ஸூரா Al-Isra, வசனம் 61

17:61

وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ قَالَ ءَأَسۡجُدُ لِمَنۡ خَلَقۡتَ طِينٗا ٦١

61. வானவர்களை நோக்கி, ‘‘ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்'' என நாம் கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (வானவர்கள் அனைவரும் அவருக்குச்) சிரம் பணிந்தார்கள். அவனோ ‘‘நீ மண்ணால் படைத்தவனுக்கு நான் சிரம் பணிவதா?'' என்று கேட்டான்.

தஃப்ஸீர்

17.61. -தூதரே!- நாம் வானவர்களிடம், “ஆதமுக்கு முகமன் கூறும் விதமாக (வணங்கும் விதமாக அல்லாமல்) அவருக்கு சிரம்பணியுங்கள்” என்று கூறியதை நினைவு கூர்வீராக. அவர்கள் அனைவரும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஆதமுக்கு சிரம்பணிந்தார்கள். ஆனால் இப்லீஸ் கர்வத்தினால் சிரம்பணிய மறுத்துவிட்டான். “நீ மண்ணால் படைத்த மனிதனுக்கு நான் சிரம்பணிவதா? என்னை நீ நெருப்பால் படைத்துள்ளாய். நான் அவனைவிட சிறந்தவன்” என்று கூறினான்.