முஸ்லிமாவது

பாடம் 1 / 3

நான் எப்படி முஸ்லிமாவது?

குர்ஆனிலிருந்து

فَٱعۡلَمۡ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ وَٱسۡتَغۡفِرۡ لِذَنۢبِكَ وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۗ وَٱللَّهُ يَعۡلَمُ مُتَقَلَّبَكُمۡ وَمَثۡوَىٰكُمۡ ﴿١٩﴾

19. (நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லை என்பதை நீர் உறுதியாக அறிந்துகொண்டு, உமது தவறுகளை மன்னிக்கக் கோருவதுடன், நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் மன்னிப்புக் கோருவீராக! (நம்பிக்கையாளர்களே!) உங்கள் நடமாட்டத்தையும் நீங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிவான்.

Muhammad 47:19குர்ஆனில் படிக்க

مُّحَمَّدٞ رَّسُولُ ٱللَّهِۚ وَٱلَّذِينَ مَعَهُۥٓ أَشِدَّآءُ عَلَى ٱلۡكُفَّارِ رُحَمَآءُ بَيۡنَهُمۡۖ تَرَىٰهُمۡ رُكَّعٗا سُجَّدٗا يَبۡتَغُونَ فَضۡلٗا مِّنَ ٱللَّهِ وَرِضۡوَٰنٗاۖ سِيمَاهُمۡ فِي وُجُوهِهِم مِّنۡ أَثَرِ ٱلسُّجُودِۚ ذَٰلِكَ مَثَلُهُمۡ فِي ٱلتَّوۡرَىٰةِۚ وَمَثَلُهُمۡ فِي ٱلۡإِنجِيلِ كَزَرۡعٍ أَخۡرَجَ شَطۡـَٔهُۥ فَـَٔازَرَهُۥ فَٱسۡتَغۡلَظَ فَٱسۡتَوَىٰ عَلَىٰ سُوقِهِۦ يُعۡجِبُ ٱلزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ ٱلۡكُفَّارَۗ وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ مِنۡهُم مَّغۡفِرَةٗ وَأَجۡرًا عَظِيمَۢا ﴿٢٩﴾

29. முஹம்மது (ஸல்) அல்லாஹ்வுடைய திருத்தூதராவார்கள். (அவரும்)அவருடன் இருப்பவர்களும் நிராகரிப்பவர்கள் விஷயத்தில் கண்டிப்பானவர்களாகவும், தங்களுக்குள் மிக்க அன்புடையவர்களாகவும் இருப்பார்கள்.குனிந்து சிரம் பணிந்து வணங்குபவர்களாக அவர்களை நீர் காண்பீர். அல்லாஹ்வின் அருளையும், அவனுடைய திருப்பொருத்தத்தையும் (எந்த நேரமும்) விரும்பியவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் சிரம் பணி(ந்து வணங்கு)வதின் அடையாளம் இருக்கும். இதுவே தவ்றாத் (என்னும் வேதத்)தில் உள்ள அவர்களின் வர்ணிப்பு. இன்ஜீலில் அவர்களுக்குள்ள உதாரணமாவது: ஒரு பயிரை ஒத்திருக்கிறது. அப்பயிர் (பசுமையாகி, வளர்ந்து) உறுதிப்படுகிறது. பின்னர், அது தடித்துக் கனமாகிறது. பின்னர், விவசாயிகளுக்கு ஆச்சரியம் கொடுக்கும் விதத்தில் (வளர்ந்து,) அது தன் தண்டின் மீது நிமிர்ந்து நிற்கிறது. இவர்களைக் கொண்டு நிராகரிப்பவர்களுக்குக் கோபமூட்டும் பொருட்டு (அந்த நம்பிக்கையாளர்களை படிப்படியாக அபிவிருத்திக்குக் கொண்டுவருகிறான்). அவர்களில் எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கிறான்.

Al-Fath 48:29குர்ஆனில் படிக்க

شَهِدَ ٱللَّهُ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ وَٱلۡمَلَٰٓئِكَةُ وَأُوْلُواْ ٱلۡعِلۡمِ قَآئِمَۢا بِٱلۡقِسۡطِۚ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿١٨﴾

18. (நபியே! நீதவானாகிய) அல்லாஹ் சாட்சி கூறுகிறான்: ‘‘நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறுயாரும் (இல்லவே) இல்லை.'' அப்படியே வானவர்களும் (வேதத்தை கற்றுத் தேர்ந்த) கல்வியாளர்களும் சாட்சி கூறுகின்றனர்; (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமான அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை.

