ஸூரா Al-Ma'idah, வசனம் 5

5:5

ٱلۡيَوۡمَ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَٰتُۖ وَطَعَامُ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ حِلّٞ لَّكُمۡ وَطَعَامُكُمۡ حِلّٞ لَّهُمۡۖ وَٱلۡمُحۡصَنَٰتُ مِنَ ٱلۡمُؤۡمِنَٰتِ وَٱلۡمُحۡصَنَٰتُ مِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكُمۡ إِذَآ ءَاتَيۡتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحۡصِنِينَ غَيۡرَ مُسَٰفِحِينَ وَلَا مُتَّخِذِيٓ أَخۡدَانٖۗ وَمَن يَكۡفُرۡ بِٱلۡإِيمَٰنِ فَقَدۡ حَبِطَ عَمَلُهُۥ وَهُوَ فِي ٱلۡأٓخِرَةِ مِنَ ٱلۡخَٰسِرِينَ ٥

5. (நம்பிக்கையாளர்களே!) இன்றுமுதல் நல்லவை அனைத்தும் உங்களுக்கு (உண்பதற்கு) ஆகுமாக்கப்பட்டு விட்டன. வேதத்தை உடையவர்களின் உணவும் உங்களுக்கு ஆகுமானதே! உங்கள் உணவும் அவர்களுக்கு ஆகுமானதே! நம்பிக்கை கொண்ட கற்புடைய பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட கற்புடைய பெண்களையும், விபச்சாரிகளாகவோ வைப்பாட்டிகளாகவோ கொள்ளாமல், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மஹர்களையும் கொடுத்து (திருமணம் செய்து) கொள்வது (உங்களுக்கு ஆகும்). எவன் நம்பிக்கை கொண்டதன் பின்னர் (இந்த சட்டங்களை) நிராகரிக்கிறானோ அவனுடைய நற்செயல்கள் நிச்சயமாக அழிந்துவிடும். மறுமையிலோ அவன் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களில்தான் இருப்பான்.

தஃப்ஸீர்

5.5. இன்றைய தினம் சுவையானவற்றை உண்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுவிட்டது. வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களால் அறுக்கப்பட்டவற்றை நீங்களும் நீங்கள் அறுத்தவற்றை அவர்களும் உண்ணலாம். நீங்கள் மணக்கொடை அளித்து விபச்சாரத்தில் ஈடுபடாமலும் வைப்பாட்டிகள் வைத்துக்கொள்ளாமலும் இருந்தால் சுதந்திரமான கற்பொழுக்கமுள்ள, முஃமினான பெண்களையும் உங்களுக்கு முன்னால் வேதம் வழங்கப்பட்ட யூத மற்றும் கிருஸ்தவப் பெண்களில் சுதந்திரமான, கற்பொழுக்கமுள்ளவர்களையும் மணமுடித்துக்கொள்ளலாம். அல்லாஹ் தன் அடியார்களுக்கு வழங்கிய சட்டங்களை நிராகரிப்பவரின் அமல்கள் யாவும், அவை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனையான ஈமானை இழந்ததனால் வீணாகிவிடும். அவர் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடக்க வேண்டும் என்பதனால் மறுமை நாளில் நஷ்டமடைந்தவராவார்.