ஸூரா Al-Baqarah, வசனம் 212

2:212

زُيِّنَ لِلَّذِينَ كَفَرُواْ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا وَيَسۡخَرُونَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْۘ وَٱلَّذِينَ ٱتَّقَوۡاْ فَوۡقَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ وَٱللَّهُ يَرۡزُقُ مَن يَشَآءُ بِغَيۡرِ حِسَابٖ ٢١٢

212. நிராகரிப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையே அலங்காரமாக(த் தோன்றும்படி) செய்யப்பட்டிருக்கிறது. ஆதலால், அவர்கள் (ஏழைகளாக இருக்கும்) நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கிறார்கள். ஆனால், (நம்பிக்கையாளர்களான) இறையச்சம் உள்ளவர்களோ மறுமையில் அவர்களைவிட (எவ்வளவோ) மேலாக இருப்பார்கள். மேலும், அல்லாஹ் விரும்புகின்ற (இ)வர்களுக்குக் கணக்கின்றியே வழங்குவான்.

தஃப்ஸீர்

2.212. அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையும் அதிலுள்ள அழியக்கூடிய இன்பங்களும் அழகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர்களை பரிகாசம் செய்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் இந்த நிராகரிப்பாளர்களைவிட மறுமையில் உயர்ந்தநிலையில் இருப்பார்கள். அல்லாஹ் அவர்களை நிலையான சுவனங்களில் தங்கச் செய்வான். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு கணக்கின்றி வழங்குகிறான்.