ஸூரா Al-An'am, வசனம் 52

6:52

وَلَا تَطۡرُدِ ٱلَّذِينَ يَدۡعُونَ رَبَّهُم بِٱلۡغَدَوٰةِ وَٱلۡعَشِيِّ يُرِيدُونَ وَجۡهَهُۥۖ مَا عَلَيۡكَ مِنۡ حِسَابِهِم مِّن شَيۡءٖ وَمَا مِنۡ حِسَابِكَ عَلَيۡهِم مِّن شَيۡءٖ فَتَطۡرُدَهُمۡ فَتَكُونَ مِنَ ٱلظَّٰلِمِينَ ٥٢

52. (நபியே!) தங்கள் இறைவனின் திருமுகத்தை விரும்பி காலையிலும் மாலையிலும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பவர்களை நீங்கள் விரட்டி விடாதீர்! அவர்களுடைய கணக்கிலிருந்து எதுவும் உமது பொறுப்பாகாது. உமது கணக்கிலிருந்து எதுவும் அவர்களுடைய பொறுப்பாகாது. ஆகவே, நீர் அவர்களை விரட்டினால் அநியாயக்காரர்களில் நீரும் ஒருவராகிவிடுவீர்!

தஃப்ஸீர்

6.52. தூதரே! இணைவைப்பாளர்களின் தலைவர்களைக் கவர்வதற்காக காலையிலும் மாலையிலும் உளத்தூய்மையுடன் அல்லாஹ்வை மட்டுமே எப்பொழுதும் வணங்கும் ஏழை முஸ்லிம்களை உம் அவையைவிட்டு விரட்டிவிடாதீர். இந்த ஏழைகளுக்கு நீங்களோ, அவர்களுக்கு நீங்களோ எவ்விதப் பொறுப்பும் இல்லை. அவர்களது பொறுப்பு அவர்களின் இறைவனிடமே உள்ளது. நீர் அவர்களை உம் அவையிலிருந்து விரட்டினால் நீர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறியவரே.