ஸூரா An-Nisa, வசனம் 78

4:78

أَيۡنَمَا تَكُونُواْ يُدۡرِككُّمُ ٱلۡمَوۡتُ وَلَوۡ كُنتُمۡ فِي بُرُوجٖ مُّشَيَّدَةٖۗ وَإِن تُصِبۡهُمۡ حَسَنَةٞ يَقُولُواْ هَٰذِهِۦ مِنۡ عِندِ ٱللَّهِۖ وَإِن تُصِبۡهُمۡ سَيِّئَةٞ يَقُولُواْ هَٰذِهِۦ مِنۡ عِندِكَۚ قُلۡ كُلّٞ مِّنۡ عِندِ ٱللَّهِۖ فَمَالِ هَٰٓؤُلَآءِ ٱلۡقَوۡمِ لَا يَكَادُونَ يَفۡقَهُونَ حَدِيثٗا ٧٨

78. நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; மிகப் பலமான உயர்ந்த (கோட்டை) கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்தபோதிலும் சரியே! (நபியே! உமது கட்டளைப்படி போருக்குச் சென்ற) அவர்களை ஒரு நன்மை அடையும் பட்சத்தில் ‘‘இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது'' எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டு விட்டாலோ ‘‘(நபியே!) இது உம்மால்தான் (எங்களுக்கு ஏற்பட்டது)'' எனக் கூறுகின்றனர். (ஆகவே,) நீர் கூறுவீராக: ‘‘(நானாக என் இஷ்டப்படி உங்களுக்குக் கட்டளையிடவில்லை. அல்லாஹ் அறிவித்தபடியே நான் உங்களுக்கு கட்டளையிட்டேன். ஆகவே,) அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றன. இவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எவ்விஷயத்தையுமே இவர்கள் அறிந்து கொள்வதில்லையே!

தஃப்ஸீர்

4.78. நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கான தவணை வந்துவிட்டால் மரணம் உங்களை அடைந்தே தீரும், நீங்கள் போர்க்களத்தைவிட்டு வெகுதூரமாக பாதுகாப்பான கோட்டையில் இருந்தாலும் சரியே. இந்த நயவஞ்சகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய அதிகமான வாழ்வாதாரமும் குழந்தைகளும் வழங்கப்பட்டால், “இவை அல்லாஹ்விடமிருந்து கிடைத்தவைதாம்” என்று கூறுகிறார்கள். ஆனால் தங்களின் குழந்தைகளிலோ வாழ்வாதாரத்திலோ துன்பம் ஏற்பட்டுவிட்டால், நபியவர்களினால்தான் இந்த துரதிஷ்டம் ஏற்பட்டது எனக்கருதி “இந்த தீமைகள் உம்மால் ஏற்பட்டதுதான்” என்று கூறுகிறார்கள். தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “இன்பங்களும் துன்பங்களும் அல்லாஹ் ஏற்படுத்திய விதிகள்தாம். அனைத்தும் அவனிடமிருந்தே ஏற்பட்டது.” இவ்வாறு பேசும் இந்த மக்களுக்கு ஏன் நீர் கூறும் எதுவும் புரிவதாகத் தெரியவில்லை?.