ஸூரா Al-Mursalat, வசனம் 23

77:23

فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ ٢٣

23. பின்னர் நாமே அதை (மனிதனாகவும்) நிர்ணயம் செய்தோம். நிர்ணயம் செய்பவர்களில் நாமே மிக மேலானோர்.

தஃப்ஸீர்

77.23. குழந்தையின் பண்பு, அளவு, நிறம் மற்றும் இன்னபிறவற்றையும் நாம் நிர்ணயித்தோம். அவையனைத்தையும் நிர்ணயம் செய்யும் நாமே சிறந்தவர்களாகிவிட்டோம்.