كَيۡفَ تَكۡفُرُونَ بِٱللَّهِ وَكُنتُمۡ أَمۡوَٰتٗا فَأَحۡيَٰكُمۡۖ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يُحۡيِيكُمۡ ثُمَّ إِلَيۡهِ تُرۡجَعُونَ ٢٨
(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை எப்படி நிராகரிக்கிறீர்கள்? உயிரற்றவர்களாக இருந்த உங்களை அவனே உயிர்ப்பித்தான். பின்னும் அவனே உங்களை மரணிக்கச் செய்வான். பின்னும் அவனே உங்களை உயிர்ப்பிப்பான். அதன் பின்னும் நீங்கள் (உங்கள் செயல்களுக்குரிய கூலியை அடைவதற்காக) அவனிடமே (விசாரணைக்கு) திரும்ப கொண்டு வரப்படுவீர்கள்.
தஃப்ஸீர்
2.28. நிராகரிப்பாளர்களே! உங்களின் விஷயம் ஆச்சரியமானது. அல்லாஹ்வை எப்படித்தான் மறுக்கிறீர்கள்!? அவனுடைய வல்லமைக்குரிய சான்றுகளை உங்களுக்குள்ளும் நீங்கள் காண்கிறீர்களே!? ஒன்றும் இல்லாத நிலையில் நீங்கள் இருந்தீர்கள். அவன்தான் உங்களைப் படைத்து உங்களுக்கு உயிரளித்தான். பின்னர் மீண்டும் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் மீண்டும் உங்களுக்கு உயிர்கொடுப்பான். நீங்கள் செய்த செயல்களுக்கு அவன் உங்களிடம் விசாரணை செய்வதற்காக அவனிடமே நீங்கள் திரும்ப வேண்டும்.