ஸூரா Al-Baqarah, வசனம் 27

2:27

ٱلَّذِينَ يَنقُضُونَ عَهۡدَ ٱللَّهِ مِنۢ بَعۡدِ مِيثَٰقِهِۦ وَيَقۡطَعُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ ٢٧

27. அல்லாஹ்விடத்தில் (இவர்கள்) செய்த உடன்படிக்கையை இவர்கள் உறுதிப்படுத்திய பின்னும் அதை முறித்து விடுகின்றனர். எ(ந்த இரத்த சொந்தத்)தைச் சேர்த்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளையிட்டானோ அதைப் பிரித்தும் விடுகின்றனர். பூமியில் விஷமம் செய்துகொண்டும் இருக்கின்றனர். இவர்கள்தான் நஷ்டமடைந்தவர்கள்.

தஃப்ஸீர்

2.27. தன்னை மட்டுமே வணங்குமாறும், முன் சென்ற தூதர்கள் அறிவித்துவிட்டுச் சென்ற தனது தூதரைப் பின்பற்றுமாறும் அல்லாஹ் அவர்களிடம் செய்த உடன்படிக்கையை அவர்கள் முறித்துவிடுகிறார்கள். அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முறிக்கும் இவர்கள் அவன் சேர்ந்து வாழும்படி கட்டளையிட்ட இரத்த சொந்தங்களையும் துண்டித்துவிடுகிறார்கள். பாவங்களின் மூலம் பூமியில் குழப்பம் உண்டாக்க முயற்சி செய்கிறார்கள். இவர்கள்தாம் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நஷ்டமடைந்தவர்கள்.