர் ஜைதுக்கு எவ்வாறு தந்தையாவார்?) எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (ஆகவே, அவருக்குப் பின்னர் ஒரு தூதரையும் அனுப்பமாட்டான்.) அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

Al-Ahzab 33:40குர்ஆனில் படிக்க

وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا رَحۡمَةٗ لِّلۡعَٰلَمِينَ ﴿١٠٧﴾

107. (நபியே!) உம்மை உலகத்தாருக்கு ஓர் அருளாகவே தவிர நாம் அனுப்பவில்லை.

Al-Anbiya 21:107குர்ஆனில் படிக்க

وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا كَآفَّةٗ لِّلنَّاسِ بَشِيرٗا وَنَذِيرٗا وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ﴿٢٨﴾

28. (நபியே!) நாம் உம்மை (இவ்வுலகில் உள்ள) எல்லா மனிதர்களுக்குமே நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும்தான் அனுப்பிவைத்திருக்கிறோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்ளவில்லை.

Saba 34:28குர்ஆனில் படிக்க

وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٖ ﴿٤﴾

4. நிச்சயமாக நீர் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கிறீர்.

Al-Qalam 68:4குர்ஆனில் படிக்க

சுன்னாவிலிருந்து

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நற்குணங்களைப் பரிபூரணப்படுத்தவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்

இதை இமாம் புஹாரி அவர்கள் ‘அல்அதப் அல்முப்ரத்’ எனும் நூலிலும், இமாம்களான அஹ்மத், பைஹகீ ஆகியோரும் பதிவு செய்துள்ளனர் நம்பகமானது (ஹஸன்) HadeethEnc.com
விளக்கம்

இங்கு நபியவர்கள், தம்மை அல்லாஹ் சிறப்பான நற்குணங்களைப் பரிபூரணப்படுத்துவதற்காகவே அனுப்பிவைத்தான் என அறிவிக்கின்றார்கள். அதாவது, நபியவர்கள், முன்சென்ற நபிமார்களை (அவர்களது போதனைகளை) முழுமைப்படுத்தும் விதமாகவும், அரபிகளின் நற்குணங்களைப் பரிபூணரப்படுத்தும் விதமாகவும் அனுப்பி வைக்கப் பட்டார்கள். அவர்கள் நன்மையை விரும்புபவர்களா கவும், தீமையை வெறுப்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் சுயகௌரவமும், பெருந் தன்மையும், தயாளகுணமும் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் இருந்த குறைகளான, குடும்பங்களை வைத்துப் பெருமை பேசுதல், பெருமையடித்தல், ஏழையை இழிவாகக் கருதுதல் போன்றவற்றை நிவர்த்தி செய்யும் முகமாக நபியவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதைத் தான் கேட்டதாக உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'கிறிஸ்தவர்கள் மர்யமின் புதல்வரை (ஈஸாவை) அளவு கடந்து புகழ்ந்ததை போன்று என்னை நீங்கள் அளவு கடந்து புகழ வேண்டாம், நான் அல்லாஹ்வின் அடியானாவேன், எனவே அல்லாஹ்வின் அடியார், தூதர் என்றே கூறுங்கள்'.

இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார் சரியானது HadeethEnc.com
விளக்கம்

கிறிஸ்தவர்கள் ஈஸா இப்னு மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு செய்தது போல், ஷரீஆ வரைமுறையை மீறி தன்னை அளவு கடந்து புகழ்வதையும், அல்லாஹ்வின் பண்புகள், மற்றும் அவனுக்கே உரித்தான விஷேட செயல்களைக் கொண்டு வர்ணிப்பதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தடுத்தார்கள், அதே போன்று நபியவர்கள் மறைவானவற்றை அறிகிறார் என்று கருதுவது, அல்லது அல்லாஹ்வுக்கு நிகராக அவர்களிடம் பிரார்த்திப்பது போன்ற விடயங்களையும் இந்த ஹதீஸில் தடுத்துள்ளார்கள். பின்னர் அவர்கள் தான் யார் என்பதை பின்வருமாறு தெளிவுபடுத்துகிறார்கள். தான் அல்லாஹ்வின் அடியார்களில் ஒவருன், என்னை நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என்று அழைக்குமாறு பணிக்கிறார்கள்.

எல்லா பாடங்களும்