Al-Imran 3:18குர்ஆனில் படிக்க

சுன்னாவிலிருந்து

அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஒரே வாகனத்தின் மீது முஆத் (ரழியல்லாஹு அன்ஹு )அவர்கள் நபி ஸல்லல்லாஹு அiலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்கும் நிலையில், நபியவர்கள் 'முஆதே! என்று அழைத்தார்கள். 'இதோ உள்ளேன் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்' என்று முஆத் ரழியல்லாஹு அன்ஹு கூறினார். முஆதே!' என்று என மீண்டும் நபி ஸல்லல்லாஹு அiலைஹிவஸல்லம் அவர்கள் அழைத்தார்கள். 'இதோ உள்ளேன் இறைத்தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்' என மீண்டும் முஆத் (ரழியல்லாஹு அன்ஹு கூறினார். இவ்வாறு மூன்று முறை கூறி அழைத்தார்கள். பிறகு 'தன் உள்ளத்தினால் உண்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரிய உண்மையான இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உறுதியாக நம்பும் எவரையும் அல்லாஹ் நரகத்திற்குச் செல்லவதை தடுக்கிறான்' என்று நபி ஸல்லல்லாஹு அiலைஹிவஸல்லம அவர்கள் கூறினார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இச்செய்தியை நான் மக்களுக்கு அறிவித்து விடட்டுமா? அவர்கள் மகிழ்ந்து போவார்களே!' என்று முஆத் கேட்டதற்கு 'அவ்வாறு நீர் அறிவிக்கும் அச்சமயத்தில் (இது மட்டும் போதுமே என்று) அவர்கள் அசட்டையாக இருந்துவிடுவார்கள்' என நபியவர்கள் கூறினார்கள். இருப்பினும் மார்க்க அறிவை மறைத்த குற்றத்திற்கு ஆளாகாமலிருப் பதற்காக முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது இறுதிக் காலத்தில் இதனை அறிவித்தார்கள்.

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர் சரியானது HadeethEnc.com
விளக்கம்

முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வாகனத்தின் மீது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பின் அமர்ந்திருந்தார்கள் அப்போது நபியவர்கள் தான் கூறுப் போகும் விடயத்தின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்த 'முஆதே!' என மூன்று தடவை அழைத்தார்கள்.

ஓவ்வொரு தடவையும் நபியவர்கள் அழைக்கும் போதெல்லாம் அல்லாஹ்வின் தூதரே! அப்படியே ஆகட்டும், அல்லாஹ்வின் தூதரே உங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு உங்களுக்கு கட்டுப்பட்டவனாக உள்ளேன். உங்களுக்கு கட்டுப்படுவதினால் நான் மகிழ்ச்சியை தேடுகிறேன் என்று கூறிக்கொண்டிருந்தார்.

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யார் ஒருவர் உண்மையாக வணங்கப்படத்தக்கவன் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லையென்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் பொய்யாக அல்லாமல் உள்ளத்தாள் உண்மைப் படுத்தியவராக சாட்சி கூறி அதே நிலமையில் மரணிக்கிறாரோ அவர் மீது நரகத்தை ஹராமாக்கி விடுகிறான் என்று இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.

இவ்வாறு நபியவர்கள் கூறவே முஆத் ரழியல்லாஹு அன்ஹு; இந்த செய்தியை மக்களி டம் அவர்கள் மகிழ்ச்சியடையவும், நல்ல சுபச் செய்தியாக அமைந்துவிடவும் இதனை நான் அறிவிக்கட்டுமா எனக் கேட்டார்கள்.

நபியவர்கள் மக்கள் இதிலேயே நம்பிக்கொண்டு அலட்சியமாக இருந்து அவர்களின் அமல்களெல்லாம் குறைந்து விடும் என அஞ்சினார்கள்.

எனவே முஆத் அவர்களும் அறிவை மறைத்த குற்றத்திற்கு உட்பட்டு விடுவதைப் பயந்து தனது மரணத்திற்கு முன்தான் இந்த ஹதீஸை அவர்கள் கூறினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழில்லாஹு அறிவித்துள்ளார்கள் : 'இறைநம்பிக்கை (ஈமான்) என்பது 'எழுபதுக்கும் அதிகமான' அல்லது 'அறுபதுக்கும் அதிகமான' கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். வெட்கமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்'.

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர் சரியானது HadeethEnc.com
விளக்கம்

ஈமான் பல கிளைகளையும், பண்புளையும் கொண்டது எனவும் அது செயற்பாடுகள், நம்பிக்கைகள் மற்றும் வார்த்தைகள் போன்றவற்றை உள்ளடக்கியது எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவரகள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.

ஈமானின் பண்புகளில் மிகவும் உயர்ந்ததும் சிறப்புக்குரியதும் 'லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையாகும், அல்லாஹ் மாத்திரமே உண்மையான ஒரே கடவுளாவான், அவன் அனைத்து விடயங்களிலும் தனித்துவமானவன், வணங்கி வழிபட ஏனைய அனைத்தை விடவும் மிகத் தகுதியானவன் என பொருளறிந்து கூறி, அது கூறும் கருத்தின் அடிப்படையில் செயல்படுவதாகும்.

மனிதர்கள் செல்லும் பாதையில் அவர்களுக்கு தொந்தரவு செய்யக்கூடியவற்றை அகற்றி விடுவது ஈமானின் ஆகவும் குறைந்த –தாழ்ந்த- நிலையில் உள்ள செயற்படுகளில் ஒன்றாகும்.

அதனைத் தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நாணம் -வெட்கம் ஈமானின் பண்புகளில் ஒன்று எனவும் குறிப்பிடுகிறார்கள், ஹயாஉ –நாணம்- என்பது அசிங்கமானதை கைவிட்டு அழகிய செயலை தூண்டும் ஒரு குணமாகும்.

எல்லா பாடங்களும்