ஸூரா An-Nahl, வசனம் 31

16:31

جَنَّٰتُ عَدۡنٖ يَدۡخُلُونَهَا تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ لَهُمۡ فِيهَا مَا يَشَآءُونَۚ كَذَٰلِكَ يَجۡزِي ٱللَّهُ ٱلۡمُتَّقِينَ ٣١

31. (அவ்வீடு) என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய சொர்க்கங்களாகும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். அவர்கள் விரும்பியதெல்லாம் அங்கு அவர்களுக்குக் கிடைக்கும். இறையச்சமுடையவர்களுக்கு இவ்வாறே அல்லாஹ் கூலி கொடுக்கிறான்.

தஃப்ஸீர்

16.31. நிலையான சுவனங்களில் அவர்கள் நுழைவார்கள். அவற்றின் மாளிகைகளுக்கும், மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். இந்த சுவனங்களில் அவர்களின் மனம் விரும்பும் உணவு, குடிபானம் மற்றும் ஏனையவை அத்தனையும் கிடைக்கும். முஹம்மதின் சமூகத்திலுள்ள இறையச்சமுடையோருக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே முந்தைய சமூகத்திலுள்ள இறையச்சமுடையோரும் கூலி வழங்கப்படுவார்கள்.