நோயாளிக்கான துஆ மற்றும் நோயாளியை நலம் விசாரிக்கும்போது துஆ

நோயுற்ற ஒருவரை நலம் விசாரிக்கச் செல்லும்போது கூற வேண்டியவை.

1 7 முறை

أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ

பொருளும் ஆதாரமும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : யார் ஒருவர் மரணத்தின் அறிகுறி ஏற்படாத நோயாளியைச் சுகம் விசாரிக்கச் சென்று அவரிடம் ஏழு முறை:

أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ،

அஸ்அலுல்லாஹல் அழீம், ரப்பல் அர்ஷில் அழீம் அன் யஷ்ஃபியக் என்ற துஆவை

(பொருள் ';,அர்ஷின் இரட்சகனான மகத்தான அல்லாஹ்விடம் உம்மை குணமாக்கும்படி நான் வேண்டுகிறேன்') என்று கூறினால், அல்லாஹ் அந்த நோயிலிருந்து அவனை நிச்சயமாக குணமாக்குவான்'.

இமாம்களான அபுதாவூத், திர்மிதி, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது தரம்: சரியானது

விளக்கம்

நபி ﷺ அவர்கள் அறிவித்தார்கள்: ஒரு முஸ்லிம் மரணத்தருவாயை அடையாத சக முஸ்லிமை நோய்விசாரிக்கச் சென்று அவருக்கு 'அஸ்அலுல்லாஹல் அழீம், ரப்பல் அர்ஷில் அழீம் அன் யஷ்ஃபியக்' (மகத்தான அர்ஷின் இறைவனான அல்லாஹ்விடம் உன்னை குணப்படுத்துமாறு வேண்டுகிறேன்) என்று ஏழு முறை துஆ செய்தால், அல்லாஹ் அந்த நோயிலிருந்து அவனை குணமாக்குவான். இங்கு 'அல்லாஹ் மகத்தானவன்' என்பது அவனது ذات் (மெய்நிலை), குணங்கள், செயல்கள் அனைத்திலும் மகத்துவம் உடையவன் என்பதைக் குறிக்கிறது.

பயன்கள்

  • இந்த துஆவை ஏழு தடவைகள் ஓதி நோயாளிக்காக் பிரார்த்திப்பது விரும்பத்தக்கது.
  • யார் இந்த துஆவை உண்மையான நம்பிக்கையுடனும் உளத்தூய்மையுடனும் ஓதுகிறாரோ, அல்லாஹ்வின் உதவியினால் குணமடைதல் நிச்சயம் நிகழும்.
  • இந்த துஆவை மௌனமாகவோ, வெளிப்படையாகவோ கூற முடியும் இரண்டும் அனுமதிக்கப்பட்டவையே, ஆனால் நோயாளி கேட்கும் வகையில் கூறுவது சிறந்தது. ஏனெனில் அது அவருக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கும்.

HadeethEnc.com இல் படிக்கவும்

2 ஒரு முறை

أَذْهِبِ الْبَاسَ، رَبَّ النَّاسِ، وَاشْفِ أَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

பொருளும் ஆதாரமும்

விசுவாசிகளின் தாயார், ஆஇஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியைப் பார்க்கச் சென்று, துஆக் கேட்கும் போது இவ்வாறு கூறுவார்கள் : «أَذْهِبِ الْبَاسَ، رَبَّ النَّاسِ، وَاشْفِ أَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا».

(பொருள் : மனிதர்களின் இரட்சகனே! நோயை நீக்கிவிடுவாயாக! மேலும் குணப்படுத்தி விடுவாயாக! நீயே குணப்படுத்தக் கூடியவன். நீ வழங்கும் ஆரோக்கியத்தைத் தவிர வேறு குணப்படுத்தல் கிடையாது. எந்தவொர நோயையும் விட்டு வைக்காமல் குணப்படுத்தி விடுவாயாக!)

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர் தரம்: சரியானது

விளக்கம்

நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியைப் பார்க்கச் சென்று, துஆக் கேட்கும் போது இவ்வாறு கூறுவார்கள் : மனிதர்களின் இரட்சகனே! (அவர்களைப் படைத்துப் போஷிப்பவனே!) நோயை (கடுமையான நோயை) நீக்கி (இல்லாமல்செய்து)விடுவாயாக! மேலும் (இந்த நோயாளியை) குணப்படுத்தி விடுவாயாக! (தூய்மையான) நீயே குணப்படுத்தக் கூடியவன். (குணப்படுத்துபவன் எனும் உனது பெயரை முன்னிறுத்திக் கேட்கின்றேன்.) நீ வழங்கும் ஆரோக்கியத்தைத் தவிர (நோயாளிக்கு) வேறு குணப்படுத்தல் கிடையாது. (வேறு) எந்தவொரு நோயையும் விட்டு வைக்காமல் (முழுமையாகக்) குணப்படுத்தி விடுவாயாக.

