هُوَ ٱلَّذِي خَلَقَ لَكُم مَّا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا ثُمَّ ٱسۡتَوَىٰٓ إِلَى ٱلسَّمَآءِ فَسَوَّىٰهُنَّ سَبۡعَ سَمَٰوَٰتٖۚ وَهُوَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ٢٩
29. அவன்தான் (பூமியையும்) பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பிறகு, அவன் வானத்திற்கு மேல் (தன் தகுதிக்குத் தக்கவாறு) உயர்ந்து அதை ஏழு வானங்களாக அமைத்தான். மேலும், (அவற்றிலும் அகிலத்திலும் உள்ள) அனைத்தையும் அவன் நன்கறிந்தவன் ஆவான்.
தஃப்ஸீர்
2.29. பூமியிலுள்ள ஆறுகள், மரங்கள் மற்றும் எண்ண முடியாத எத்தனையோ படைப்பினங்களை அல்லாஹ் ஒருவனே உங்களுக்காகப் படைத்திருக்கிறான். அவன் உங்களுக்கு வசப்படுத்தித் தந்ததை அனுபவித்து அவற்றின் மூலம் பயனடைகிறீர்கள். பின்னர் வானத்தைப் படைக்க விரும்பி, அதனை சமமான ஏழு வானங்களாகப் படைத்தான். அவனது அறிவு ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்துள்ளது.