ٱلَّذِينَ تَتَوَفَّىٰهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ طَيِّبِينَ يَقُولُونَ سَلَٰمٌ عَلَيۡكُمُ ٱدۡخُلُواْ ٱلۡجَنَّةَ بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ٣٢
32. இவர்களின் உயிரை வானவர்கள், அவர்கள் நல்லவர்களாக இருக்கும் நிலைமையில் கைப்பற்றுகின்றனர். (அப்பொழுது அவர்களை நோக்கி) ‘‘ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்கு ஈடேற்றம் உண்டாவதாக!) நீங்கள் (நற்செயல்) செய்து கொண்டிருந்ததின் காரணமாக சொர்க்கத்திற்குச் செல்லுங்கள்'' என்று கூறுவார்கள்.
தஃப்ஸீர்
16.32. மரணத்தின் வானவரும் அவருடைய உதவியாளர்களும் அவர்களின் உயிர்களை அவர்களின் உள்ளங்கள் நிராகரிப்பை விட்டும் தூய்மையாக இருக்கும் நிலையில் கைப்பற்றுவார்கள். அவர்களிடம் வானவர்கள் கூறுவார்கள்: “உங்கள் மீது சாந்தி நிலவட்டும். நீங்கள் எல்லா வகையான துன்பங்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்டு விட்டீர்கள். நீங்கள் உலகில் கொண்டிருந்த சரியான நம்பிக்கையினாலும் செய்து கொண்டிருந்த நற்செயல்களினாலும் சுவனத்தில் நுழையுங்கள்.”