ஸூரா An-Nahl, வசனம் 44

16:44

بِٱلۡبَيِّنَٰتِ وَٱلزُّبُرِۗ وَأَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلذِّكۡرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيۡهِمۡ وَلَعَلَّهُمۡ يَتَفَكَّرُونَ ٤٤

44. அத்தூதர்களுக்கும் தெளிவான அத்தாட்சிகளையும், வேதங்களையும் (கொடுத்து அனுப்பினோம்). அப்படியே இந்தக் குர்ஆனையும் (நபியே!) நாம் உமக்கு இறக்கி வைத்தோம். மனிதர்களுக்காக (உம்மீது) இறக்கப்பட்ட இதை நீர் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிப்பீராக. (இதன் மூலம்) அவர்கள் கவனித்தறிந்து கொள்வார்கள்.

தஃப்ஸீர்

16.44. மனிதர்களிலுள்ள இந்த தூதர்களை நாம் தெளிவான ஆதாரங்களைக் கொண்டும் இறக்கப்பட்ட வேதங்களைக் கொண்டும் அனுப்பினோம். -தூதரே!- குர்ஆனில் விளக்கம் தேவையானவற்றை நீங்கள் விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் தமது சிந்தனையைச் செயற்படுத்தி, அதிலுள்ளவற்றின் மூலம் அறிவுரை பெற வேண்டும் என்பதற்காகவும் நாம் உம் மீது அதனை இறக்கியுள்ளோம்.