ஸூரா Yunus, வசனம் 55

10:55

أَلَآ إِنَّ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ أَلَآ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ٥٥

55. (மனிதர்களே!) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்குரியன என்பதை அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதுதான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். எனினும் (மனிதர்களில்) பலர் இதை நம்புவதில்லை.

தஃப்ஸீர்

10.55. அறிந்து கொள்ளுங்கள், வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவற்றின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அறிந்து கொள்ளுங்கள், நிராகரிப்பாளர்களுக்கு வேதனை அளிப்பேன் என்று அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிச்சயம் நிறைவேறியே தீரும். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அறிந்துகொள்ள மாட்டார்கள். எனவே சந்தேகம் கொள்கிறார்கள்.