هُوَ يُحۡيِۦ وَيُمِيتُ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ ٥٦
56. அவனே (உங்களை) உயிர்ப்பித்தான்; அவனே (உங்களை) மரணிக்கச் செய்கிறான். பின்னர் அவனிடமே (மறுமையில்) நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
தஃப்ஸீர்
10.56. அவனே இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்கிறான். உயிருள்ளவர்களை மரணிக்கச் செய்கிறான். மறுமை நாளில் அவன் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும். அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி அளிப்பான்.