பயன்கள்

  • குணப்படுத்துபவன் அல்லாஹ் மாத்திரமே! வைத்தியர், மருத்துக்கள் என்பன காரணிகளே! அல்லாஹ்வின் உத்தரவின்றி, அவற்றால் பயனளிக்கவோ, தீங்கிழைக்கவோ முடியாது.
  • நோயாளியை நோய் விசாரிப்பதென்பது, முஸ்லிம்களுக்கு மத்தியில் செய்யவேண்டிய கடமைகளில் ஒன்றாகும். குடும்பத்திற்குள் அது மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
  • நோயாளியைத் தரிசிக்கச் செல்பவர், நபியவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பரக்கத் பொருந்திய துஆவை ஓத ஆர்வமூட்டல்.
  • அல்குர்ஆன், நல்ல துஆக்கள் போன்றவற்றின் மூலம், மார்க்க அடிப்படையிலான ஓதல்களை வைத்து மருத்துவம் செய்வது நபியவர்களின் வழிகாட்டல்களில் உள்ளதாகும். நபியவர்கள், தாம் நோய்வாய்ப்பட்டால் தமக்காகவே ஓதிக் கொள்வார்கள். மேலும், தமது குடும்பத்தினரோ, ஏனையோரோ நோய்வாய்ப்பட்டாலும் ஓதுவார்கள்.
  • இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : நிறைய ஹதீஸ்களில், நோய்கள் பாவங்களுக்கு பரிகாரமாகவும், நற்கூலியாகவும் கூறப் பட்டிருப்பதும், மறுபுறம் நோயாளிக்கு ஆரோக்கியம் வேண்டிப் பிரார்த்திக்குமாறு வந்திருப்பதும் முரணாக நோக்கப்படலாம். அதற்கான பதில் பின்வருமாறு : துஆ என்பது ஒரு வணக்கமாகும். அது குற்றப்பரிகாரம் மற்றும் நற்கூலி கிடைப்பதுடன் முரண்படமாட்டாது. ஏனெனில், அவை நோயின் முதற்கட்டத்துடனேயே, பொறுமையாக இருப்பதுடன் கிடைத்து விடுகின்றன. துஆ கேட்பவர், இரு நன்மைகளுக்கு மத்தியில் இருப்பார். ஒன்றில் அவரது நோக்கம் நிறைவேறி விடும். அல்லது, அதற்குப் பதிலாக, நன்மைகள் கிடைக்கலாம், தீமைகள் தடுக்கப் படலாம். அனைத்துமே அல்லாஹ்வின் பேருபகாரத்தில் உள்ளவையே!

HadeethEnc.com இல் படிக்கவும்

3 ஒரு முறை

اللَّهُمَّ اشْفِ سَعْداً، اللَّهُمَّ اشْفِ سَعْداً، اللَّهُمَّ اشْفِ سَعْداً

பொருளும் ஆதாரமும்

ரஸுல் (ஸல்) அவர்கள் என்னிடம் நோய் விசாரிக்க வந்தார்கள்.அச்சமயம் அன்னார் "அல்லாஹ்வே! ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக.அல்லாஹ்வே ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக.அல்லாஹ்வே ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக."என்று கூறினார்கள், என ஸஃத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

புஹாரியும்,முஸ்லிமும் ஒன்றுபட்டது.இதன் வாசகம் முஸ்லிம் அவர்களுக்குரியது தரம்: ஸஹீஹானது-சரியானது

விளக்கம்

ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் சுகவீனமாக இருந்த போது, அவர்களை நோய் விசாரிக்கச் சென்ற ரஸூல் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வே! ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக. அல்லாஹ்வே ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக. அல்லாஹ்வே ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக."என்று மூன்று தடவைகள் துஆ செய்தார்கள்.இந்த ஹதீஸ் ஒரு மனிதன் முஸ்லிம் நோயாளியிடம் நோய் விசாரிக்கச் செல்வது நபி வழி என்பதற்கு ஆதாரமாக விளங்குகின்றது.மேலும் இது ரஸுல் (ஸல்) அவர்களின் சீரிய குணத்தையும்,அவர்கள் தங்களின் தோழர்களுடன் வைத்திருந்த தொடர்பையும் எடுத்துக் காட்டுகிறது.எனவேதான் நபியவர்கள் தங்களின் தோழர்கள் சுகவீனமாக இருந்த போது அவர்களை நோய் விசாரிக்கச் சென்று அவர்களுக்காக துஆவும் செய்தார்கள். மேலும் நோயாளிக்காக துஆ கேட்பது,நோயாளியின் நோய் குணமடைவதற்குரிய காரணங்களில் ஒன்றாகும், எனவே நோயாளியின் பெயரைக் குறிப்பிட்டு "அல்லஹ்வே! இன்னாரின் நோயைக் குணப்படுத்தி வைப்பாயாக"" என்று மூன்று தடவைகள் கூறி அவருக்காக துஆ கேட்பது ஒரு விரும்பத் தக்க செயல் என்பதும் இதன் மூலம் புலனாகிறது.

HadeethEnc.com இல் படிக்கவும்

கேள்விகள்

இந்தப் பக்கத்தில் என்ன உள்ளது?

நோயாளிக்கான துஆ: ஒவ்வொன்றும் அரபியில், அதன் பொருள், அது வந்துள்ள ஹதீஸ், அதன் தரம் மற்றும் விளக்கத்துடன்.

மொழிபெயர்ப்புகள் எங்கிருந்து வருகின்றன?

மொழிபெயர்க்கப்பட்ட நபிமொழிகளின் கலைக்களஞ்சியமான HadeethEnc.com இலிருந்து. ஒவ்வொரு ஹதீஸும் அவர்கள் வெளியிட்டபடியே, அதன் ஆதாரம், தரம் மற்றும் மூலத்திற்கான இணைப்புடன் காட்டப்படுகிறது.

கவுண்டர் எப்படி வேலை செய்கிறது?

ஒரு திக்ரின் கீழ் உள்ள கவுண்டரைத் தட்டினால் அது பூஜ்ஜியம் வரை குறைந்து எண்ணும். இது இந்தப் பக்கத்தில் மட்டுமே, எதுவும் சேமிக்கப்படுவதில்லை.

தினசரி நினைவூட்டல் பெற முடியுமா?

ஆம். Android க்கான இலவச Qabas செயலி ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை திக்ர்களை நினைவூட்டுகிறது, இதே கவுண்டரும் அதில் உள்ளது.