۞ وَمَن يُهَاجِرۡ فِي سَبِيلِ ٱللَّهِ يَجِدۡ فِي ٱلۡأَرۡضِ مُرَٰغَمٗا كَثِيرٗا وَسَعَةٗۚ وَمَن يَخۡرُجۡ مِنۢ بَيۡتِهِۦ مُهَاجِرًا إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ يُدۡرِكۡهُ ٱلۡمَوۡتُ فَقَدۡ وَقَعَ أَجۡرُهُۥ عَلَى ٱللَّهِۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا ١٠٠
100. (இத்தகைய நிலைமையில்) அல்லாஹ்வுடைய பாதையில் (தான் இருந்த இடத்தைவிட்டு) எவர் வெளியேறி விடுகிறாரோ, அவர் பூமியில் வசதியான பல இடங்களையும், சௌகரியத்தையும் அடைவார். எவரேனும் தன் இல்லத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்வின் பக்கமும், அவனுடைய தூதரின் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் வழியில் இறந்துவிட்டால் அவருடைய வெகுமதி நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகிறது. (ஏனெனில்,) அல்லாஹ் மிக மன்னிப்பவனாக, மிகக் கருணையாளனாக இருக்கிறான்.
தஃப்ஸீர்
4.100. யார் நிராகரிப்பாளர்கள் வசிக்கும் ஊரிலிருந்து அல்லாஹ்வின் திருப்தியை நாடியவராக இஸ்லாமிய நாட்டினை நோக்கிப் புலம்பெயர்ந்தவராகப் புறப்பட்டாரோ அவர் புலம்பெயரும் பூமியில் அவர்விட்டுவந்த இடத்தை விட மாற்றமான இடத்தை கண்டுகொள்வார். அங்கு கண்ணியத்தையும் விசாலமான வாழ்வாதாரத்தையும் பெறுவார். யார் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோக்கி புலம்பெயர்ந்தவராகப் புறப்பட்டு பின்னர் அந்த இடத்தை அடைவதற்கு முன்னரே அவருக்கு மரணம் நேர்ந்துவிட்டால் அல்லாஹ்விடம் அவருக்கு கூலி உறுதியாகிவிட்டது. அவர் புலம்பெயர நாடிய இடத்தை அடையாததால் அவருக்கு எந்த இழப்பும் இல்லை. தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.