ٱلَّذِينَ ءَامَنُواْ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِۖ وَٱلَّذِينَ كَفَرُواْ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱلطَّٰغُوتِ فَقَٰتِلُوٓاْ أَوۡلِيَآءَ ٱلشَّيۡطَٰنِۖ إِنَّ كَيۡدَ ٱلشَّيۡطَٰنِ كَانَ ضَعِيفًا ٧٦
76. (ஆகவே, இத்தகைய சமயத்தில்) உண்மை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் வழியில் (அவசியம்) போர்புரிவார்கள். நிராகரிப்பவர்களோ (இவர்களுக்கு எதிராக) ஷைத்தானுடைய வழியில்தான் போர்புரிவார்கள். ஆகவே, ஷைத்தானுடைய நண்பர்களிடம் நீங்கள் போர்புரியுங்கள். (அவர்களின் என்னிக்கையைப் பார்த்து தயங்கி விடாதீர்கள்.) நிச்சயமாக ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலவீனமானதாகவே இருக்கிறது.
தஃப்ஸீர்
4.76. உண்மையான நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக அவனுடைய பாதையில் போரிடுவார்கள். நிராகரிப்பாளர்கள் தமது தெய்வங்களின் பாதையில் போரிடுவார்கள். நீங்கள் ஷைத்தானின் உதவியாளர்களுக்கு எதிராகப் போரிடுங்கள். அவ்வாறு அவர்களுடன் நீங்கள் போரிட்டால் வெற்றி பெறுவீர்கள். ஏனெனில் ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானது. அது அல்லாஹ்வையோ சார்ந்திருப்போருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.