إِنَّ ٱلَّذِينَ يَكۡتُمُونَ مَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلۡكِتَٰبِ وَيَشۡتَرُونَ بِهِۦ ثَمَنٗا قَلِيلًا أُوْلَٰٓئِكَ مَا يَأۡكُلُونَ فِي بُطُونِهِمۡ إِلَّا ٱلنَّارَ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَلَا يُزَكِّيهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٌ ١٧٤
174. எவர்கள் வேதத்தில் அல்லாஹ் இறக்கியவற்றை மறைத்துவிட்டு அதற்கு விலையாகச் சொற்பத் தொகையைப் பெற்றுக்கொள்கின்றனரோ அவர்கள் நிச்சயமாகத் தங்கள் வயிற்றில் நெருப்பையே நிரப்பிக் கொள்கிறார்கள். மறுமையில் அல்லாஹ் அவர்களுடன் (விரும்பிப்) பேசவும் மாட்டான். அவர்களை (மன்னித்து)ப் பரிசுத்தமாக்கி வைக்கவும் மாட்டான். அவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனைதான் உண்டு.
தஃப்ஸீர்
2.174. யூதர்களும் கிருஸ்தவர்களும் செய்வது போன்று அல்லாஹ் இறக்கிய வேதங்களையும் அவற்றில் உள்ள சத்தியம் மற்றும் முஹம்மது நபியைக் குறித்து உள்ளவற்றையும் பணம், பதவி போன்ற அற்ப ஆதாயங்களுக்காக மறைப்போர் உண்மையில் அவர்கள் நரக வேதனைக்கு காரணமாக அமையக்கூடியவற்றைத்தான் தங்கள் வயிறுகளில் நிரப்பிக் கொள்கிறார்கள். மறுமைநாளில் அவர்கள் விரும்பும் விஷயத்தைக் கொண்டு அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான்; மாறாக கவலையூட்டும் விதமாகவே பேசுவான். அவர்களைத் தூய்மைப்படுத்தவோ பாராட்டவோ மாட்டான். அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனைதான் உண்டு.