ஸூரா An-Nahl, வசனம் 45

16:45

أَفَأَمِنَ ٱلَّذِينَ مَكَرُواْ ٱلسَّيِّـَٔاتِ أَن يَخۡسِفَ ٱللَّهُ بِهِمُ ٱلۡأَرۡضَ أَوۡ يَأۡتِيَهُمُ ٱلۡعَذَابُ مِنۡ حَيۡثُ لَا يَشۡعُرُونَ ٤٥

45. தீங்கிழைக்க சூழ்ச்சிகள் செய்கின்ற இவர்களைப் பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்யமாட்டான் என்றோ அல்லது இவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் இவர்களை வேதனை வந்தடையாது என்றோ இவர்கள் அச்சமற்று இருக்கின்றனரா?

தஃப்ஸீர்

16.45. அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக பல் வேறு சூழ்ச்சிகள் செய்தவர்கள், காரூனைப் பூமியில் புதையச் செய்தததைப் போல அவர்களையும் பூமியில் அல்லாஹ் புதையச் செய்திடுவான் அல்லது அவர்கள் அறியாத புறத்திலிருந்து வேதனை அவர்களை வந்தடையும் என்பதில் அச்சமற்று உள்ளனரா?