ஸூரா An-Nahl, வசனம் 43

16:43

وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ إِلَّا رِجَالٗا نُّوحِيٓ إِلَيۡهِمۡۖ فَسۡـَٔلُوٓاْ أَهۡلَ ٱلذِّكۡرِ إِن كُنتُمۡ لَا تَعۡلَمُونَ ٤٣

43. (நபியே!) உமக்கு முன்னர் வஹ்யி அறிவித்து நாம் அவர்களிடம் அனுப்பிவைத்த தூதர்களெல்லாம் ஆடவர்கள்தான். ஆகவே, (இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (இதை) அறிந்து கொள்ளாமலிருந்தால் (முந்திய வேதங்களைக்) கற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்'' (என்று கூறுவீராக.)

தஃப்ஸீர்

16.43. -தூதரே!- உமக்கு முன்னர் நாம் மனிதர்களில் ஆண்களையே தூதர்களாக்கி அவர்களுக்கு வஹி அறிவித்தோம். வானவர்களை நாம் தூதர்களாக அனுப்பவில்லை. இதுதான் நம்முடைய வழமையான வழிமுறை. நீங்கள் இதனை மறுப்பவர்களாக இருந்தால், அவர்கள் மனிதர்களாகத்தான் இருந்தார்கள் என்பதை அறியாதவர்களாக இருந்தால் முன்னர் வேதம் வழங்கப்பட்டோரிடம் கேட்டுப் பாருங்கள். தூதர்கள் மனிதர்களாகத்தான் இருந்தார்கள், வானவர்களாக இருக்கவில்லை என்பதை அவர்கள் உங்களுக்கு அறிவிப்பார்கள்.