ஸூரா An-Nahl, வசனம் 33

16:33

هَلۡ يَنظُرُونَ إِلَّآ أَن تَأۡتِيَهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ أَوۡ يَأۡتِيَ أَمۡرُ رَبِّكَۚ كَذَٰلِكَ فَعَلَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ وَمَا ظَلَمَهُمُ ٱللَّهُ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ ٣٣

33. (அவ்வக்கிரமக்காரர்களோ தங்கள் உயிரைக் கைப்பற்றுவதற்காக) அவர்களிடம் வானவர்கள் வருவதையோ அல்லது உங்கள் இறைவனின் கட்டளை(ப்படி வேதனை) வருவதையோ தவிர (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (அநியாயம்) செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ் இவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.

தஃப்ஸீர்

16.33. பொய்பிக்கும் இந்த இணைவைப்பாளர்கள் திடீரென மரணத்தின் வானவரும் அவருடைய உதவியாளர்களும் இவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்தவாறு இவர்களின் உயிர்களைக் கைப்பற்ற வருவதைத்தான் எதிர்பார்க்கிறார்களா? அல்லது இவ்வுலகில் அவர்களை அடியோடு அழிக்கக் கூடிய வேதனையைத் தாங்கிய அல்லாஹ்வின் கட்டளையையா? மக்காவின் இந்த இணைவைப்பாளர்கள் செய்வதைப் போன்றே முன்னர் வாழ்ந்த இணைவைப்பாளர்களும் செய்தார்கள். அதனால் அல்லாஹ் அவர்களை அழித்து விட்டான். அவன் அவர்களை அழித்து அவர்கள் மீது அநீதி இழைக்கவில்லை. மாறாக அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து அழிவிற்கான காரணங்களைத் தேடி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள்.