மக்கள் கேட்கும் கேள்விகள்

பாடம் 1 / 11

யூதர்களும் கிறிஸ்தவர்களும் வணங்கும் அதே இறைவனையா முஸ்லிம்கள் வணங்குகிறார்கள்?

சுருக்கமான பதில்

எல்லாவற்றையும் படைத்த, இப்ராஹீம், மூஸா, ஈஸா ஆகியோரின் இறைவனையே முஸ்லிம்கள் வணங்குகிறார்கள். "அல்லாஹ்" என்பது இறைவனின் அரபுப் பெயர், அரபுக் கிறிஸ்தவர்களும் அதைப் பயன்படுத்துகிறார்கள். யூதர்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் "எங்கள் கடவுளும் உங்கள் கடவுளும் ஒரே ஒருவனே" என்று கூறுமாறு குர்ஆன் முஸ்லிம்களுக்குச் சொல்கிறது. எனினும் இறைவன் பற்றிய முக்கிய நம்பிக்கைகளில் முஸ்லிம்கள் அவர்களிடமிருந்து வேறுபடுகிறார்கள், உதாரணமாக இஸ்லாம் நிராகரிக்கும் திரித்துவம். இணை எதுவுமின்றி அவனை மட்டுமே வணங்குமாறு முஸ்லிம்கள் அனைவரையும் அழைக்கிறார்கள்.

கபஸ் எழுதியது, அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் கரீம், தஃப்ஸீர் இப்னு கஸீர், HadeethEnc.com விளக்கங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது.

குர்ஆனிலிருந்து

۞ وَلَا تُجَٰدِلُوٓاْ أَهۡلَ ٱلۡكِتَٰبِ إِلَّا بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ إِلَّا ٱلَّذِينَ ظَلَمُواْ مِنۡهُمۡۖ وَقُولُوٓاْ ءَامَنَّا بِٱلَّذِيٓ أُنزِلَ إِلَيۡنَا وَأُنزِلَ إِلَيۡكُمۡ وَإِلَٰهُنَا وَإِلَٰهُكُمۡ وَٰحِدٞ وَنَحۡنُ لَهُۥ مُسۡلِمُونَ ﴿٤٦﴾

46. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் வேதத்தை உடையவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) அழகான முறையிலேயே தவிர அவர்களுடன் தர்க்கிக்க வேண்டாம். ஆயினும், அவர்களில் எவரேனும் வரம்பு மீறிவிட்டால் (அதற்குத் தக்கவாறு நீங்கள் பதில் கூறுவது உங்கள் மீது குற்றமாகாது. அவர்களுடன் தர்க்கித்தால்) ‘‘ எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தை நம்பிக்கை கொள்கின்றபடியே உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். எங்கள் கடவுளும் உங்கள் கடவுளும் ஒரே ஒருவனே. நாங்கள் அவனுக்குத்தான் முற்றிலும் பணிந்து வழிப்பட்டு நடக்கிறோம்'' என்றும் கூறுங்கள்!

Al-'Ankabut 29:46குர்ஆனில் படிக்க
வசனங்களின் விளக்கம்

46. -நம்பிக்கையாளர்களே!- வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடன் அறிவுரை மற்றும் தெளிவான ஆதாரங்களைக்கொண்டு அவர்களை அழைத்தல், உரையாடல் ஆகிய அழகிய முறையில் அன்றி விவாதம் செய்யாதீர்கள். ஆயினும் அவர்களில் பிடிவாதம் கொண்டு அநீதியிழைத்து உங்களுக்கு எதிராக போரை அறிவித்தவர்களைத்தவிர. அவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் வரை அல்லது இழிவடைந்து தங்களின் கைகளால் ஜிஸ்யா வரி கட்டும்வரை அவர்களுடன் போரிடுங்கள். யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடம் கூறுங்கள்: “அல்லாஹ் எங்கள் மீது இறக்கிய குர்ஆனின் மீதும், உங்கள் மீது இறக்கிய தவ்ராத் மற்றும் இன்ஜீலின் மீதும் நாங்கள் நம்பிக்கைகொண்டோம். எங்களின் இறைவனும் உங்களின் இறைவனும் ஒருவன்தான். அவனை வணங்குவதிலும் அவனது இறைவல்லமையிலும் பூரணத்தன்மையிலும் அவனுக்கு யாதொரு இணையுமில்லை. நாங்கள் அவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்களாகவும் அடிபணிந்தவர்களாகவும் இருக்கின்றோம்.

قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ تَعَالَوۡاْ إِلَىٰ كَلِمَةٖ سَوَآءِۭ بَيۡنَنَا وَبَيۡنَكُمۡ أَلَّا نَعۡبُدَ إِلَّا ٱللَّهَ وَلَا نُشۡرِكَ بِهِۦ شَيۡـٔٗا وَلَا يَتَّخِذَ بَعۡضُنَا بَعۡضًا أَرۡبَابٗا مِّن دُونِ ٱللَّهِۚ فَإِن تَوَلَّوۡاْ فَقُولُواْ ٱشۡهَدُواْ بِأَنَّا مُسۡلِمُونَ ﴿٦٤﴾

64. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்கமாட்டோம். நாம் அவனுக்கு எதையும் இணையாக்கமாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வைத் தவிர எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ளமாட்டோம்'' (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதையும்) அவர்கள் புறக்கணித்தால் ‘‘நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (அவன் ஒருவனுக்கே வழிப்பட்டவர்கள்) என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள்.

Al-Imran 3:64குர்ஆனில் படிக்க
வசனங்களின் விளக்கம்

64. தூதரே! நீர் கூறுவீராக: “வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களே! வாருங்கள், நாம் அனைவரும் ஒன்றுபடும் பொது வார்த்தையில் நாம் ஒன்றிணைவோம்: “நாம் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனுடன் வேறு யாரையும் வணங்கக் கூடாது, அவர்கள் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவர்களாக இருந்தாலும் சரியே. நம்மில் சிலர் சிலரை அல்லாஹ்வைத்தவிர வணங்கப்படும் கட்டுப்படத்தக்க கடவுள்களாக ஆக்கிவிடக்கூடாது.” என்பதே அந்த வார்த்தையாகும். நம்பிக்கையாளர்களே! நீங்கள் அழைக்கும் சத்தியத்தை அவர்கள் புறக்கணித்துவிட்டால் “நாங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே கட்டுப்பட்ட முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் என அவர்களிடம் நீங்கள் கூறுங்கள்.

எல்லா பாடங்களும்