ஸூரா At-Tawbah, வசனம் 10

9:10

لَا يَرۡقُبُونَ فِي مُؤۡمِنٍ إِلّٗا وَلَا ذِمَّةٗۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُعۡتَدُونَ ١٠

10. அவர்கள் எந்த நம்பிக்கையாளரைப் பற்றியும் (அவர் தமது) உறவினர் என்பதையும், (அவர்களுடன் செய்திருக்கும்) உடன்படிக்கையையும் பொருட்படுத்துவதேயில்லை. நிச்சயமாக இவர்கள்தான் வரம்பு மீறியவர்கள் ஆவர்.

தஃப்ஸீர்

9.10. அவர்கள் தம்மிடமுள்ள பகைமையால் எந்த நம்பிக்கையாளனின் விஷயத்திலும் அல்லாஹ்வையோ உறவுமுறையையோ ஒப்பந்தத்தையோ பொருட்படுத்தப்போவதில்லை. மேலும் அவர்கள் அல்லாஹ்வின் வரம்புகளை மீறியவர்களாவர். ஏனெனில் அவர்கள் அநியாயம், வரம்பு மீறல் ஆகிய பண்புகளைப் பெற்றுள்ளார்கள்.