قَالَ أَرَءَيۡتَكَ هَٰذَا ٱلَّذِي كَرَّمۡتَ عَلَيَّ لَئِنۡ أَخَّرۡتَنِ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَأَحۡتَنِكَنَّ ذُرِّيَّتَهُۥٓ إِلَّا قَلِيلٗا ٦٢
62. (மேலும், இறைவனை நோக்கி) ‘‘என்னைவிட நீ கௌரவப்படுத்தி இருப்பவர் இவரல்லவா என்பதை நீ கவனித்தாயா?'' (என்று ஏளனமாக ஆதமைச் சுட்டிக் காண்பித்து) ‘‘நீ என்னை மறுமை நாள் வரை பிற்படுத்தி வைத்தால் வெகு சிலரைத் தவிர இவருடைய சந்ததிகள் அனைவரையும் நான் வழிகெடுத்து (வேரறுத்து) விடுவேன்'' என்று கூறினான்.
தஃப்ஸீர்
17.62. இப்லீஸ் தன் இறைவனிடம் கூறினான்: “நீ எனக்கு சிரம்பணியுமாறு கட்டளையிட்டு கௌரவித்த இந்தப் படைப்பை நீ பார்த்தாயா? இந்த உலக வாழ்வின் இறுதிவரை உயிருடன் என்னை வாழவைத்தால், அவரது சந்ததியினரை கவர்ந்திழுத்து நேரான பாதையை விட்டும் நெறிபிறழச் செய்வேன். அவர்களில் நீ பாதுகாத்த சிலரைத் தவிர. அவர்களே உனது தூய்மையான அடியார்கள்.”