ஸூரா At-Tawbah, வசனம் 9

9:9

ٱشۡتَرَوۡاْ بِـَٔايَٰتِ ٱللَّهِ ثَمَنٗا قَلِيلٗا فَصَدُّواْ عَن سَبِيلِهِۦٓۚ إِنَّهُمۡ سَآءَ مَا كَانُواْ يَعۡمَلُونَ ٩

9. அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை சொற்ப விலைக்கு விற்று விட்டு (மக்கள்) அவனுடைய பாதையில் செல்வதையும் தடுக்கின்றனர். நிச்சயமாக அவர்கள் செய்யும் காரியம் மிகவும் கெட்டது.

தஃப்ஸீர்

9.9. அல்லாஹ்வின் வசனங்களைப் பின்பற்றுவதற்குப் பகரமாக, அவற்றில் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதும் உள்ளடங்கும், தங்களின் மனஇச்சையைத் தீர்த்துக்கொள்ளும் இவ்வுலகின் அற்ப ஆதாயத்தைப் பெற்றுக் கொண்டார்கள். எனவேதான் அவர்கள் சத்தியத்தைப் பின்பற்றுவதை விட்டு தம்மையும் தடுத்து அதனைப் புறக்கணித்து மற்றவர்களையும் அதனை விட்டுத் தடுத்தார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகவும் மோசமான காரியமாகும்.