وَٱلَّذِينَ يُتَوَفَّوۡنَ مِنكُمۡ وَيَذَرُونَ أَزۡوَٰجٗا يَتَرَبَّصۡنَ بِأَنفُسِهِنَّ أَرۡبَعَةَ أَشۡهُرٖ وَعَشۡرٗاۖ فَإِذَا بَلَغۡنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِيمَا فَعَلۡنَ فِيٓ أَنفُسِهِنَّ بِٱلۡمَعۡرُوفِۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ٢٣٤
234. உங்களில் எவரேனும் மனைவிகளை விட்டு இறந்தால், (அம்)மனைவிகள் நான்கு மாதம் பத்து நாட்கள் (இத்தா முடிவதை) எதிர்பார்த்திருக்கவும். (இதற்கு ‘மரண இத்தா' என்று பெயர்.) ஆதலால், அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை முடித்து விட்டால் (அவர்களில் மறுமணம் செய்ய விருப்பமுள்ளவர்கள்) தங்களை ஒழுங்கான முறையில் (அலங்காரம்) ஏதும் செய்து கொள்வதைப் பற்றி குற்றமில்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிவான்.
தஃப்ஸீர்
2.234. உங்களில் மரணமடைகின்றவர்களின் மனைவியர் கர்ப்பம் தரிக்காமல் இருந்தால் நான்கு மாதங்களும், பத்துநாட்களும் கட்டாயமாக காத்திருக்க வேண்டும். அந்த காலஇடைவெளியில் அவள் கணவனின் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது; தன்னை அலங்கரித்துக்கொள்ளவோ மணமுடித்துக்கொள்ளவோ கூடாது. அந்தத் தவணையை நிறைவுசெய்துவிட்டால், அவர்கள் மீது தடைசெய்யப்பட்டிருந்தவற்றை மார்க்கவரையறைக்குட்பட்டு செய்தால் பொறுப்பாளர்களே! உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்யக்கூடியவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். வெளிப்படையான, அந்தரங்கமான உங்களுடைய செயல்கள் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்கிடுவான்.