ஸூரா Al-Ma'idah, வசனம் 47

5:47

وَلۡيَحۡكُمۡ أَهۡلُ ٱلۡإِنجِيلِ بِمَآ أَنزَلَ ٱللَّهُ فِيهِۚ وَمَن لَّمۡ يَحۡكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ ٤٧

47. ஆகவே, இன்ஜீலை உடையவர்கள் அதில் அல்லாஹ் இறக்கிய (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்கவும். எவர்கள், அல்லாஹ் இறக்கிய (கட்டளைகளின்)படி தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக பாவிகள்தான்.

தஃப்ஸீர்

5.47. இன்ஜீலில் அல்லாஹ் இறக்கியதை கிறிஸ்தவர்கள் நம்பட்டும். அவர்களிடம் - முஹம்மத் (ஸல்) அவர்கள் வருவதற்கு முன் - அதில் கூறப்பட்டுள்ளதன்படி தீர்ப்பளிக்கட்டும். அல்லாஹ் இறக்கியதன்படி தீர்ப்பளிக்காதவர்கள்தாம் அவனுக்குக் கட்டுப்பட மறுப்பவர்கள், சத்தியத்தை விட்டுவிட்டு அசத்தியத்தின்பால் சாய்ந்தவர்கள்.