கழிவறையில் நுழையும்போதும் வெளியேறும்போதும் துஆ

கழிவறையில் நுழையும் முன்பும் வெளியேறிய பின்பும் கூற வேண்டியவை.

1 ஒரு முறை

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الخُبُثِ وَالخَبَائِثِ

பொருளும் ஆதாரமும்

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கழிப்பறைக்கு நுழையும் போது : 'அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் குப்ஸி வல் கபாஇஸி' எனக் கூறுபவர்களாக இருந்தார்கள். பொருள்: யா அல்லாஹ்! உன்னிடம் ஷைத்தான்களில் ஆண் மற்றும் பெண்ணகளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர் தரம்: சரியானது

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காக கழிவறைக்குள் நுழையும்போது அல்லாஹ்விடம் ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்கை விட்டும் பாது காக்குமாறு கோருவார்கள். ஹதீஸில் குறிப்பிடப்பட்ட அல்குப்ஸ்,அல்கபாஇஸ் என்பது தீங்கு மற்றும் அசுத்தம் எனவும் பொருள் கோடல் செய்யப்பட்டுள்ளது.

பயன்கள்

  • இயற்கைத்தேவையை நிறைவேற்ற கழப்பிடத்தினுள் நுழைபவர் இந்த துஆவை ஓதுவது (முஸ்தஹப்பாகும்) நபி வழியாகும்.
  • அடியார்கள் -மனிதர்கள்- யாவரும் எல்லா நிலைகளிலும் தங்களுக்கு தீங்கை ஏற்படுத்தும், அல்லது பாதிப்பை ஏற்படுத்துபவையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக்கோருவதற்கு தேவையுடையவர்களாக இருத்தல்.

HadeethEnc.com இல் படிக்கவும்

2 ஒரு முறை

غُفْرَانَكَ

பொருளும் ஆதாரமும்

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கழிப்பறையிலிருந்து வெளியே வந்ததும், 'குஃப்ரானுக்' «غُفْرَانَكَ (யா அல்லாஹ், நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.

இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர் தரம்: சரியானது

விளக்கம்

தேவையை முடித்து விட்டு கழிப்பறையிலிருந்து வெளியே வரும்போது, 'அல்லாஹ்வே! நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்' என்று பொருள்படும் غُفْرَانَكَ என்ற வார்த்தையைக் கூறுபவர்களாக நபியவர்கள் இருந்தார்கள்.

பயன்கள்

  • மலசலம் கழிக்கும் இடத்தை விட்டு வெளியேறும்போது 'குஃப்ரானக' என்று கூறுவது நபிவழியாகும்;.
  • நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடினார்கள்.
  • இயற்கைத் தேவையை முடித்த பிறகு மன்னிப்பு கேட்பதற்கான காரணம் குறித்து பின்வருமாறு கூறப்படுகிறது : சிலர், இது அல்லாஹ்வின் பல அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதில் அலட்சியமாக இருப்பதால் என்கின்றனர். மேலும் சிலர் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மலம் உடலிருந்து இலகுவாக வெளியேறியமை காரணமாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். அல்லது இயற்கைத்தேவையை நிறைவேற்றும் போது அல்லாஹ்வின் நினைவிலிருந்து ஒருவர் திசை திருப்பப்பட்டதற்காக மன்னிப்புக் கோரியிருக்கலாம் எனவும் இதற்கான காரணம் சம்பந்தாக குறிப்பிடுகின்றனர்.

HadeethEnc.com இல் படிக்கவும்

கேள்விகள்

இந்தப் பக்கத்தில் என்ன உள்ளது?

கழிவறை துஆ: ஒவ்வொன்றும் அரபியில், அதன் பொருள், அது வந்துள்ள ஹதீஸ், அதன் தரம் மற்றும் விளக்கத்துடன்.

மொழிபெயர்ப்புகள் எங்கிருந்து வருகின்றன?

மொழிபெயர்க்கப்பட்ட நபிமொழிகளின் கலைக்களஞ்சியமான HadeethEnc.com இலிருந்து. ஒவ்வொரு ஹதீஸும் அவர்கள் வெளியிட்டபடியே, அதன் ஆதாரம், தரம் மற்றும் மூலத்திற்கான இணைப்புடன் காட்டப்படுகிறது.

தினசரி நினைவூட்டல் பெற முடியுமா?

ஆம். Android க்கான இலவச Qabas செயலி ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை திக்ர்களை நினைவூட்டுகிறது, இதே கவுண்டரும் அதில் உள்ளது.