مَّآ أَصَابَكَ مِنۡ حَسَنَةٖ فَمِنَ ٱللَّهِۖ وَمَآ أَصَابَكَ مِن سَيِّئَةٖ فَمِن نَّفۡسِكَۚ وَأَرۡسَلۡنَٰكَ لِلنَّاسِ رَسُولٗاۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدٗا ٧٩
79. மேலும், (இவ்வாறு கூறுகின்றவனை நோக்கி) ‘‘உனக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்வினால் ஏற்பட்டது'' என்றும் ‘‘உனக்கு ஒரு தீங்கேற்பட்டால் அது (நீ இழைத்த குற்றத்தின் காரணமாக) உன்னால்தான் வந்தது'' (என்றும் கூறுவீராக. நபியே!) நாம் உம்மை ஒரு தூதராகவே மனிதர்களுக்கு அனுப்பியிருக்கிறோம். (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கிறான்.
தஃப்ஸீர்
4.79. ஆதமுடைய மகனே! உனக்கு கிடைக்கக்கூடிய செல்வங்கள், குழந்தைகள் போன்ற இன்பங்கள் அல்லாஹ்விடமிருந்தே உனக்குக் கிடைப்பவையாகும். அது அல்லாஹ் உன்மீது பொழியும் அருளாகும். அவற்றில் உனக்கு வரக்கூடிய துன்பங்கள் நீ செய்த பாவங்களினால் ஏற்பட்ட விளைவேயாகும். தூதரே! மனிதர்கள் அனைவருக்கும் அல்லாஹ்விடமிருந்து தூதுச் செய்தியை எடுத்துரைக்கும் தூதராக நாம் உம்மை அனுப்பியுள்ளோம். அல்லாஹ்விடமிருந்து எடுத்துரைப்பவற்றில் நீர் உண்மையாளரே என்பதற்கு அல்லாஹ்வே போதுமான சாட்சியாளன். அவன் உமக்கு அதற்கான ஆதாரங்களையும் சான்றுகளையும் வழங்கியுள்ளான்.